பொது இடத்தில் சர்ர்... அமைச்சர் பெயர் டர்ர்ர்...| Dinamalar

பொது இடத்தில் சர்ர்... அமைச்சர் பெயர் டர்ர்ர்...

Updated : பிப் 15, 2018 | Added : பிப் 15, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 சுகாதார அமைச்சர் காளிச்சரண்,  தூய்மை இந்தியா, அர்ச்சனா சர்மா, ராஜஸ்தான் அமைச்சர், காளிசரண் சாரப், Minister of Health Kalicharan, Purity India, Archana Sharma, Rajasthan Minister, Kalicharan Sarab, Swachh Bharat, BJP Minister ,

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் காளிச்சரண் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் அமைச்சரை ஏராளமானோர் கிண்டல் செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல பணிகள் முழு வீச்சில் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அம்மாநில சுகாதார அமைச்சராக இருக்கும் காளிசரண் சாரப், சாலையோரத்தில் கட்டடம் ஒன்றின் சுவரில் சிறுநீர் கழித்தார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக ஜெய்ப்பூர் மாநகராட்சி சார்பில் அமைச்சரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை என்ற போதிலும், இது பெரிய விஷயமல்ல எனக்கூறியதாக கூறப்படுகிறது.


வெட்கப்பட வேண்டும்


இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் துணை தலைவர் அர்ச்சனா சர்மா கூறியதாவது: தூய்மை இந்தியா திட்டத்திற்கு அரசு அதிக பணம் செலவு செய்யும் நிலையில், அமைச்சர் செய்தது வெட்கப்பட வேண்டிய செயல் எனக்கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரகு சர்மா கூறுகையில், தூய்மை இந்தியா திட்டம் குறித்து அரசு பேசி கொண்டிருக்கும் நிலையில், சுகாதார அமைச்சர் பொது இடத்தில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகியுள்ளது. இதற்கு அரசு வெட்கப்பட வேண்டும். வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக்கூறினார்.


கிண்டல்


பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக, அமைச்சரை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சில பிரபலங்களும், இந்த புகைப்படத்தை வெளியிட்டு தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

பலர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-பிப்-201822:46:30 IST Report Abuse
Mani . V "மாலினி 22 பாளையங்கோட்டை" என்னும் திரைப்படத்தில் "செய்வது" மாதிரி இந்த அமைச்சர்களுக்கும் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sundararaghavan.R - Chennai,இந்தியா
15-பிப்-201822:23:55 IST Report Abuse
sundararaghavan.R வாட்டவேர் டன் இஸ் டன்.தேர் மே பெ மேனி ரீசன்ஸ் including ஹி பெ எ டியாபெடிக்.பட் லேட் தி கோவேர்ந்மேன்ட் .provide adequate infrastructural பாசிலிட்டிஸ் நோட் டு recur .
Rate this:
Share this comment
Cancel
velavan - Grenoble,பிரான்ஸ்
15-பிப்-201821:30:35 IST Report Abuse
velavan உங்க தமிழை நீங்க தான் பாராட்டிக்கணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X