‛சாமி ' திரும்பி வந்துட்டேன்னு... சொல்லு!‛ சட்ட விரோத செயலுக்கு ‛மாமூல்' தள்ளு...!

Added : பிப் 20, 2018
Advertisement
மதியம் வெயிலும், இரவு பனியும் என மாறிமாறி தட்பவெப்பம் நிலவியதால், உடல்நிலை சரியில்லாத சித்ரா, வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள். இதையறிந்து, அவளது வீட்டுக்கு சென்றாள் மித்ரா.""அடடே... வா, மித்து. என்ன திடீர்ன்னு விசிட்?'' என்று சித்ரா கேட்டதும், ""இல்லக்கா... உங்களுக்கு உடம்பு முடியலைன்னு கேள்விப்பட்டு வந்தேன்,'' என்ற மித்ராவிடம், ""அது, ”ம்மா காய்ச்சல்தான்.
‛சாமி ' திரும்பி வந்துட்டேன்னு... சொல்லு!‛ சட்ட விரோத செயலுக்கு ‛மாமூல்' தள்ளு...!

மதியம் வெயிலும், இரவு பனியும் என மாறிமாறி தட்பவெப்பம் நிலவியதால், உடல்நிலை சரியில்லாத சித்ரா, வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள். இதையறிந்து, அவளது வீட்டுக்கு சென்றாள் மித்ரா.
""அடடே... வா, மித்து. என்ன திடீர்ன்னு விசிட்?'' என்று சித்ரா கேட்டதும், ""இல்லக்கா... உங்களுக்கு உடம்பு முடியலைன்னு கேள்விப்பட்டு வந்தேன்,'' என்ற மித்ராவிடம், ""அது, ”ம்மா காய்ச்சல்தான். டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க சொன்னார், அதான்...'' என்றாள் சித்ரா.
மித்ரா வந்ததையறிந்த, சித்ராவின் அம்மா, ""வா... மித்ரா நல்லா இருக்கியா? பேசிட்டு இருங்க. காபி கொண்டு வர்வேன்,'' என்றவாறு உள்ளே சென்றார்.
""அப்புறம் வேறென்ன விசேஷம் மித்து?'' என்று சித்ரா கேட்டதுதான் தாமதம். ""அரசு பஸ்கள் எல்லாம் இப்போது ஏதோ பரவாயில்லை. கொஞ்சம் லாபத்துல இயங்குதுன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
""பஸ் கட்டணத்தை உயர்த்தியதால், டிரான்ஸ்போர்ட் கார்ப்ரேஷனுக்கு வருவாயும், தொழிலாளர் ஊதிய உயர்வு பிரச்னைக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைச்”டுச்சாம்,'' என்று சித்ரா சொன்னதும், ""ஓ@ஹா. அதேமாதிரி திருப்பூரில் "ஸ்பேர் பார்ட்ஸ்' வாங்கறதுல, அப்பப்ப முட்டுக்கட்டை போட்டிருந்த ஒரு அதிகாரி, டிரான்ஸ்பர் ஆனதால், பலரும் சந்தோஷப்பட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""அது, யாருப்பா? அவ்வளவு "சின்சியர்' ஆபீசர். ஓ... இப்போ "டிரெய்னிங் டிவிஷனுக்கு' போனவரை பற்றியா சொல்கிறாய்?,'' என்று சித்ரா கேட்டதும், ""ஆமாங்க்கா. பல "ரூட்டில்' அரசு பஸ்களை தேவையில்லாமல் திருப்பி விட்டு நஷ்டம் ஏற்படுத்திய அதே ஆபீசர்தான். நஷ்டம் நிர்வாகத்துக்குத்தானே என்று சொல்லி, தனியார் பஸ்களுக்கு சாதகமாக செயல்பட்டாராம். அவரு போனதால, இப்ப கொஞ்சம் பரவாயில்லையாம்,'' என்று பதிலளித்தாள் மித்ரா.
""அதெல்லாம் சரிதான். ஆனா, இதுல இன்னொரு விஷயம் இருக்குது கேளு. "டிரான்ஸ்பர்' ஆன, அந்த ஆபீசரும், ஈரோட்டில், முக்கிய பொறுப்புல இருக்கிறவரும், மாமன், மச்சானாம். இப்போது, சேலத்தில் இருக்கிற அதிகாரி "ரிடையர்ட்' ஆனவுடன், இந்த ரெண்டு பேருக்கும், அடுத்தடுத்த
"புரமோஷன்' வருதாம். இதுவரைக்கும் திருப்பூரில் செய்த "திருவிளையாடல்களை' ஈரோடு, கோவை என விரிவுபடுத்தும் திட்டத்தில், ஆபீசர் "செம்ம' குஷியாக இருக்கிறாராம்,'' என்றாள் சித்ரா.
""அப்ப... இனிமேல், அவர், "தனிக்காட்டு ராஜா'ன்னு சொல்லு. "ருசி கண்ட பூனை' ”ம்மா இருக்குமா? பெரிய மீனை பிடிக்கிறதுக்குத்தான், இந்த "போஸ்டிங்' போயிருக்காராம்,'' என்று கூடுதல் தகவல்களை மித்ரா சொல்லி முடிக்கவும், சித்ராவின் அம்மா, காபியும், முறுக்கும் கொண்டு வரவும் சரியாக இருந்தது.
""மித்ரா, காபி குடிம்மா. நான் போய், "லஞ்ச்' ரெடி பண்வேன். மத்தியானம், மகேந்திரகுமாரும், சேனாதிபதியும் நடிச்ச, "நாங்களே ராஜா... நாங்களே மந்திரி,' சீரியல் போடுவான். மிஸ் பண்ணாம பார்க்கோணும்,'' என்றவாவே மீண்டும் கிச்சனுக்குள் சென்றார். முறுக்கை எடுத்து கடித்தவாவே, ""உதவிக்கு போன கட்சி பிரமுகரை மிரட்டிய போலீசை பற்றி தெரியுமா?'' என்று புதிர்போட்டாள் சித்ரா.
""போலீஸ்னாலே, மிரட்டத்தானே செய்வாங்க. யாரை மிரட்டியதை சொல்றீங்க?'' என்று ஆர்வமானாள் மித்ரா.
""மதுரைக்கு போன அரசு பஸ், கோவில்வழி பக்கத்துல பிரேக் டவுன் ஆகி விட்டது. இரண்டு மணி நேரமாகியும் வேறு பஸ் வரவில்லை. "டென்ஷனான' பயணிகள் ரோட்டில் உட்கார்ந்திட்டாங்க. அப்ப, அவ்வழியா வந்த, மாவட்ட ஊராட்சி, "சண்முகமான' "மாஜி' தலைவர், வேறு பஸ்சை வர
வழைக்க ஏற்பாடு செய்திருக்கார்.''
""அதைப்பார்த்திட்டு, அங்கிருந்த எஸ்.ஐ., ஒருத்தர், "மாஜி'யை அடையாளம் தெரியாமல், "நாங்க சொல்லியே பஸ் வரலை. நீ சொன்னா... வந்துடுமா?' என தரக்குறைவாக பேசியுள்ளார். இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த "மாஜி' "இப்படி மரியாதையில்லாமல் யாரையும் பேச வேண்டாம்,' என்று "பொங்கி' எழுந்து சத்தம் போட, ரெண்டு பேருக்கும் பயங்கர "ஆர்க்யூமென்ட்' நடந்ததாம்.''
""இதைப்பார்த்துட்டு வந்த, "லேடி' இன்ஸ்பெக்டர், "மாஜியை' சமாதானம் செய்து, அவரை பேசிய, எஸ்.ஐ.,யை "சாரி' கேட்க வச்சாராம்,'' என்று விளக்கியவாவே, சித்ரா காபியை குடித்து முடித்தாள்.
அதற்குள், டீபாயில் மேல் இருந்த பேப்பரை புரட்டியவாவே, ""தனி அதிகாரிகளுக்கு, கவர்மென்ட்' கூடுதல் "பவர்' கொடுத்திருக்கா? ''என்று கேட்டாள் மித்ரா.
""என்ன மித்து, உனக்கு என்னாச்”. இப்படி கேட்குவே. எங்காவது பஞ்சாயத்தா?'' என்று ஆர்வமாக கேட்டாள் சித்ரா.
""இது பஞ்சாயத்து இல்லக்கா. கோழிப்பண்ணைகள் அதிகம் இருக்கற யூனியன்ல, தனி ஆபீசரா இருக்கற, அந்த அம்மாவுக்குத்தான் மாவட்ட நிர்வாகம் ரொம்ப அதிகாரம் கொடுத்திருக்குதுன்னு, மத்த ஆபீசருங்க பேசிக்கறாங்க. அவங்க வீடு உடுமலையில இருக்கறதால, தினமும் யூனியன் ஜீப்பில், வீட்டுக்கு போயிட்டு வந்திடறாங்களாம்.
அந்த டிரைவர் வீடு கணியூர்ல இருக்கறதால, அந்தம்மாவ அவங்க வீட்ல இறக்கிவிட்டுட்டு, டிரைவர் வீட்டுக்கே "ஜீப்' போயிருதாம். மறுபடியும் காலையிலே, உடுமலை போயிட்டுத்தான், கிழக்கே வருதாம்,'' என்றாள் மித்ரா.
""இதை யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?'' என்று சித்ரா கேட்டதும், ""எந்த தைரியத்துல, தினமும், 200 கி.மீ., போயிட்டு வர்றாங்களோ தெரியலை. பெட்ரோல் செலவுக்கு எப்படி கணக்கு காட்றாங்கன்னும் தெரியலை. இதை கண்டிக்க வேண்டிய ஆபீசர்கள், அவருக்கு ஆசிர்வாதம் பண்ணிட்டு இருக்கிறது கொஞ்சம்கூட நல்லாயில்லைன்னு, "டாக்' ஓடுதாம்.''
""இதுக்கு முன்னாடி, மாவட்ட ஆபீசர் காருக்கு, யூனியன் கணக்குல பெட்ரோல் அடிக்கறாங்கனு ஏற்கனவே பேசியிருந்தோம். அது முடிஞ்”, இப்போ, இந்தம்மா ஆரம்பிச்சுட்டாங்க,'' என்று ஒரு பிரசங்கமே செய்தாள் மித்ரா.
அப்போது, சித்ராவின் மொபைல்போன் ஒலித்ததும், டிஸ்பிளேயில், மின்னிய பேரை பார்த்து, ""மம்மி... சண்முகவதி ஆன்ட்டி தான் கூப்பிடறாங்க,'' என்று குரல் கொடுக்கவும், அவரது அம்மா வந்து, போனில் பேச ஆரம்பித்தார்.
""இப்போ, உள்ளாட்சியில் "பவர்' இல்லைங்கறாதால, "பில்டிங், சைட் அப்ரூவல்', வரி விதிப்புனு எல்லாத்திலும் பி.டி.ஓ.,க்கள் கை@ய ஓங்கி நிற்குது. அதனாலே, அவங்களுக்கு ரொம்ப சுதந்திரம் கொடுத்திருக்காங்க போல,''என்றாள் சித்ரா.
""தெற்கு தாலுகா, காலையில, 7:00 மணிக்கே பரபரப்பாக இயங்குதாம்,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""அப்படியா விஷயம். எப்படின்னு சொல்லேன்,'' என்ற சித்ரா, மாத்திரையை விழுங்கி, தண்ணீர் குடித்தாள்.
""தெற்கு தாலுகா பிரிச்சதில், மக்களுக்கு பிரயோஜனம் இருக்கோ இல்லையோ. அதிகாரிங்க காட்டில்,
"செம்ம' மழையாம். "ஹையர்' அபிஷியல்ஸ் யாரும், சீக்கரம் வரமாட்டாங்கன்னு தெரிஞ்”ட்டு, புரோக்கர்கள் ஆதிக்கம் கொடிகட்டி பறக்குதாம்.''
""இரட்டை குழல் துப்பாக்கி மாதிரி, இரண்டு புரோக்கர்கள், காலை, 7:00 மணிக்கெல்லாம் ஆபீஸ் வந்துட்டு, வாரிசு, பட்டா மாறுதல்... இப்படி பலவழியில், வாரிவாரி குவிக்கறாங்களாம். அதுக்கு புரோக்கரும் வேணுங்கறதால், அவங்களை விரட்ட முடியாம பெரிய அதிகாரி தவிக்கிறாரம். கலெக்டர் திடீர் "விசிட்' அடிச்சாருன்ன, பல உண்மை வெளிச்சத்துக்கு வருமுன்னு, மத்த ஆபீசருங்க, வெளிப்படையாவே பே”றாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""இருக்கலாம். இதேபோலத்தான், லிங்கேஸ்வரர் ஊரிலும், புரோக்கர் ஆதிக்கம் அதிகமாம். எந்த "சர்டிபிகேட்' கேட்டு மக்கள் போனாலும், பக்கத்துல இருக்கிற கடைக்கு போங்கன்னு,' விரட்டுறாங்களாம். அங்கே போனால்,
"ஸ்மார்ட்' கார்டு, வாரி”, பட்டா மாறுதல்... இப்படி எல்லாத்துக்கும், "டோட்டல்' பேக்கேஜ் இருக்குதாம். மொத்தமா பணத்தை கொடுத்துட்டா, அவங்களே வாங்கி தந்துருவாங்களாம். இந்த நிலைமைக்கு "விவேக'மான ஆபீசருதான் காரணமாம்,'' என்று சித்ரா தன் பங்குக்கு, ரெவின்யூ மேட்டரை கூறினாள்.
""ஓ... அங்கேயும் அப்படியா?'' என்ற மித்ரா, ""வடக்கு தாலுகா ஆபீஸ் பக்கம் இருக்குற, "சப்-டிரஸ்ஸரி' ஆபீசில, "ரொம்ப அலைய வைக்கிறாங்க'ன்னு தாசில்தார்களே "பீல்' பண்ணி கண்ணீர் விடறாங்களாம். சம்பளம் துவங்கி, ஓ.ஏ.பி., பட்டியல் வரை, அங்கதான் கொடுத்து பணம் வாங்கறாங்க; அங்கிருந்த ஆபீசரு ஒருத்தர், "கவனிப்பு' இல்லாம எந்த வேலையும் செய்யறதே இல்லையாம். எதுவாக இருந்தாலும், இழுத்தடிக்கிறாங்களாம். நம்ம மன” "சாந்த'மா இருக்
கோணும்னா, தனியா, ஒரு போராட்டம் நடத்த வேண்டும் போலிருக்கு,'' என்றாள்.
""என் வழி... தனி வழி...'ன்னு போறதால, டவுன் நிர்வாகிய நீக்கியே ஆகணும்னு ஒரு கோஷ்டி கிளம்பியிருக்காம்,'' என்றாள் சித்ரா.
""எந்த கட்சியிலதான் கோஷ்டி இல்லாமல் இருக்கு? பீடிகை போடாம "மேட்டரை' சொல்லுங்க?'' என்றாள் மித்ரா.
""பக்கத்துல இருக்கிற, கோழிப்பண்ணை ஊர்ல, எதிர்க்கட்சியில்தான் இப்படி புகையுதாம். ஏற்கனவே, ரஜினி, கமல்னு அரசியல் பரபரப்பா போயிட்டு, இருக்கிற "டைமில்' இந்த கோஷ்டிகானம் தேவையான்னு, "உடன்பிறப்புகளே' கேட்குறாங்களாம்.''
""மக்கள் பிரச்னைய பத்தி எந்த போராட்டமும் பண்ணாம அமைதியாவே இருக்காராம். அது தவிர, மாவட்ட நிர்வாகிகளையும் மதிக்கறதே இல்லையாம்,'' என்று சித்ரா சொன்னதும், ""ஏங்க்கா, இவ்வளவு நடந்தும் தலைமைக்கு தெரியாதா?'' என்று கேட்டாள் மித்ரா.
""இல்லப்பா, ஏற்கனவே போன புகாரை வைச்”, இவரை கூப்பிட்டு, "டோஸ்' விட்டாங்களாம். ஆனா, அவரு திருந்துற மாதிரிய தெரியலை,'' என்று சித்ரா, ""மித்து, இந்த "ரா@ஜந்திரகுமார்' எழுதிய "தனிக்காட்டு ராஜா' புக் படிச்சியா? நல்லாயிருக்கும்,'' என்றாள்.
அதற்குள், ""சாப்பாடு ரெடி, ரெண்டு பேரும் வர்றீங்களா?'' என்று கிச்சனில் இருந்து குரல் வந்ததும், ""வெயிட் பண்ணுங்க மம்மி. இன்னும், பத்து நிமிஷத்தில வர்வோம்,'' என்ற சித்ரா, ""சொல்ல மறந்துட்டேன். இந்த "சவுத்' ஸ்டேஷன் ஏட்டு ஒருத்தர் பண்ணுன வேலை தெரியுமா?'' என்றாள்.
""நீங்க, எப்பவுமே இப்படித்தான். "குவிஸ்' மாதிரி சொல்வீங்க,'' என்று சிணுங்கினாள் மித்ரா.
""ஓ.கே.., மித்து. "புல்லா' சொல்வேன் கேட்டுக்கோ. அந்த ஏட்டு, சொந்த ஊருக்கு போறதுக்காக, ஸ்டேஷன் பக்கத்துல இருக்குற பேக்கரியில, ஸ்வீட் அது. இதுன்னு, 1,500 ரூபாய்க்கு வாங்கிட்டு, "சரி... வரட்டுமா?' ன்னு போய்ட்டாராம். ஆடிப்போன பேக்கரி மேனேஜர், ஸ்டேஷனில் போய் பத்த வைச்”ட்டாராம். ஊருக்கு போய்ட்டு வந்ததும், மற்ற போலீஸ்காரங்க, "நீங்க, ஏற்கனவே "பனிஷ்மென்ட்' டியூட்டிலதான் இங்க வந்திருக்கீங்க. இப்படி பண்ணினது கொஞ்சங்கூட நல்லாலே', தாளித்தனராம். இதனால், ஏதோ, கொஞ்ச பணத்தை குடுத்தாராம்,'' என்றாள் சித்ரா.
""ஏதோ, டீ.. குடிச்”ட்டு போனாலும் பரவாயில்லை. மொதலுக்கு மோசம் வர்ற மாதிரி, ஏன்தான் போலீஸ்காரங்க இப்படி பண்றாங்களோ?'' என்று அலுத்து கொண்ட மித்ரா, ""அவங்களை அந்த "மகாலிங்கமே' பார்த்துப்பாரு. அப்புறம் வேற விஷயம் உண்டா?'' என்று ஆர்வமானாள்.
""ம்..ம். இருக்குது. குமரன் ரோட்டிலுள்ள ஒரு நிறுவனம், கட்டட விதிமுறையை மீறி கட்டிட்டு, மொத்த இடத்தை பாதியாக காட்டி "டேக்ஸ்' கட்றாங்களாம். இது பத்தாதுன்னு, பார்க்கிங் வசதி ஒழுங்கா செய்யாம இருக்கிறதால, கடைக்கு வர்றவங்க, ரோட்டிலே@ய வண்டியை "பார்க்கிங்' பண்றாங்கன்னு, "நார்த்' எஸ்.ஐ,. ஒருத்தர், கமிஷனர்கிட்ட சொல்லிருக்கார்,''
""விசாரித்து பார்த்த கமிஷனரும், இது சம்பந்தமா, நடவடிக்கை எடுங்கன்னு சொல்லி, கார்ப்ரேஷன் கமிஷனருக்கு, லெட்டர் போட்டார். ஆனா, நம்ம அதிகாரி வழக்கம்போல, லெட்டருக்கு எந்த பதிலும் கொடுக்கலையாம். இதனால், போலீஸ் கமிஷனர் "நாகப்பாம்பு' போல, "அசோக' வனத்தில் சீறுகிறாராம். @நரம் வரட்டும், பார்த்துக்கலாம்னு, அமைதியாக இருக்கிறாராம்,'' என்று பரபரப்பான விஷயத்தை சொன்னாள் சித்ரா.
""ஓ@ஹா... மேட்டர் இப்படி போகுதா. இதனால, கார்ப்ரேஷனுக்கு பல லட்சம் ரூபாய் இழப்புன்னு தெரியுது. இது மாதிரி, திருப்பூர் புல்லா, விசாரிச்சா, பல கோடி ரூபாயை, பலரும் ஏமாத்தறது தெரியுங்கா,'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.
""இதையுங் கேளு. லிங்கேஸ்வரர் ஊரிலிருந்து, "டிரான்ஸ்பர்' ஆன, அந்த "சாமி' அதிகாரி, பத்தே நாளில், மீண்டும் "பெவிலினியக்கே' வந்துட்டார். என்னடா, இது சோதனைன்னு, @நர்மையான போலீஸ்காரங்க நொந்தே போயிட்டாங்களாம். லாட்டரி, 24 மணி @நர சரக்கு, சேவல் கட்டுன்னு, தாராளமா நடத்தவிட்டு, "செம்ம' கலெக்ஷன் வருவதால், "ரிட்டர்ன்' ஆயிட்டாராம். இது எங்க போய் முடியுமோ? பரமேஸ்வரா...'' என்று கைகூப்பி வணங்கினாள் சித்ரா.
""பத்தே நாள்ல பழைய இடத்துக்கு அவர் வந்ததுக்கு யார் காரணமாம்?'' என்றாள் மித்ரா.
""நான் பலரிடம் விசாரிச்சதுல, அந்த அதிகாரி, "சபா'விடம் முறையிட்டதற்கு, "புகாரில் செல்லும் நீங்கள் இங்கே வர வேண்டாம்,' என்று நழுவி விட்டார். இருந்தாலும், மனம் தளராத அவர், கோவையை சேர்ந்த ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளியை "சரிக்கட்டி' பழைய இடத்துக்கே வந்துட்டாராம்,'' என்றாள், சித்ரா.
"பார்க்கிறதுக்கு "பரம'சாது மாதிரி இருந்துட்டு, அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் பயங்கரமா, வெளையாடுச்” பார்த்தீங்களா?'' என்று மித்ரா "டாபிக்' மாறினாள். ""ஆம்.. நானும் பார்த்தேன். அதிலும், ஒரு காளை, கொஞ்சம் தூரம் போயிட்டு, மீண்டும் வந்து மிரட்டுச்சாம். அப்புறம், ஒன்னு ரொம்ப தூரம் ஓடி, பி.ஏ.பி., வாய்க்காலில் விழுந்து இறந்துடுச்சாம்,'' பாவமில்ல, என்று சித்ரா சொன்னதும், அவளது அம்மா, ""அட...வாங்கப்பா, பசிக்குது. சாப்பிடலாம்,'' என்று "சவுண்ட்' விட்டதும், இருவரும் எழுந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X