'ஆன்லைன்' பதிவு துவங்கிய முதல் நாளில் குழப்பம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஆன்லைன்' பதிவு துவங்கிய
முதல் நாளில் குழப்பம்

'ஆன்லைன்' முறையிலான பத்திரப்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே, இணையதளத்தின் வேகம் குறைந்ததால், பதிவு பணிகள் முடங்கின.

ஆன்லைன் பத்திரப்பதிவு, முதல்வர் பழனிசாமி,சார் பதிவாளர் அலுவலகம், ஸ்டார் 0.2 சாப்ட்வேர், தமிழக அரசு , பத்திரப்பதிவு குழப்பம்,  
Online registration, Chief Minister of Palanisamy, Star 0.2 software, Tamilnadu Government, registration confusing, sub Registrar Office,


தமிழகத்தில், அனைத்து சார் - பதிவாளர் அலுவலகங்களிலும், ஆன்லைன் பத்திரப்பதிவு கட்டாயமாகி உள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம், தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துவக்கி வைத்தார்.

இது, நடைமுறைக்கு வந்த, முதல் நாளான நேற்று, மாநிலம் முழுவதும், பத்திரப்பதிவுபணிகள் பாதிக்கப்பட்டன.இது குறித்து, தமிழ்நாடு பத்திரம், நகல் எழுதுவோர் சங்க, மாநில பொதுச்செயலர், கண்ணன் கூறியதாவது:பதிவுத்துறை அதிகாரிகள், அனைத்து ஏற்பாடுகளும் தயார் எனக்கூறி, இத்திட்டத்தை துவக்கினர்.

ஆனால், சோதனை முறையில் செயல்பாட்டில் இருந்த, சார் - பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமே, பத்திரங்களை பதிய முடிந்தது; மற்ற இடங்களில் பணிகள் முடங்கின. சார் - பதிவாளர் அலுவலகங்களில் மட்டுமின்றி, ஆவண எழுத்தர்களும், பொது மக்களும், ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது, அதற்கேற்ப இணையதளம் வேகமாக இயங்க வேண்டும்.


ஆனால், 'ஸ்டார் - 0.2' சாப்ட்வேர் உடனான, புதிய இணையதளத்தின் வேகம் குறைவால், தகவல் உள்ளீடு நிலையிலேயே பணிகள் முடங்கின. இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்தபின், திட்டத்தை செயல்படுத்துவது சரியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த, ஆவண எழுத்தர், அசோக் கூறுகையில், ''தாம்பரம், பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில், வில்லங்கசான்றுக்கான விண்ணப்பத்தை கூட, கணினியில் பதிய முடியாமல், சார் - பதிவக ஊழியர்கள் திணறுகின்றனர். ''இணையதளம் முடக்கம் என்று கூறி, பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்,'' என்றார்.

இது குறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த முதல் நாளில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து, புகார்கள் வருகின்றன.அதற்கு தீர்வு காண, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இணையதள வேகம் உள்ளிட்ட நடைமுறை பிரச்னைகள் குறித்து, உயர் அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர்; விரைவில் தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வழக்கறிஞர்களுக்கு அரசு வேண்டுகோள்


'பத்திரப்பதிவு அலுவலகங்களில் அறிமுகம் ஆகியுள்ள, 'ஆன்லைன்' பத்திரப்பதிவு சேவையை, மக்களுக்கு எடுத்துச் செல்ல, வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்' என, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, நேற்று வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பு: பதிவுத்துறை அலுவலகங்களில், வெளிப்படைத்தன்மை ஏற்பட, 'ஆன்லைன்' என்ற, இணைய வழி பத்திரப்பதிவு முறை துவங்கப்பட்டுள்ளது.

Advertisement


அதற்காக, www.tnreginet.gov.in என்ற, புதிய இணையதளத்தை, முதல்வர் துவக்கி வைத்துள்ளார். வழக்கறிஞர்கள், மக்களிடம் நெருங்கிய உறவு வைத்துள்ளனர். பொதுமக்கள், சொத்து வாங்குவதற்கு முன், அவை, சட்ட விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை அறிய, வழக்கறிஞர்களை நாடுகின்றனர். பலர், அவர்களிடமே ஆவணங்களை தயார் செய்கின்றனர்.

வழக்கறிஞர்களின் பணிகளை எளிமைப்படுத்தவும், அவர்களுக்கு தேவைப்படும் சான்றுகளைஉடனுக்குடன் தவறின்றி வழங்கவும், புதிய மென்பொருளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, ஒரே நேரத்தில் பதிவு செய்யப்படும் ஆவணங்களான, கட்டுமான உடன்படிக்கை, பிரிபடாத சொத்து கிரையம் மற்றும் உரிமை ஒப்படைப்பு ஆவணம் ஆகியவற்றை, ஒருசேர உருவாக்கவும், பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், பல வசதிகள் உள்ளதால், பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு, நேரடியாக செல்வது குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 1800 1025174 என்ற, கட்டணமில்லா சேவை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய இணையதளத்தை பயன்படுத்தி, வழக்கறிஞர்கள், ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - coimbatore,இந்தியா
15-பிப்-201809:32:04 IST Report Abuse

balakrishnanநவீன தொழில்நுட்பம் நிறைந்துள்ள இந்த சூழலில், அதற்கு தகுந்தாற் போல சிறந்த மென்பொருளை அறிமுகப்படுத்த வேண்டும், இந்த ஈ பில் சேவையும் இப்படித்தான் ஆரம்பித்த அரைமணி நேரத்தில் முடங்கிவிட்டது, பேசுறது மட்டும், உலக நியாயம் பேசுவாங்க

Rate this:
Gopi - Chennai,இந்தியா
14-பிப்-201817:30:43 IST Report Abuse

Gopiமிக நல்ல வாய்ப்பு. இதை நன்றாக செயல்படுத்தினால் மேலும் வெளிப்படை மற்றும் கொடுக்கல் வாங்கலில் தெளிவு பிறக்கும்

Rate this:
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
14-பிப்-201812:29:28 IST Report Abuse

தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர்இன்னும் நமது ரயில்வே துறையில் கூட இணைய தளம் மூலம் டிக்கெட் பெறுவது பல சமயங்களில் சிக்கலை தருகிறது. பத்துக்கு ஒரு முறை.... குறிப்பாக NEFT மூலம் பணம் செலுத்தியபின் வங்கிக்கணக்கில் பாலன்ஸ் குறைந்து விடும் ஆனால் புக்கிங் பெயிலியர் என்று செய்தி வரும். மீண்டும் டிக்கெட் புக் செய்வதற்குள் டிக்கெட் காலியாகி விடும். டிக்கெட்டும் போச்சா.. அதே சமயம் செலுத்திய பணத்தை திரும்ப பெறுவதற்கு கடும் போராட்டம். .. நேற்று நான் டெல்லி - சென்னை விமான பயணத்திற்கு ஐ ஆர் சி டி சி மூலம் டிக்கெட்பதிவு செய்தேன் .. பணம் போய்விட்டது ஆனால் டிக்கெட் வரவில்லை . இது போன்ற குளறுபடிகள் திரும்ப திரும்ப வருகின்றன . இவற்றை சரி செய்தே ஆகவேண்டும் .. இல்லையேல் மீண்டும் ஒரு தோல்வித்திட்டம் அரங்கேறும்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X