அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடைகளை கடந்து சாதனை படைக்கவும் தயார் : கமல்

Added : பிப் 21, 2018 | கருத்துகள் (49)
Share
Advertisement
Abdul Kalam,Kamal Haasan, journalists ,கமல் செய்தியாளர்கள் சந்திப்பு, ராமேஸ்வரம், அப்துல் கலாம் இல்லம், கமல் அரசியல் பயணம்,  நடிகர் கமல், மதுரை மாநாடு , கமல் கொள்கை விளக்கம்,  நாளை நமதே , கமல்ஹாசன் , Kamal journalists meeting, Rameswaram, Abdul Kalam Home,Kamal political journey, actor Kamal, Madurai conference, Kamal policy explanation, naalai namadhe, கமல் அரசியல், kamal arasiyal, KamalPartyLaunch ,maiam  KamalsPoliticalEntry,

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில், அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை இன்று முறைப்படி துவக்கிய நடிகர் கமல், மண்டபம் பகுதி மீனவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தனியார் ஓட்டலில் செய்தியாளர் சந்திப்பின் போது மீனவ பிரதிநிதிகள் கமலை சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் கமல் பேசியதாவது: மதுரையில் பல்லாயிரக்கணக்கானோர் காத்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் மத்தியில் கொடியேற்றி, கொள்கை விளக்கம் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். நீங்கள் கண்டிப்பாக அங்கு வர வேண்டும். கலாம் எனக்கு மிக முக்கிய ஆதர்ச மனிதர். அவரது வீட்டிற்கு சென்றது மகிழ்ச்சி. அது திட்டமிட்டு சென்றது. அரசியல் இல்லை. அவரது உணர்வு, நாட்டுப்பற்றறு என்னை கவர்ந்தது. எனது பாடத்தில் ஒரு பகுதி அவரது வாழ்க்கை. அவரது பள்ளிக்கு செல்ல நினைத்தேன். அதற்கு தடை விதித்தனர். பள்ளிக்கு செல்ல தான் எனக்கு தடை விதிக்க முடியும். நான் பாடம் படிப்பதை தடுக்க முடியாது.

தடைகளை கடந்து தான் சாதனை படைக்க வேண்டும் என்றால் அதற்கும் தயார். மதுரையில் எனது கொள்கைகள் புரியும் வகையில் பேசுவேன். கொள்கை என்பதை விட மக்களுக்கு செய்ய போவதே முக்கியம். நேற்று இரவு சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். மக்கள் பிரச்னைகளை பட்டியலிடுங்கள், மக்களுக்கு சேவை செய்யுங்கள் என அறிவுரை வழங்கினார். இதுவரை தமிழர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருந்தேன். இனி தமிழர்களின் இல்லங்களில் வாழ விரும்புகிறேன்.

நான் இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்வதில்லை. அதனாலேயே கலாமின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை. மக்களுக்கு எந்த நேரத்தில் என்ன தேவையே அதை செய்ய விரும்புகிறேன். உலகநாயகனாக இருந்து நம்மவர் ஆகவில்லை. நம்மவராக இருந்து உலநாயகனாகி இருக்கிறேன். இப்போதும் மீண்டும் நம்மவர் ஆகி இருக்கிறேன்.

தொழில் மட்டுமே முக்கியமில்லை. உணர்வும், உத்வேகமும், ஆசை, நேரம் உள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அனைவரும் வர வேண்டும், நீங்களும் வர வேண்டும். பொன்னாடை போர்த்தும் பழக்கமில்லை. என்னை போர்த்துவேன். உணர்வு உத்வேகம் இருக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு கட்டத்தில் வழக்கறிஞர்கள் அதிகம் பேர் அரசியலுக்கு வந்தனர். அப்போது யாரும் கேட்கவில்லை. இவ்வாறு கமல் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
21-பிப்-201816:38:10 IST Report Abuse
Chowkidar Modikumar மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷம் இட்டாள் என கத்துக்குட்டி பிக் பாஸ் ஜூலியயை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற திரை உலகில் முழுமையான சாடிஸ்ட் நடிகர் என அழைக்கப்படும் கமலிடம் பெரிசா என்ன கொள்கை இருக்க போகிறது. சிறுபான்மை கிறிஸ்துவர்களை கவர ஜூலிக்கு ஒரு முக்கியமான ஒரு போஸ்ட் கட்சியில் காத்து கொண்டுள்ளது.
Rate this:
Cancel
kamatchi - hosur,இந்தியா
21-பிப்-201816:25:57 IST Report Abuse
kamatchi சும்மா பிலிம் காட்டாமல் பெட்ரோல் விலையை குறைப்பதற்கு எதாவது ஐடியா வைத்திருக்காயா. அதை முதலில் கூறிவிட்டு அடுத்த அடிஎடுத்து வை. இல்லாவிட்டால் சீரழிந்துவிடுவாய்
Rate this:
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
21-பிப்-201816:00:27 IST Report Abuse
Ramamoorthy P ஆரம்ப கால தடுமாற்றம் உளறல்களை பின்னுக்கு தள்ளி சரியான பாதையில் அரசியலை கொண்டு சென்றால் தமிழக அரசியலில் ஒரு தெளிவு பிறக்கும். காலம் காலமாக திராவிடம், நாத்திகம்,இலவசம் பேசி மக்களை போதையில் வைத்திருந்த கூட்டம் இனி பின்னுக்கு தள்ளப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X