மின் ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வர அமைச்சர் கோரிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வர அமைச்சர் கோரிக்கை

Added : பிப் 15, 2018 | கருத்துகள் (8)
Advertisement
மின் ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வர அமைச்சர் கோரிக்கை

சென்னை: மின் ஊழியர்கள் வேலை நிறுத்த முடிவை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்காததால், கடும் கோபம் அடைந்துள்ள மின் வாரிய ஊழியர்கள், நாளை(பிப்.,16) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் மின் வினியோக பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இறுதி முயற்சியாக, இன்று நடக்கவிருந்த பேச்சும் ரத்தானதால், ஆத்திரமடைந்துள்ள ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடக்கும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் மின் ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு வர அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலைநிறுத்தம் வேண்டாம்

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: மின்வாரிய தொழிலாளர்கள் வேலை நிறுத்த முடிவை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர அன்போடு அழைக்கிறேன். தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக உள்ளது. அரசின் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமலேயே சிஐடியு வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது. மின்வாரிய தொழிலாளர்கள் பணிச்சுமை இரண்டொரு நாளில் பேசி முடிக்கப்படும். பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் சுமூக முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundararaghavan.R - Chennai,இந்தியா
16-பிப்-201811:52:23 IST Report Abuse
sundararaghavan.R TNEB Management has decided to give 2.57% wage hike to its employees, which is a welcome gesture.The mode of payment, when etc will be announced later.The majority of unions are not participating in the strike, whereas CITU and nine unions are going for it with a lame excuse that WR to be announced immediately.It is to be doubted that ' what is the real purpose of the strike? '. sufferings of the consumer? or same benefit to be extended to transporters? can somebody answer?
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
16-பிப்-201800:08:06 IST Report Abuse
Sambasivam Chinnakkannu அரசு எல்லா துறையிலும் திறமையானவர்களை ,,, பதிவு செய்து அவசர தேவைக்கு என தயாராக வைத்திருக்கவேண்டும் ,,அரசு துறையில் கடும் நெருக்கடி கொடுத்து வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கும் போது பதிவு செய்திருக்கும் திறமையானவர்களை உடனடியாக வேலையில் அமர்த்தி ,,, போராட்டக்காரர்களின் சம்பளம் ,சலுகைகளை பறித்து இவர்களுக்கு வழங்க வேண்டும் ,,,அவசரகாலத்தில் உதவும் இவர்களை எதிர் காலத்தில் அரசு வேலை முன்னுரிமை அளிக்கலாம் ,,
Rate this:
Share this comment
Cancel
Prakash - tamilnadu,இந்தியா
15-பிப்-201823:48:11 IST Report Abuse
Prakash இதெல்லாம் ஒரு அரசாங்கம்?? முக்கியமாக உள்ள எல்லா துறையினருக்கும் சம்பள பாக்கி... சம்பள உயர்வு நிலுவை??ஆனால் இல்லாத ஒருவரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவிற்கு வெட்டி செலவாக பல கோடி????? வேலையே செய்யாத MLA களுக்கு சம்பள உயர்வு????? முன்னாள் MLA களுக்கு ஓய்வூதிய உயர்வு???? நிர்வாக திறன் இல்லாத அமைச்சரவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X