பா.ஜ., புதிய தலைமையகம் 18ல் பிரதமர் மோடி திறக்கிறார் Dinamalar
பதிவு செய்த நாள் :
பா.ஜ., புதிய தலைமையகம்
18ல் பிரதமர் மோடி திறக்கிறார்

பா.ஜ., புதிய தலைமையகத்தை, பிரதமர் நரேந்திர மோடி, டில்லியில், 18ல் திறந்து வைக்கிறார்.

B.J.P,BJP,Bharatiya Janata Party,Modi,Narendra modi,நரேந்திர மோடி,பா.ஜ,மோடி


மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையகம், டில்லியின், அசோகா சாலையில் அமைந்துள்ளது. கடந்த, காங்., ஆட்சியின் போது, அனைத்து கட்சி களுக்கும் தலைமையகம் கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்டது.

அதன்படி, தற்போதைய தலைமையகத்தில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, தீனதயாள் உபாத்யாய் மார்க் சாலையில், பா.ஜ., புதிய தலைமையகம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த, 2016 ஆகஸ்டில், புதிய தலைமையகத்துக்கான அடிக்கல்லை, பிரதமர் மோடி நாட்டினார்.

பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய இந்த கட்டடத்தை, 18ல் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர், இதில் பங்கேற்க உள்ளனர்.மூன்று தளங்கள் மற்றும் ஏழு தளங்கள் என, இரு கட்டடங்கள் உடையதாக, புதிய தலைமையகம் அமைகிறது. இந்த கட்டங்களுக்கு நடுவில் ஒரு பூங்காவும், கட்சியின் தேர்தல் சின்னமான, தாமரையின் வடிவில் சிறிய குளமும் அமைக்கப்பட்டு உள்ளது.

மூன்று தளங்கள் உடைய, முக்கிய அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில், கட்சி தலைவருக்கும், பார்லிமென்டின், இரு சபைகளின் கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலர்களுக்கும் அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள, தன் அறையில் இருந்து, வளாகத்தில் உள்ள அனைத்து பகுதி களையும், அமித் ஷா பார்க்க முடியும். கட்சியின், எம்.பி.,க்கள் கூட்டம் நடத்துவதற்கான வசதியும், புதிய வளாகத்தில் உள்ளது. இங்கு, 450 பேர் மற்றும், 150 பேர் அமரக் கூடிய வசதியுடன் கூடிய, இரு கருத்தரங்க கூடங்கள் உள்ளன.

Advertisementகார்கள் நிறுத்துவதற்காக, தரைக்கு அடியில் இரண்டடுக்கு, 'பார்க்கிங்' வசதியும் செய்யப்பட்டு உள்ளது. பசுமை கட்டடமாக அமையும் வகையில், அதிக வெளிச்சம் கிடைக்கும் வகையில், அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சூரிய சக்தியை பயன்படுத்துவதற்கான வசதி, மேல்தளத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

மழைநீர் சேகரிப்பு வசதியும் செய்யப்பட்டு உள்ளது.அனைத்து மாநில தலைமை அலுவலகங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வசதியுடன், இந்த புதிய தலைமையகம் முழுவதும், 'வை - பை' வசதி செய்யப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-பிப்-201811:14:28 IST Report Abuse

Malick Rajaஏழை மக்கள் நிறைந்த நாட்டில் இப்படி வசதியாக கட்சி அலுவலகம் .. நாட்டின் கஜானா காலியானதின் ஒருபகுதிதான் இது . ரயில்வே பிளாட்பார டீக்கடை புகழை இப்படி ஆக்கியதின் விளைவு .. இது மட்டுமல்ல 2019.க்கு பிறகு எல்லாம் வெளிவரும் மோடிக்கு திகார் அறைக்கு சென்று வெளிவந்து கொண்டிருப்பார் நீதிமன்ற கட்டளைகளுக்கேற்ப .. ஆக கொள்ளைக்கார்கள் நாட்டை கொள்ளை அடித்ததை வெளிக்காண்பிப்பபதும் இயற்கையின் நியதியே ///

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-201822:49:06 IST Report Abuse

Mani . V"ஜீ, இது மக்களின் வரிப் பணம்தானே?" (இதை கேட்டால் ஆன்டி இன்டியன் என்று சொல்வீர்கள்).

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-பிப்-201822:43:33 IST Report Abuse

Pugazh Vஅநாகரிக கெட்ட வார்த்தைகள், அவமரியாதையான சொற்கள், கலாச்சாரமில்லாத பிரிவினைவாத பேச்சுக்கள், தலய வெட்டினா 2 கோடிபோன்ற கசாப்பு கடை கூவல்கள், வன்முறை மதவாத ஆசாமிகளுக்கு இவ்வளவு பெரிய கட்டிடம் லாம் ரெம்ப அதிகம். நாலு வருஷமா அடித்த பணத்தை இதில் போட்டுவிட்டார்கள் போல.

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X