இந்து அறத்தை அழிக்கும் அறநிலையத்துறை: எச்.ராஜா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்து அறத்தை அழிக்கும் அறநிலையத்துறை: எச்.ராஜா

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement

மதுரை: இந்து அறத்தை அழிப்பதாக அறநிலையத்துறை செயல்படுகிறது,'' என, மதுரையில் பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா ஆவேசமுற்றார்.அவர் கூறியதாவது: கோயில் இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை, ஆறு வாரங்களுக்குள் அகற்றவும், தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப குத்தகை கட்டணத்தை நிர்ணயித்து அரசு அறிக்கை தாக்கல் செய்யவும், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பல கோயில்களின் கர்ப்பகிரகங்கள் கூட, கடைகளாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஆறு வாரங்களுக்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்யுமா என்பது சந்தேகம். 38 ஆயிரத்து 685 கோயில்கள், அவைகளுக்கு சொந்தமாக 4 லட்சத்து 72 ஆயிரத்து 243 எக்டேர் நிலங்கள், 22 ஆயிரம் கட்டடங்கள், 33 ஆயிரம் மனைகட்டுகள் இருப்பதாக சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சரே தெரிவித்துள்ளார்.கோவை பகுதி கோயில்களில் தி.மு.க.,வினர் கடைகள் நடத்துவதாக பட்டியல் கிடைத்துள்ளது. திருவண்ணாமலை இடும்பன், இளையவன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இன்று வரை அகற்றப்படவில்லை. இந்து அறத்தை அழிப்பதாக அறநிலையத்துறை செயல்படுகிறது.முதல் கப்பல் படை நிறுவியதுடன் தெற்காசிய நாடுகளை தன் ஆளுகைக்கு கீழ் கொண்டு வந்தவர் ராஜேந்திரசோழன். அவரை தி.க., தலைவர் வீரமணி விமர்சித்திருப்பது கண்டனத்திற்குரியது.

கோயில்களில் கடைகள் கூடாது. கோயில்கள் என்ன சத்திரங்களா. அறநிலையத்துறை அலுவலகங்கள் கூட கோயிலுக்கு வெளியில் தான் இருக்க வேண்டும். 1985 ல் முதல்வர் எம்.ஜி.ஆர்., அமைத்த உயர்மட்ட கமிட்டி, இந்து சான்றோர், பெரியவர்கள் கொண்ட வாரியத்திடம் கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என அறிக்கை அளித்தது. இன்று வரை நடவடிக்கை இல்லை. மதசார்ப்பற்ற அரசு எனக்கூறும் தமிழக அரசு, இந்து மதத்திற்கு சொந்தமான கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஏன். அரசு கோயில்களை விட்டு வெளியேற வேண்டும், என்றார். பா.ஜ., நிர்வாகி சிவபிரபாகரன், நகர் முன்னாள் தலைவர் ராஜரத்தினம் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-பிப்-201820:19:57 IST Report Abuse
Bhaskaran ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோவில்மனைகள் நிலங்கள் கடைகளில் வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒருவிளை கொடுத்து எங்களுக்கே உரிமையாக்குங்கள் என்று கோரிக்கைவிடுத்தனர் ஜெ அதை மறுத்துவிட்டார் சென்றத்தேர்தலின்போது மீண்டும் அதே குழுவினர் ஸ்டாலினிடம் மனுகொடுத்தனர் அவர் திமுக ஆட்சி வந்தால் கவனிப்பதாக கூறினார் நல்லவேளை இறைவன் தன சொத்துக்களை அந்தமுறைகாப்பாற்றிக்கொண்டார் இனிவரும் காலங்களில் எப்படியோ ஆனால் ஒன்று சிவன்சொத்து குலநாசம் அம்பாள் சொத்து அனைத்தும் நாசம்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-பிப்-201809:59:29 IST Report Abuse
ஆரூர் ரங் கோவில் இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளோரது வாக்குக்கள் பலலட்சம் இருக்கும்.எந்த திராவிஷக் கட்சியும் அவற்றை இழக்கத்தயாரில்லை. அரசியல் வியாபாரத்தைக் கெடுக்கிறீர்களே..
Rate this:
Share this comment
Cancel
15-பிப்-201806:17:01 IST Report Abuse
சீனிவாசன்.ஜி இந்து மத சான்றோர்களும், பெரியோர்களும் நேர்மையானவர்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X