ஜெ., மர்ம மரணம்: அரசு டாக்டர் கூறியது என்ன? Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., மர்ம மரணம்:
அரசு டாக்டர் கூறியது என்ன?

சென்னை : ஜெ., மரண விசாரணை கமிஷனில், மூன்றாவது முறையாக ஆஜரான, அரசு மருத்துவர், பாலாஜியிடம், நேற்று மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது. 'சுகாதாரத் துறை செயலர் வாய்மொழியாகக் கூறியதன் அடிப்படையில், ஜெ., கைரேகையை பதிவு செய்தேன்' என, அவர் தெரிவித்துள்ளார்.

A.D.M.K,Jayalalithaa,அ.தி.மு.க,ஜெயலலிதா


விசாரணை கமிஷன்


ஜெ., மரணம் குறித்து விசாரித்து வரும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், அரசு மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஜெ., உறவினர்கள், சசிகலா உறவினர்கள் என, பல தரப்பினரிடம், விசாரணை நடத்தி வருகிறது.

ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் நடந்தது.அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கான, அங்கீகாரப் படிவத்தில், ஜெ., கையெழுத்திற்கு பதிலாக, அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது.


அந்த கைரேகை, அரசு மருத்துவர் பாலாஜி முன்னிலையில் பெறப்பட்டது. ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் யாரும், ஜெ.,வை சந்திக்கவில்லை.

சிகிச்சையை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த, மருத்துவக் குழுவில் இருந்த, அரசு மருத்துவர்களும், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் கூறியுள்ளனர்.இந்த சூழ்நிலையில், ஜெ.,வை சந்தித்ததாக, அரசு மருத்துவர் பாலாஜி மட்டும் கூறினார்.

ஆனால்,'வேட்பாளர் அங்கீகாரக் கடிதத்தில் உள்ள ரேகை பதிவு, ஜெ., உயிரோடு இருந்த போது பெறப்பட்டதல்ல' என, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட, டாக்டர் சரவணன் குற்றம் சாட்டி உள்ளார்.

எனவே, ஜெ., மரணம் தொடர்பான விசாரணைக்கு, டாக்டர் பாலாஜி வரவழைக்கப்பட்டார். அவரிடம் ஏற்கனவே, இரண்டு நாட்கள் விசாரணை நடந்த நிலையில், நேற்று, மூன்றாவது நாளாக, விசாரணைக்கு ஆஜரானார்.

காலை, 10:30 மணிக்கு விசாரணை துவங்கி, பகல், 1:30 மணிக்கு நிறைவு பெற்றது. 'யார் கூறியபடி, ஜெ.,வின் கைரேகையை பதிவு செய்தீர்கள்' என்பது உட்பட, பல கேள்விகளை, அவரிடம் நீதிபதி கேட்டுள்ளார்.

Advertisement


முரண்பாடு இல்லை


இதற்கு பதில் அளித்த பாலாஜி, 'யாரிடம் இருந்தும், கைரேகையை பதிவு செய்யும்படி, கடிதம் வரவில்லை. சுகாதாரத் துறை செயலர் வாய்மொழி உத்தரவின்படி, நான் நேரடியாகச் சென்று, ஜெ., கைரேகையை பதிவு செய்தேன்' எனக் கூறியதாக தெரிகிறது.

'ஒரு முதல்வரின் கைரேகையை பதிவு செய்ய, எழுத்துப்பூர்வமாக ஏன் கடிதம் பெறவில்லை' என்ற கேள்விக்கு, அவர் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.விசாரணை குறித்து, டாக்டர் பாலாஜி கூறுகையில், ''ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து, நீதிபதி சில கேள்விகள் கேட்டார்; அதற்கு பதில் அளித்தேன். கைரேகை தொடர்பாக, எதுவும் கேட்கவில்லை. ஜெ., இறப்பில், எந்த முரண்பாடும் இல்லை,'' என்றார்.

மின் தடையால் விசாரணை பாதிப்பு

சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தில் அமைந்துள்ள, கலச மஹால் முதல் தளத்தில் உள்ள, விசாரணை கமிஷன் அலுவலகத்திற்கு, 'ஜெனரேட்டர்' வசதி இல்லை. நேற்று பகல், 12:30 மணி அளவில், மின் தடை ஏற்பட்டது. இதனால், டாக்டர் பாலாஜியிடம் நடந்த விசாரணை, அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.


சமையல் பணியாளருக்கு, 'சம்மன்'

ஜெ., வீட்டில் சமையல் பணி செய்த, ராஜம்மாள், 20ம் தேதி; முன்னாள் எம்.பி., மனோஜ் பாண்டியன், 21; ஜெ., கார் டிரைவர், அய்யப்பன், 22ம் தேதியும் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
15-பிப்-201817:14:21 IST Report Abuse

Kurshiyagandhiஇவை அனைத்தும் வீணே......... யாரும் உண்மையை சொல்ல போவது கிடையாது.. இவனுங்களுக்காக நேரத்தை வீணடிக்காமல் இருக்கலாமே...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
15-பிப்-201816:17:21 IST Report Abuse

Endrum Indianசெத்த பிணத்தின் கைரேகையை தான் பதிவு செய்தேன் என்று திருப்பதி??? பாலாஜியால் சொல்லமுடியவில்லை, அவ்வளவு தான்.

Rate this:
Madhav - Chennai,இந்தியா
15-பிப்-201811:47:09 IST Report Abuse

Madhavவாய் மொழி உத்தரவின் பேரில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இவரால் முன்னாள் முதல்வரிடம் இருந்து விரல் ரேகை பெற்று யார் பெயரிலோ மாற்றப்பட்டு இருக்கலாம்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-பிப்-201815:59:12 IST Report Abuse

தமிழ்வேல் கைரேகையோட எழுதுன உயில் இன்னைக்குத்தான் கிடைச்சுதுன்னு 2 ,3 வருஷத்துக்குப் பின்னால வெளியே கொண்டு வருவானுவோ. ....

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X