பொது செய்தி

தமிழ்நாடு

கண் பரிசோதனை இலவச முகாம்

Added : பிப் 15, 2018
Advertisement

விருதுநகர்:ராம்கோ சமூக சேவைக்கழகம் , நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் சார்பில் கண்பரிசோதனை முகாம் ஆர்.ஆர்.நகர் ஸ்ரீராம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
தி ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன உபதலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். நெல்லை அரவிந்த் மருத்துவமனை மருத்துவ குழுவினர் மருத்துவப்பரிசோதனை செய்தனர். 178 பேர் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். 45 பேர் பார்வை குறைபாடு உடையவர்கள் என தேர்வு செய்யப்பட்டு நெல்லை அரவிந்த் மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்து செல்லப்பட்டனர். ஏற்பாடுகளை ராம்கோ சமூக சேவைக்கழக தொண்டர்கள் செயலாளர் தேவராஜா செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X