காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!

Added : பிப் 19, 2018 | கருத்துகள் (71)
Advertisement
யுனெஸ்கோ, கோட்டா மொழி, தோடா மொழி, தென் திராவிட மொழிகள், வட்டார பேச்சு , அந்தமான்  நிகோபார் தீவு,  தமிழக மொழிகள்,
Tamil Nadu languages, Kota language, Doda language, South Dravidian languages, Regional talk, UNESCO, Andaman and Nicobar Island,

புதுடில்லி: தமிழகத்தில் உள்ள கோட்டா மற்றும் தோடா போன்ற தென் திராவிட மொழிகள் உட்பட, 42 மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும்பட்டியலில் உள்ளன.

குறைந்த அளவு மக்கள் பயன்படுத்துவதால், 42 இந்திய மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மொழிகளை, யாருமே பேசாத நிலை உருவாகும் என, தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, மொழியியல் துறை நிபுணர்கள் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தக் கூடிய, 22 பட்டியலிடப்பட்ட மொழிகள், 100 பட்டியலிடப்படாத மொழிகள் புழக்கத்தில் உள்ளன.அதே நேரத்தில், 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்துவதால், 42 மொழிகள், வட்டார பேச்சு வழக்குகள் மிக விரைவில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது.

யுனெஸ்கோவும் இதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், கோட்டா மற்றும் தோடா ஆகிய மொழிகள் காணாமல் போய்விடும். இந்தப் பட்டியலில் மிகவும் அதிகமாக அந்தமான் - நிகோபார் தீவுகளில், 11 மொழிகளும், மணிப்பூரில், ஏழு மொழிகளும் அழியும் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-பிப்-201813:20:06 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தி எதிர் என்று சொன்னார்கள் திராவிட கலகத்தார்கள் , தாங்கள் தான் தமிழை காக்க வந்தவர்கள் என்று கூவி ஓட்டுப்பெற்று ஆட்சி நடத்தினார்கள். தற்போது என்ன நடந்துகொண்டிருக்கிறது , தற்போது இளங்கலை பட்டம் படித்து வரும் மாணவர்களுக்கு முழுவதுமாக எந்த மொழியும் தெரிவதில்லை , ஆங்கிலம் அரைகுறை , தமிழ் சுத்தமாக வருவதில்லை , தற்போது வரும் மீமீக்களை கவனித்திருப்பீர்கள் ஆங்கில எழுத்தில் தமிழ் எழுதப்படுகிறது, தமிழகத்தில் தமிழ் எழுத , பேச தெரியாமலேயே பட்டம் பெற்றுவிடமுடியும் , ஆனால் அண்டை மாநிலங்களில் அந்த பிராந்திய மொழி தெரியாமல் பத்தாவது தாண்டமுடியாது. இதுதான் இந்த திராவிட மட்டைகளின் சாதனை.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
19-பிப்-201813:09:51 IST Report Abuse
pradeesh parthasarathy தமிழின் ஆதிக்கத்தால் தோடர் இன மக்கள் பேசும் மொழி அழிந்து கொண்டிருக்கிறது .... ஹிந்தி ஆதிக்கம் என்று சொல்லும் மக்கள் தமிழின் ஆதிக்கத்தால் இம்மொழியும் , அம்மக்களின் கலாச்சாரமும் அழிந்து கொண்டிருப்பது வேதனைக்கு உரியது .... தோடர் இந மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் சார்ந்த மொழியும் , கலாச்சாரமும் பாதுகாக்கப்பட மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
19-பிப்-201812:54:24 IST Report Abuse
ganesha நல்ல தமிழன் என்றைக்கும் தலை நிமிர்ந்த தமிழன் தான். ஆனால் தமிழர்களின் ஒரே மதமாகிய ஹிந்துக்களை ஹிந்து கலாச்சாரத்தை ஹிந்து மதத்தை ஹிந்து கடவுளை மட்டுப்படுத்தி அவமானப்படுத்தீயும் இந்தியன் வேறு தமிழன் வேறு என்று கூவும் சில கூமுட்டைகள் தமிழ்நாட்டை இந்தியாவிலிருந்து பிரித்து தமிழ் வளத்தை சூறையாட துடிக்கும் பொய் தமிழனை தான் டுமிழன் என்றும் அவர்கள் கட்சியை டுமிழன் என்றும் இங்கு நல்ல தமிழர்கள் கூறுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X