ஜெயலலிதா மரணம்: டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜர் - Jayalalitha | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரணம்: டாக்டர் பாலாஜி மீண்டும் ஆஜர்

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 14, 2018
Advertisement
ஜெயலலிதா மரணம், டாக்டர் பாலாஜி, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், ஜெயலலிதா கைரேகை , ஜெயலலிதா சிகிச்சை, Jayalalithaa death, Dr. Balaji, Arumugam Asi inquiry commission, Jayalalitha fingerprint, Jayalalitha treatment,

சென்னை : ஜெ., மரண விசாரணை கமிஷனில், மூன்றாவது முறையாக ஆஜரான, அரசு மருத்துவர், பாலாஜியிடம், நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது. 'சுகாதாரத் துறை செயலர் வாய்மொழியாகக் கூறியதன் அடிப்படையில், ஜெ., கைரேகையை பதிவு செய்தேன்' என, அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணை கமிஷன்ஜெ., மரணம் குறித்து விசாரித்து வரும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அரசு மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஜெ., உறவினர்கள், சசிகலா உறவினர்கள் என, பல தரப்பினரிடம், விசாரணை நடத்தி வருகிறது.ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்தது.அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, அங்கீகாரப் படிவத்தில், ஜெ., கையெழுத்திற்கு பதிலாக, அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது.அந்த கைரேகை, அரசு மருத்துவர் பாலாஜி முன்னிலையில் பெறப்பட்டது. ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் யாரும், ஜெ.,வை சந்திக்கவில்லை.

சிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த, மருத்துவக் குழுவில் இருந்த, அரசு மருத்துவர்களும், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் கூறியுள்ளனர்.இந்த சூழ்நிலையில், ஜெ.,வை சந்தித்ததாக, அரசு மருத்துவர் பாலாஜி மட்டும் கூறினார்.ஆனால்,'வேட்பாளர் அங்கீகாரக் கடிதத்தில் உள்ள ரேகை பதிவு, ஜெ., உயிரோடு இருந்த போது பெறப்பட்டதல்ல' என, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, டாக்டர் சரவணன் குற்றம் சாட்டி உள்ளார்.எனவே, ஜெ., மரணம் தொடர்பான விசாரணைக்கு, டாக்டர் பாலாஜி வரவழைக்கப்பட்டார். அவரிடம் ஏற்கனவே, இரண்டு நாட்கள் விசாரணை நடந்த நிலையில், நேற்று, மூன்றாவது நாளாக, விசாரணைக்கு ஆஜரானார்.காலை, 10:30 மணிக்கு விசாரணை துவங்கி, பகல், 1:30 மணிக்கு நிறைவு பெற்றது. 'யார் கூறியபடி, ஜெ.,வின் கைரேகையை பதிவு செய்தீர்கள்' என்பது உட்பட, பல கேள்விகளை, அவரிடம் நீதிபதி கேட்டுள்ளார்.
முரண்பாடு இல்லைஇதற்கு பதில் அளித்த பாலாஜி, 'யாரிடம் இருந்தும், கைரேகையை பதிவு செய்யும்படி, கடிதம் வரவில்லை. சுகாதாரத் துறை செயலர் வாய்மொழி உத்தரவின்படி, நான் நேரடியாகச் சென்று, ஜெ., கைரேகையை பதிவு செய்தேன்' எனக் கூறியதாக தெரிகிறது.'ஒரு முதல்வரின் கைரேகையை பதிவு செய்ய, எழுத்துப்பூர்வமாக ஏன் கடிதம் பெறவில்லை' என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.விசாரணை குறித்து, டாக்டர் பாலாஜி கூறுகையில், ''ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, நீதிபதி சில கேள்விகள் கேட்டார்; அதற்கு பதில் அளித்தேன். கைரேகை தொடர்பாக, எதுவும் கேட்கவில்லை. ஜெ., இறப்பில், எந்த முரண்பாடும் இல்லை,'' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X