மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு

Added : பிப் 22, 2018 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: 'மொபைல் போன் எண்களை, 13 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை' என, 'டிராய்' எனப்படும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்கள் உடையதாக உள்ளன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, 'சிம்கார்டு'
Mobile phone,TRAI,swiping machine,  மொபைல் போன், தொலை தொடர்பு ஆணையம், டிராய், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் , சிம்கார்டு, மிஷின் டு மிஷின், ஸ்வைப்பிங் மிஷின்,  Telecommunication Authority, Telecommunications Regulatory Authority, simCard, machine to machine, swiping machine,

புதுடில்லி: 'மொபைல் போன் எண்களை, 13 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை' என, 'டிராய்' எனப்படும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், தற்போது, மொபைல் போன்களுக்கான எண்கள், 10 இலக்கங்கள் உடையதாக உள்ளன. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும், 10 இலக்க எண்ணில் தான், வாடிக்கையாளர்களுக்கு, 'சிம்கார்டு' வழங்கி வருகின்றன.

இந்நிலையில், வரும் ஜுலை, 1 முதல், வாடிக்கையாளர்களுக்கு, 13 இலக்க எண்கள் உடைய, சிம் கார்டு வழங்கும்படி, தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இப்போதுள்ள 10 இலக்க எண்களை, 13 இலக்கமாக மாற்றும் நடைமுறையை அக்டோபர், 1ல் துவங்கி, டிசம்பர், 31க்குள் முடிக்க வேண்டும் என, உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது; இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால், இதை டிராய் மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதாரண மொபைல் போன்களின் எண்களை, 13 இலக்கமாக மாற்ற, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; அது போன்ற எண்ணமும் இல்லை. மாறாக, 'மிஷின் டு மிஷின்' எனப்படும், விமானங்கள், கப்பல்கள் போன்ற போக்குவரத்து துறைகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும்,'சிம்' கார்டுகளின் எண்கள் மட்டும், 13 இலக்கமாக மாற்றப்படும்.

மேலும், இணையம் வாயிலாக இயங்கும், 'ஸ்வைப்பிங் மிஷின்'களுக்கான, பிரத்யேக எண்களும், தற்போதுள்ள, 10 இலக்கத்திலிருந்து, 13 இலக்கமாக மாற்றப்படும். இந்த நடைமுறை, ஜூலை, 1 முதல் அமலுக்கு வருகிறது. மேலும், இப்போதுள்ள, 10 இலக்க எண்களை, 13 இலக்கமாக மாற்றும் நடவடிக்கையை, அக்டோபர், 1ல் துவக்கி, டிச. 31க்குள் முடிக்க, தொலை தொடர்பு நிறுவனங்களை, தொலை தொடர்புத்துறை வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
23-பிப்-201808:21:55 IST Report Abuse
Welcome Back to 1900AD Like DD and AIR,why not a print media for central government?is there any offical site for Government News?
Rate this:
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
22-பிப்-201815:02:56 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி நெறையா நம்பரையெல்லாம் நாபாகம் வச்சிக்கமுடியதே. எங்க பெற வச்சே சிம்மூ கார்ட்ட கொடுக்கோணுமமா
Rate this:
22-பிப்-201817:41:14 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்,,மொகத்த வச்சி சிம்மு குடுக்க சொல்லா..எதுக்கு பேர வச்சினு?ஒரே பேருல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளனுவ ஈப்பானுவ..மொவம் யாருக்கு கெடையாதே?...
Rate this:
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
22-பிப்-201813:01:03 IST Report Abuse
சுந்தரம் முதலில் ஒன்றை சொல்வதும் மறுநாள் நாங்களா அப்படி சொல்லவே இல்லையே என மறுப்பதும் இந்த மஸ்தான் அரசில் அன்றாட வாடிக்கைதான். இதில் புதுமை ஒன்றும் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X