'முன்னாள் துணைவேந்தர்கள் வழியை பின்பற்றினேன்' - லஞ்ச, 'செக்' வைத்த இடம் கணபதிக்கு ஞாபகம் இல்லையாம்! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'முன்னாள் துணைவேந்தர்கள் வழியை பின்பற்றினேன்'
லஞ்ச, 'செக்' வைத்த இடம் கணபதிக்கு ஞாபகம் இல்லையாம்!

கோவை : 'பல்கலையில், முன்னாள் துணைவேந்தர்களின் வழிமுறையை பின்பற்றினேன்; 'செக்' வைத்த இடம் ஞாபகம் இல்லை' என, 'சஸ்பெண்ட்' செய்யப் பட்ட, துணைவேந்தர்,கணபதி, போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

'முன்னாள் துணைவேந்தர்கள் வழியை பின்பற்றினேன்' - லஞ்ச, 'செக்' வைத்த இடம் கணபதிக்கு ஞாபகம் இல்லையாம்!


கோவை பாரதியார் பல்கலையில், உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கி கைதான, துணைவேந்தர், கணபதி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார், ஐந்து நாட்கள், 'கஸ்டடி' எடுத்து விசாரித்து வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்றும், 29 லட்சம் ரூபாய்க்கான, 'செக்' குறித்து போலீசார் கேட்டனர்.

கிடுக்கிப்பிடி விசாரணை


முதலில், 'செக்' வாங்கவில்லை என்றவர், ஒரு கட்டத்தில், லஞ்ச பணத்தை, நான்கு, 'செக்'குகளாக வாங்கியதாகவும், அவற்றை வைத்த இடம் ஞாபகம் இல்லை எனவும், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.

பேராசிரியர் பணியிடங்களை நிரப்பியது தொடர்பாக, போலீசார் கைப்பற்றிய ஆவணங்களை காட்டி விசாரித்தனர். பெரும்பாலான கேள்விகளுக்கு, கணபதி மவுனமாகவே இருந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

உதவி பேராசிரியர் பணி நியமனம் தொடர்பாக, பதிவு செய்யப்பட்ட ஆடியோ குறித்த கேள்விக்கு, தான் திட்டமிட்டு வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். தனக்கு இடைத்தரகர்களாக செயல்பட்ட சிலரது பெயர்களை மட்டும், கணபதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. பல்கலையில் பல்வேறு துறை, அலுவலகங்களில் நடந்த ஊழல் குறித்தும், போலீசார் விசாரித்தனர்.

அப்போது, பல்கலையில் முன்னாள் துணைவேந்தர்கள் பின்பற்றிய விதிமுறைகளையே தானும் பின்பற்றியதாக, கணபதி தெரிவித்தார். இதன்பின், உயர்கல்வி துறையைச் சேர்ந்தவர்களின் ஊழல் தொடர்புகள் குறித்தும், சொத்து விபரங்கள் குறித்தும், போலீசார் விசாரித்தனர்.


லஞ்ச ஒழிப்பு


போலீசார் கூறுகையில், 'லஞ்சம் பெறப்பட்டது மற்றும் கிடைத்துள்ள ஆவணங்களின் அடிப்படையில், கணபதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

'கஸ்டடி விசாரணை முடிந்த பின், இவருக்கு உடந்தையாக இருந்தவர்களை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும்' என்றனர்.

கல்வியாளர்கள் வேதனைபல்கலையில் நிரப்பப்பட்ட, 72 பணியிடங்களுக்கு, தலா, 30 - 40 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது. பேராசிரியர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.

குறிப்பாக, தேர்வுக்குழுவில் இருந்த துணைவேந்தர் மற்றும் தர்மராஜ் அல்லாத, வேறுஒரு பேராசிரியருக்கும் பெரும் பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.பல்கலையில், 39 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில், பல்கலை மானியக்குழுவின் விதிகளையும் மீறி, 72 பேரை பணி நியமனம் செய்துள்ளதற்கு, லஞ்சமே முக்கியக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.

பெரும்பாலான பணியிடங்கள், தேவையற்றவை எனவும், பல்கலையின் நிதியைக் கரைப்பவை எனவும், பல்கலை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.உதாரணமாக, உறுப்புக் கல்லுாரிகளில், அதிக வருவாய் தரக்கூடிய வால்பாறை கல்லுாரிக்கே, தொகுப்பூதிய அடிப்படையில் தான், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மிகவும் குறைவான மாணவர்களைக் கொண்ட மொடக்குறிச்சி கல்லுாரியில், நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தர், கண பதியை நிர்ப்பந்தித்தும், முழுக்க முழுக்க அரசியல் தலையீட்டிலும், இந்த நியமனங்கள் நடந்துள்ளதாக புகார் வாசிக்கப்படுகிறது.மொடக்குறிச்சி கல்லுாரியில் இணைத்து நடத்தப்படும் முதுகலை கல்வி மையத்தில், 100க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர்.

Advertisement

ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் மட்டுமே வருவாய் தரக்கூடிய இந்த மையத்துக்கு, ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, ஆண்டிற்கு, 1.25 கோடி ரூபாய், பல்கலை நிதியிலிருந்து செலவிடப்படுகிறது.ஆளுங்கட்சியினரால் பரிந்துரைக்கப்பட்ட, 28 பேரில், ஆறேழு பேரை மட்டுமே, துணைவேந்தராக இருந்த கணபதி, பணி நியமனம் செய்துள்ளார்.

இதன் காரணமாக, உறுப்புக் கல்லுாரிகளில் தங்களுக்கு வேண்டியவர்களை, ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகர்கள் நியமித்துக் கொண்டு, ஒப்புதல் பெற்று விட்டனர் எனவும் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு


லஞ்ச துணைவேந்தரை கைது செய்திருப்பது, பாராட்டுக்குரிய விஷயம்; அதே நேரத்தில், அவருக்கு துணையாகவும், இணையாகவும் முறைகேடு செய்த மற்றவர்களும் தப்பி விடக்கூடாது என்பதே, கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பு. இதற்கு, நியாயமான, நேர்மையான விசாரணை நடக்க வேண்டியது அவசியம்; அதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு, கவர்னருக்கே உள்ளது.

கம்ப்யூட்டர் முறைகேடு

பல்கலையில் நடந்த முறைகேடுகள் குறித்து, அடுக்கடுக்கான தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது, கம்ப்யூட்டர் வாங்கியதில், 94 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதற்காக, கம்ப்யூட்டர் துறையில் ஒருவரை, கொள்முதல் அதிகாரியாக நியமித்து, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் இருந்து பொருட்களை வாங்கியுள்ளனர். உதிரி பாகங்களும், ஒவ்வொரு விலையில் வாங்கப்பட்டுள்ளன. இது குறித்து, பல்கலை தணிக்கை துறையினர், விதிமுறைகளை பின்பற்றாமல் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் அளித்தனர். இப்புகார் மீது, எந்த நடவடிக்கையும் இல்லாததால், விசாரணை நடத்த கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
18-பிப்-201801:56:33 IST Report Abuse

Manianஇனியன்: நிகழ் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் இந்த லஞ்ச வியாதி திடிரென்று வரவில்லை என்பதையும் சொல்லவில்லை. ராமசாமி-லட்சுமண சாமி முதலியார்கள் தான் பிராமண வெறுப்பை வளர்த்தார்கள். ஆனால், நீண்ட தூர பார்வை, புள்ளி விவரம் இல்லாததால் தங்கள் சியும் ஜாதி பிரச்சினை தமிழ் நாடடையே சீரழிக்கும் என்பதை புரிந்து கொள்ளவில்லை. பிறகு கருணாவின் வெளிப்படை பிராமண துவேஷம் (அது வெறும் வேஷம் தான்- அவரது வக்கீல்கள், கணக்கர், சார்ட்டர்டு அக்கவுண்டுகள் எல்லாமே பிராமணர்களே) ஜாதி-மதம்-இட ஒதுக்கீடாக ஓட்டுவங்கிகளாக பிரிக்கப்படடன. ஆகவே, தகுதியானவர்கள் யாருமே சுமார் 1960 முதல் ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, இன்ஜினியர்களா ... வரவில்லை. ஏழை மலை ஜாதியினருக்கு உண்மையில் கிடைக்க வேண்டிய கல்வி, உதவி தொகை, வேலைகள் போன்றவை அவர்களில் கருணாவிற்கு துதி பாடிய தகுதி இவர்களுக்கே கிடைத்தது. அதன் தொடர்ச்சியே நீங்கள் சொல்லும் இன்றைய நிலை. கடந்த கால தவறுகளை முதலில் ஒப்புக் கொள்ளவேண்டும். அவற்றை முடிந்தவரை சீர் திருத்த வேண்டும். இதற்கு இன்னம் 50 -60 வருஷங்கள் ஆகும். அமெரிக்காவில் இன்னும் கறுப்பர்கள் வெள்ளையர்களை குறை கூறிக்கொண்டு , தங்கள் வாழவை முன்னேற்றகே கொள்ளாமல் கடை நிலையில் இருப்பது போலவே, பிராமணர்களை குறை கூறிக்கொண்டு இன்னும் தமிழ் நாடினால் முட்டாள்களாக இருப்பவர்கள், ஓட்டுக்கு காசு வாங்கி திருடர்களை தேர்ந்தெடுக்கும்போது, நல்லவர்களுக்கு வேலை ஏது. எந்த சமுதாயத்திலும் எல்லோருமே திருடர்களாக இருப்பதில்லை. ஐயர்கள் இன்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற மேல் நாடுகளில் வசதியாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பும் பணத்தில் இன்றும் அவர்கள் பெற்றோர்கள் வசதியாக இருக்கிறார்கள். அவர்களை குறை கூறி திரியும் திருடர்கள் கழ தொண்டர்களும், அவர்கள் வாரிசுகளும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் இந்த உண்மைகளை ஒப்புக்கொள்ள சித்தனை தேவை. ஆங்கிலேயர்கள், முஸ்லீம் படையெடுப்பாளர்கள் செய்யாத அட்டுழியங்களை பிராமணர்கள் செய்யவில்லை. ஆனால், அவர்களோடு அவர்களின் திறமையும் சென்று விட்டது. இடி அமின் குஜராத்தி வியாபாரிகளை விரட்டினான். அவன் நாடு பொருளாதாரத்தில் வீழ்ந்தது. அதை இன்று உகண்டா உணர்ந்து கொண்டு திருந்தியது. வடக்கு ஸ்பெயின் யுத்தர்களை விரட்டியது. இன்றுவரை அது பொருளாதாரத்தில் பின் தங்கியே உள்ளது. 70 -80 % திறமை உள்ளவர்களாலேயேதான் நாடு முன்னேறும். ஆனால் பிறர் செய்த தவறுகளின் படிப்பினைகளை உணராத தமிழர் வாழ்வு அம்போதான். இதை ஒப்புக்கொள்ள உங்களுக்கு உண்மையான மனம் இருக்கிறதா? ஊழ்வினை உறுத்து வந்துடுதும் தும்.. - இளங்கோ அடிகளார் சொன்னதை ஞாபகப்படுத்தி கொள்ளுங்கள்.

Rate this:
INIYAN - Frankfurt,ஜெர்மனி
17-பிப்-201812:31:37 IST Report Abuse

INIYAN ஐயா கடந்த 15 வருடங்களாக நான் உதவி பேராசிரியர் பதவிக்கு தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பல்கலைகழகங்களுக்கு முயற்சி செய்கிறேன் அனால் சென்ற இடங்களில் எல்லாம் என்னிடம் கேட்டது பணம் பணம் பணம் அல்லது துணை வேந்தருக்கு வேண்டிய ஜாதி இருந்தால் பதவி. கடந்த இருபது வருடங்களை எந்த பதவியும் தகுதி அடிப்படையில் நியமிக்கவில்லை. உதாரணமாக மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் உயிரியல் துறை. முன்பு இந்த துறை உலக அளவில் அதன் ஆராச்சியில் பணிகள் மற்றும் கட்டுரைகள் பிரசித்தி பெற்றவை. அனால் இன்று அங்கு ஒரு நல்ல தகுதியான ஆராச்சியாளர் matrum நல்ல கட்டுரைகள் வெளியிட யாரும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பிரசித்து பெற்றது அனால் கடந்த கால துணைவேந்தர்கள் எப்படி கல்வியை வியாபாரமாக்கினார்கள் என்பது எல்லோருக்கும் வெளிச்சம். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியில் உள்ள உதவி பேராசிரியர்களின் பத்து வருட பணிநியமனைதை சோதித்தால் எல்லாம் வெளி வரும். நல்ல திறமை உள்ள ME PHD முடித்து ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் (அதிக H index மற்றும் Journal Impact factor ) எத்தனையோ தகுதியானவர்கள் இருக்க எப்படி துணை வேந்தர்கள் ME மட்டுமே உள்ளவர்களை நியமித்தார்கள்?. அடுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2012 பணி நியமித்த யாரும் நல்ல தகுதியானவர்கள் இல்லை. எத்தனையோ தகுதியானவர்கள் நல்ல ஆராய்ச்சி மற்றும் கட்டுரைகளுடன் வந்தவர்களில் நியமிக்காமல், அவர்களுக்கு வேண்டியவர்களை பணி நியமித்தது பல்கலைக்கழக web site பார்த்தால் விளங்கும். அழகப்பா பல்கலைக்களம் - தற்போதுள்ள துணை வேந்தர் கணபதியின் நெருங்கிய நண்பர், அவர் வழிதான் தற்போது பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடரப்படுகிறது. பாரதியார் பல்கலையின் பிரதான பிரச்சினை ஜாதி, இங்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் அதிகமாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். வேறு சமூகம் மற்றும் வேறு மாவட்ட மக்களுக்கு இங்கு பணி கிடைப்பது மிகவும் கடினம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் கடந்த 2016 பணி நியமனம் தொடபாக பத்திரிக்கை பார்த்தால் புரியும்.

Rate this:
Ramamoorthy P - Chennai,இந்தியா
15-பிப்-201822:09:10 IST Report Abuse

Ramamoorthy Pமுன்னாள் துணைவேந்தர்களிடம் கேட்டால் அவர்கள் அம்மா வழியை பின்பற்றினோம் என்பார்கள்.

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X