பொது செய்தி

இந்தியா

அழகான மொழி தமிழ்: பிரதமர் மோடி பேச்சு

Updated : பிப் 16, 2018 | Added : பிப் 16, 2018 | கருத்துகள் (60)
Advertisement
தேர்வு விவாதம், தன்னம்பிக்கை, பிரதமர் மோடி, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள்,  மாணவர்களுக்கு ஆலோசனை, தேர்வு பயம் ,
Examination debate, confidence, PM Modi, school students, college students, counsel for students, exam fear, Pariksha Pe Charcha, மோடி அறிவுரை, Modi Advice

புதுடில்லி: தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையான அழகான மொழி. இது பலருக்கு தெரிவது கிடையாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


கடின உழைப்பு


பள்ளி , கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என, மாணவர்களுக்கு ஆலோசனை கூறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். இதனை மாத்திரை போல் உட்கொள்ள முடியாது.

தன்னம்பிக்கை என்பது நமக்கு நாமே சவால் நிர்ணயம் செய்யும் போதும், கடினமாக உழைக்கும் போது தான் வரும். தேர்விற்கு ஒருவர் நன்றாக தயார் செய்ய முடியும். ஆனால், தன்னம்பிக்கை இல்லாவிட்டால் தேர்வில் வெற்றி பெற முடியாது. கடவுளின் ஆசியிருந்தாலும், உங்களை நீங்கள் நம்பாவிட்டால், அது பலிக்காது என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.


மதிப்பெண்


நம்மை மேம்படுத்திக் கொள்ள சிந்திக்க வேண்டும். நீங்கள் பிரதமரோடு பேசவில்லை. உங்கள் நண்பருடன் பேசி கொண்டிருக்கிறீர்கள். நானும் இங்கு ஒரு மாணவனாக தான் வந்துள்ளேன். நீங்கள் எவ்வளவு மதிப்பெண் தருகிறீர்கள் என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் உங்களுக்குள் இருக்கும் மாணவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். கவனத்தை மேம்படுத்த யோகா பெரிதும் உதவும்.


வருத்தம்

வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மாணவர்களிடம் மொழி பிரச்னை காரணமாக பேச முடிவதில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மொழிகள் குறித்து ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும், உதாரணமாக, தமிழ் பழமையான மொழி என்பது பலருக்கும் தெரிவது இல்லை. தமிழ், சமஸ்கிருதத்தை விட பழமையானது. அழகானது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arivu Nambi - madurai,இந்தியா
17-பிப்-201800:33:57 IST Report Abuse
Arivu Nambi இவர் சீனா பாக்கிஸ்தான் மாதிரி உங்கள் ஊருக்குள் நுழைவதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவார் ...
Rate this:
Share this comment
Cancel
JeyaGeetha -  ( Posted via: Dinamalar Android App )
16-பிப்-201821:08:32 IST Report Abuse
JeyaGeetha ஆங்கிலத்தில் கேள்வி கேட்டா பதிலு ஹிந்தில வருது,
Rate this:
Share this comment
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
16-பிப்-201821:15:37 IST Report Abuse
HSRசரி அதுக்கு என்ன இப்போ ஜெயகீதா.. அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.. சந்தோஷமாக தூங்குங்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-பிப்-201820:33:43 IST Report Abuse
Pugazh V போனவாரம் ஓமன் அதிபரோட செல்பி எடுத்து, மூர்க்கன் என்று எழுதி வந்த பக்தாள்ஸ் முகத்தில் கரி பூசினார். இப்ப டுமிளர், திரவிஷம் னு எழுதி வரும் பக்தாள்ஸ் முகத்தில் மீண்டும் ஒண்ற டன் கரி பூசிட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X