விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு

Added : பிப் 19, 2018 | கருத்துகள் (51)
Advertisement
Kamal, Vijayakanth, Rajini, நடிகர் கமல், விஜயகாந்த், கமல் அரசியல் பயணம், நடிகர் ரஜினி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், Actor Kamal,  Actor Vijayakanth, Kamal political journey, actor Rajini, DMDK leader Vijayakanth,கமல் விஜயகாந்த் சந்திப்பு, Kamal Vijayakanth Meet ,

சென்னை: பிப்ரவரி 21 ம் தேதி, அரசியல் பயணத்தை துவங்க உள்ள நடிகர் கமல், பல்வேறு தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரைத் தொடர்ந்து இன்று (பிப்.,19) தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்தார். கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு வந்த கமலை, தேமுதிக கட்சியின் சுதீஷ் வரவேற்றார். பின்னர் விஜயகாந்த்தை கமல் சந்தித்தார்.

விஜயகாந்த்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல், சகோதரர் விஜயகாந்த்தை பார்க்க வந்தேன். அவரை சந்தித்து ரொம்ப காலம் ஆகி விட்டதால், நலம் விசாரிக்க வேண்டிய கடமை உள்ளது. நான் அரசியல் பயணம் துவங்க உள்ளதால், அவரை சந்தித்து அதற்கான அழைப்பை விடுத்தேன். அவர் ஏற்கனவே கூறி உள்ளார், சினிமாவில் வேண்டுமானால் நாங்கள் மூத்தவர்களாக இருக்கலாம். அரசியலில் அவர் தான் மூத்தவர் என்று.

அந்த வகையில் அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன், மூத்தவரை பார்த்து, எனது பயணத்தை துவக்க உள்ளதாக சொன்னேன். அவரும் வாழ்த்து தெரிவித்தார். உங்களைப் போன்றவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்தார். உடல் நலமும் விசாரித்தேன். திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்று காட்டுவேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
20-பிப்-201800:45:19 IST Report Abuse
jagan விஜி சேர் உயரத்திலும், கமால் சீட் அந்த உயரம் இல்ல...கேப்டன் யாருன்னு இந்த கோமாளிக்கு காமிச்சுட்டார்
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
19-பிப்-201822:03:52 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) இரு கோமாளிகள்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
19-பிப்-201821:27:26 IST Report Abuse
Kuppuswamykesavan பல நேரங்களில், பொது மக்கள் ஜெய்கிறவனுக்கு தான், ஒட்டு போடுவாங்க . ஆக, ஜெயிக்கிறவனா, தன்னை காட்டிக்கனும். அதுக்கு, பல தலைவர்களை சந்திக்கனும். தினமும் மீடியாவில் ட்ரெண்டிங்கா பரபரப்பா, தான் பிறரால் பேசப்படனும். பிறகு, பொது தேர்தலில், ஜெயிக்கிறோமோ இல்லையோ?. கட்டாயம், பொது தேர்தலின் போது, கண்டெய்னர் வைட்டமின் 'ப' கிடைக்கும்?. இப்படி, சில அரசியல்வாதிகள், நம் இந்தியாவில் அரசியல் பண்றாங்கதானே?. ஆனாப்பாருங்க, 20-ரூபா டோக்கனுக்கே, அவரவர் ஓட்டுக்களை, வாரி வழங்குபவர்களாக, சில வாக்காளர்கள், தமிழகத்தில் இருக்கிறார்கள்தானே?.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X