காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் அளவு குறைப்பு

Updated : பிப் 17, 2018 | Added : பிப் 16, 2018 | கருத்துகள் (220)
Share
Advertisement
புதுடில்லி: காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.ஒத்திவைப்புகாவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும்
CauveryVerdict,Supreme Court verdict, Cauvery river water affair,   காவிரி தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, காவிரி நதி நீர் விவகாரம், காவிரி விவகாரம், காவிரி பிரச்னை, காவிரி நடுவர் மன்றம்,  நீதிபதி தீபக் மிஸ்ரா, காவிரி வழக்கு, தமிழ்நாடு ,Cauvery case, Tamil Nadu, Cauvery judgment, Cauvery affair, Cauvery dispute, Cauvery arbitration forum, Justice Deepak Mishra, Cauvery problem,

புதுடில்லி: காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 2007 ம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


ஒத்திவைப்பு

காவிரி நதி நீரைப் பங்கிட்டு கொள்வதில், தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவு எடுக்க, காவிரி நடுவர் மன்றம், 1990ல், அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தில் நீண்ட காலம் நடந்து வந்த வழக்கில், 2007ல், இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இது தொடர்பான அனைத்து மனுக்களையும், தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்தது. வழக்கில் 2017 செப்.,20 ல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.


குடிநீர் தேவை அதிகரிப்பு

இந்நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், நதிநீர் என்பது தேசிய சொத்து என்பதால், அதற்கு உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை. காவிரி நீரை எந்த மாநிலமும் உரிமை கோர முடியாது. தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி.,தண்ணீர் வழங்கப்பட வேண்டும். கர்நாடகாவிற்கு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய நீரைவிட கூடுதலாக 14.75 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். பெங்களூரு குடிநீர்தேவை அதிகரித்துள்ளதாலும், தொழிற்சாலைகளுக்கான தண்ணீரின் தேவை அதிகரித்திருப்பதாலும் கர்நாடகாவிற்கு கூடுதல் நீர் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டி.எம்.சி.,யாக உள்ளதால், 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் 184.75 டி.எம்.சி., தண்ணீர் பயன்படுத்தி கொள்ளலாம். கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டில் மாற்றமில்லை.


புதிய அணைக்கு தடை

நடுவர் மன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும். காவிரிவழக்கின் இறுதி தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு செல்லும். இதனை எதிர்த்துமேல்முறையீடு செய்ய முடியாது. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைக்கிறோம். கடந்த 1892 மற்றும் 1924ல் போடப்பட்ட காவிரி ஒப்பந்தங்கள் செல்லும். இதன்படி தமிழகம் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (220)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
18-பிப்-201805:36:00 IST Report Abuse
Dr.C.S.Rangarajan நடுவர் மன்றம் நிலத்தடி நீரை காவிரி நதிநீர் பங்கீட்டில் கணக்கில் எடுத்துக்கொள்ளாதபோது, உச்சநீதிமன்றம் நிலத்தடிநீரை கணக்கில் கொண்டது, காவேரி ஆற்றங்கரை பகுதியில் இல்லாத பெங்களூருக்கு, குப்பனை திருடி சுப்பனுக்கு தருவதுபோல் தருவதற்குத்தான் என உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரியவில்லையா? நீதி தடம்புரண்டது மட்டுமல்ல, காவேரி ஆற்றங்கரையில் இல்லாத மற்ற நகரங்களும், குடிநீர் தேவையை சுட்டிக்காட்டலாம் இம்முன் உதாரணத்தினை அறிவுறுத்தி?. தமிழகத்தில் நிலத்தடி நீர் 20 டி.எம்.சி.,யாக இல்லாதுபோனால் , அந்த குறையினை நிறைவு செய்ய விடைகளை எங்கு தேடுவது? நீரின்றி அமையாது உலகம் என்றாலும், இருப்பதை தர மறுப்பதற்கு காரணங்களை தேடியதுபோல் தோன்றவில்லையா?
Rate this:
Cancel
gopal -  ( Posted via: Dinamalar Android App )
16-பிப்-201820:28:03 IST Report Abuse
gopal முதல்ல தீர்ப்புல சொல்லியிருக்கிற தண்ணிய விடுரானுங்களான்னு பாருங்க
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
16-பிப்-201819:51:26 IST Report Abuse
bal தமிழகவக்கீல் பிஜேபியிடம் பணம் வாங்கி விட்டு சும்மா இருந்து விட்டார். கர்நாடாவுக்கு எதிரே தீர்ப்பு இருந்தா பிஜேபி ஜெயிக்க முடியாது. அதோடு ஏன் ஒரு பாய்ண்டை நம் வக்கீல் சொல்லவில்லை. பெங்களூருக்கு குடி நீர் வேண்டும் என்றால் ஏன் 96 ஏரிகளை அசுத்தப்படுத்தவிட்டார்கள். கெம்பே கவுடா பெங்களூரு உருவாக்கும்போது இந்த ஏரிகள் உருவானதே அங்கு தண்ணீர் பிரச்சனைய வரக்கூடாது என்றுதான். இந்த ஏரிகளை பில்டர்கள் அசுத்தப்படுத்திவிட்டார்கள் அதை சித்தராமையா வேடிக்கை பார்த்து விட்டு இப்போது காவிரி நீரை திசை திருப்பி விட்டார். குடிநீர் பிரச்னை பெரிது என்கிறார். இன்னும் கொஞ்ச வருடங்களில் காவிரி தடமே மாறிவிடும் வட கர்நாடகாவுக்கு. தமிழர் வாயில் சூப்ப வேண்டியதுதான். குடிநீர் பெங்களூருக்கு பெரிதா அல்லது தமிழ் நாடு காடாகாமல் இருப்பது நல்லதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X