அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காவிரி அரசியலை கைவிட்டு
தண்ணீரை சேமிக்க வழி தேடுமா தமிழகம்?

பத்தாண்டு இழுபறிக்கு பின், உச்ச நீதிமன்றத் தில் வெளியான, காவிரி தீர்ப்பு, இன்னும், 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

காவிரி தீர்ப்பு, காவிரி அரசியல், தமிழகம், உச்ச நீதிமன்றம், காவிரி, காவிரி மேலாண்மை வாரியம், கர்நாடகா எதிர்ப்பு, காவிரி நதிநீர் பிரச்னை,  கர்நாடக முதல்வர் சித்தராமையா , தண்ணீர் சேமிப்பு ,  Cauvery Tribunal, Cauvery Politics, Tamilnadu, Supreme Court, Cauvery, Cauvery Management Board, Karnataka, Cauvery Water Issue, Karnataka Chief Minister Siddaramaiah, Water storage,Cauvery judgment, Cauvery verdict,


அதற்கிடையில், அதில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்பதால், இனியும் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் நம்பிக் கொண்டிருக்காமல், நம் மாநிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு முன்வர வேண்டும். இதுவரை ஆண்ட கட்சியும், தற்போது ஆளும் கட்சியும், எதையும் செய்யாத நிலையில்,தமிழக அரசு, இனியாவது விழித்துக் கொள்ளுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

பாதகமானதுகாவிரி நீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக, தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே, நீண்ட காலமாக பிரச்னை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்த, 192 டி.எம்.சி., தண்ணீர், 177.25 டி.எம்.சி.,யாக குறைக்கப்பட்டுள்ளது; இது, தமிழகத்திற்கு பாதகமானது.

அதேநேரத்தில், 'காவிரி நீரை, எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது. காவிரி மேலாண்மை வாரியத்தை, ஆறு வாரங்களுக் குள் அமைக்க வேண்டும்' என்பது போன்ற விஷயங்கள், தமிழகத்திற்கு சாதகமானவை. தற்போது, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி, 177.25 டி.எம்.சி.,தண்ணீரை பெற, காவிரி மேலாண்மை வாரியம் அவசியம். அதை அமைக்க, தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதுநாள் வரை, தமிழகத்தை ஆண்ட, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியில், நீர் நிலைகளை பாதுகாக்கவோ, நீராதாரத்தை பெருக்கவோ, எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. நிலத்தடி நீரை பாதுகாக்க, ஆற்று மணல் அவசியம். ஆனால்,ஆற்றில் வரைமுறை யின்றி மணல் அள்ளப்பட்டது.

காமராஜர் ஆட்சிக்கு பின், பெரிய அளவில், அணைகளோ, தடுப்பணைகளோ கட்டப் படவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள், காவிரியை வைத்து, அரசியல் செய்தனரே தவிர, நீர் மேலாண்மைக்கான ஆக்கப்பூர்வ வழிகளை ஆராய வில்லை. இனிமேலாவது, காவிரி அரசியலை கைவிட்டு, தமிழகத்தின் நீர் தேவையை கருத்தில் கொண்டு, நீராதாரங் களை பெருக்க, நிலத்தடி நீரை சேமிக்க,

தொலைநோக்கு திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

பக்கத்து மாநிலங்கள் எல்லாம், நீர் நிலைகளை பாதுகாத்து வரும் நிலையில், நாம் அவற்றைபங்கு போட்டு, விற்று வருகிறோம்; இதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த தீர்ப்புக்கு பிறகாவது, தமிழக அரசு விழித்துக் கொள்ளுமா என்பதே, ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், காஞ்சி அமுதன் கூறியதாவது:உச்ச நீதிமன்றம்,தமிழகத்தில் நிலத்தடி நீர் அதிகமாக இருப்பதாக கூறி உள்ளது. ஏற்கனவேஎடுக்கப்பட்ட கள ஆய்வின்படி கூறியுள்ளது. தற்போது, நிலத்தடி நீரை பாதுகாக்க, மாநில அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தவறான தகவலை கூறி, 10 டி.எம்.சி., தண்ணீரை மறுத்துள்ளனர். இதனால், மாநில அரசு அதிர்ச்சி அடையவில்லை. நாம் வைக்காத வாதம் அடிப்படையில், நம் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீருக்கு ஆதாரம், ஆற்று மணல். பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தவர்கள், இருப்போர் மற்றும் அதிகாரிகள், ஆற்று மணலை பாதுகாக்க, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆற்று மணல் தான் நீரின் பாதுகாப்பு அரண். அதை வரைமுறை இல்லாமல், பக்கத்து மாநிலத்திற்கு விற்றுள்ளனர். நம் மணலை, தமிழக தேவைக்கு மட்டும் வைத்திருந்தால், நிலத்தடி நீர் பாதுகாக்கப் பட்டிருக்கும். இதற்கு மேலாவது, ஆற்றில் வரம்பை மீறி, மணல் எடுப்பதை நிறுத்தவேண்டும்.

மேலாண்மை வாரியம் அமைத்தால் தான், மாத வாரியாக தண்ணீர் வரும். காவிரியில், நம் பகுதியில் பெய்கிற மழை அதிகம். அந்த மழை நீர், குறிப்பிட்ட காலத்தில், வெள்ளமாகச் சென்று, வீணாக கடலில் கலக்கிறது.அடையாறு படுகை, கூவம் படுகை, பாலாறு படுகை என, தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும், தண்ணீரை சேமித்து வைக்க, எந்த திட்டமும் இல்லை. மழை நீர் வீணாக, கடலுக்கு செல்கிறது.

புதிய நீர் நிலைகளை உருவாக்கலாம்; தடுப்பணை கள் கட்டலாம். பக்கத்து மாநிலத்தில் தண்ணீர் கேட்பது குறித்து பேசுகின்றனர். பாலாற்றில், 160 ஆண்டுகளுக்கு முன், 1858ல், புதுப்பாடியில், ஆங்கிலேயர் அணை கட்டியுள்ளனர். அதன்பின், எத்தனையோ போராட்டம் நடந்த பிறகும், அண்ணா துரை முன்வைத்த தடுப்பணை திட்டத்தை, தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அரசுகள் நிறைவேற்ற வில்லை.

கர்நாடக அரசு, நீர் நிலைகளை பாதுகாப்பது போல், தமிழகஆட்சியாளர்களிடம், மாநிலத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய, எந்த செயல் திட்டமும் இல்லை.இனிமேலாவது, தமிழக அரசு, தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்த, முன்வர வேண்டும். திட்டமிடாத, தொலைநோக்கற்ற, ஆதாயம் சார்ந்தவர்கள் ஆட்சி நடத்துவதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக கட்சிகள், தண்ணீர் பிரச்னையை உணர்ந்து

Advertisement

செயல்படுவது போல தெரியவில்லை. மிகப் பெரிய அபாயகரமான கால கட்டத்தில், தமிழகம் உள்ளது. பருவ மழை, புயல் மழை, இப்பிரச்னையை தீர்க்கிறது. ஆட்சியாளர்களின் நுட்பமான திறனால், தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படுவதில்லை. காவிரி, சம தளத்தில் ஓடுகிறது. நினைத்த இடத்தில், தடுப்பணை கட்ட முடியாது. ஆனால், சில இடங்களை கண்டறிந்து, தடுப்பணை கட்டலாம். புதிய நீர் நிலைகளை ஏற்படுத்தி, ஆற்று நீரை கொண்டு செல்லலாம்; நதிகளை இணைக்கலாம்.

அதற்கான செயல்திட்டத்தை, அரசு செயல்படுத்த வேண்டும்.நீர் நிலைகளில், பணம் பார்ப்பதற்கான வழியை மட்டும், ஆட்சியாளர்கள் சிந்திக்கின்றனர். வாழ்வின் ஆதாரம் எனக் கருதுகிற ஆட்சி முறை இல்லை.காவிரி பிரச்னையில், 1913ல், ஆங்கிலேயர்கள், நடுவர் மன்றம் அமைத்தனர். ஒரே ஆண்டில், வழக்கை விசாரித்து, 1914ல் தீர்ப்பு தந்தது.

சீரழித்துள்ளனர்கர்நாடகா, கண்ணம்பாடியில் அணை கட்டவும், தமிழகம், மேட்டூரில் அணை கட்டவும், தீர்வு தரப்பட்டது. அதன்மூலம், தமிழகம், கர்நாடகம் இரண்டும் பயனடைந்தன.கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உள்ள அரசுகள், 100 ஆண்டுகளுக்கு பின், தேவைப்படும் நீர் தேவை குறித்து சிந்திக்கின்றன. தமிழகத்தை ஆண்டவர்கள், ஆளுபவர்கள், 100 ஆண்டுகளா னாலும் சரிசெய்ய முடியாத அளவிற்கு, ஆற்றை சீரழித்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

காற்றோடு போனது!'காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாற்றின் குறுக்கே, தடுப்பணைகள் கட்டப்படும்' என, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஆட்சியில், பல முறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை, ஒரு தடுப்பணை கூட வந்த பாடு இல்லை. 'ஒவ்வொரு முறையும், அரசு மதிப்பீடு கேட்கிறது.தயாரித்து கொடுக்கிறோம். மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுவதில்லை' என,காஞ்சிபுரம் மாவட்ட பொது பணி துறைஅதிகாரிகள் புலம்பு கின்றனர். இலவசங்களை வழங்குவதில் ஆர்வம் காட்டும் அரசு, தடுப்பணைகள் கட்ட முக்கியத் துவம் கொடுத்தால், மக்களின் குடிநீர் தேவை யும், விவசாயிகளின் தண்ணீர் தேவையும் பூர்த்தியாகும்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.VIJAYAKUMAR - chennai,இந்தியா
05-மார்-201819:02:29 IST Report Abuse

K.VIJAYAKUMARதமிநாடு வரட்ச்சி பாதையில் செல்லுவதை விருப்ப படும் அரசியல்வாதிகல் காரணம் பெட்ரோலியம் எடுக்கும்போது விவசாயம் நடைபெறுகூடாது பெரும் வியாபாரிகள் நுழைய அனுமதி தமிழகம் மக்களுக்குள் கருத்து வேறுபாடு உருவாக்க அதன் மூலம் சண்டையை வரவைத்து தன ஆசையை நிறைவேத்த நினைக்கும்

Rate this:
skv - Bangalore,இந்தியா
19-பிப்-201804:30:32 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>எவ்ளோ மழை கொட்டினாலும் 2/3 கடலுக்கே போயிடுது என்றோ பல்லவா காலத்துலே வெட்டியா எரிகுளங்களை மழை நீர் நேகரிக்க வைக்காமல் எல்லாம் PALAMAADIபிளாட்ஸ் கட்டியாச்சு காசும் சேர்த்தாச்சு இங்கிட்டு ஏறி தோண்டுவானுக நம்மளை நாமே அழிச்சுண்டாச்சு இந்த திராவிட அபஸ்மாரங்களை நம்பி வோட்டு போட்டதும்மக்களின் அசட்டுத்தனம்

Rate this:
SUPPIAH - ipoh,மலேஷியா
18-பிப்-201816:47:26 IST Report Abuse

SUPPIAHதமிழன், முதலில் தமிழ் நாடு நதிகளை இணைக்கவேண்டும். ஊட்டியில் அணை கட்டி தண்ணிரை தமிழ் நாட்டுக்கு திருப்ப வேண்டும். பருவ மழை களங்களில் பெருகியோடும் வெல்லத்தை தமிழ் நாடு முழுவதும் பகிர்ந்து விட்டால் வெல்ல சேதமும் ஏற்படாது. அதோடு அங்கங்கே தடுப்பு அணைகள் காட்டினாலே போதும், மற்ற மாநிலங்களிடம் கை ஏந்த தேவையில்லை. மேலும் இஸ்ரேல் நாட்டில் இருந்து கடல் நீரை சித்தரிக்கும் இயந்திரங்கள் வாங்கி குடி நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யலாமே. இதற்கு ஊழல் அற்ற மத்திய ஆட்சி அமைந்தால்தான் எல்லாம் பூர்த்தியாகும். ஆனால் இந்த திராவிட கட்சிகள் தமிழ் மொழி, தமிழ் தமிழ் என்று சொல்லி சொல்லி மத்திய அரசை ஆட்சிக்கு வரவிடமாட்டார்கள். மக்களே யார் ஊழல்வாதிகள், திருடர்கள் என்று நன்கு யோசித்து ஒரு நேர்மையான அரசை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மொழிக்கு நிச்சயம் பந்தம் வராது, இதை மக்கள் உணரவேண்டும். இந்த ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வரக்கூடாது.

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X