பொது செய்தி

இந்தியா

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை

Added : பிப் 22, 2018 | கருத்துகள் (113)
Share
Advertisement
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான பணியிலிருந்து, வேற்று மத ஊழியர்களை நீக்க, தேவஸ்தானத்திற்கு ஐதராபாத் உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது.ஆந்திராவில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், தற்போது, ஹிந்து அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த, 45 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஹிந்த தார்மீக நிறுவனமான தேவஸ்தானத்தில், வேற்று மதத்தவர் பணியாற்ற கூடாது என, 2007 முதல், ஹிந்து
Ezhumalaiyan,Tirupati Devasthanam, High Court, திருமலை திருப்பதி தேவஸ்தானம் , ஐதராபாத் உயர் நீதிமன்றம்,  ஹிந்து மதம், ஆந்திர அரசு, திருப்பதி ஏழுமலையான், திருப்பதி வெங்கடசலபதி, 
Tirumala Tirupati Devasthanam, Hyderabad High Court, Hindu , Andhra Pradesh, Tirupati Ezhumalaiyan, Tirupathi Venkatasalapathy,

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான பணியிலிருந்து, வேற்று மத ஊழியர்களை நீக்க, தேவஸ்தானத்திற்கு ஐதராபாத் உயர் நீதிமன்றம் தடைவிதித்து உள்ளது.

ஆந்திராவில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில், தற்போது, ஹிந்து அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த, 45 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஹிந்த தார்மீக நிறுவனமான தேவஸ்தானத்தில், வேற்று மதத்தவர் பணியாற்ற கூடாது என, 2007 முதல், ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஊழியர்களை மட்டுமே தேவஸ்தானம் நியமித்து வருகிறது.

இந்நிலையில், 'தற்போது பணிபுரிந்து வரும், 45 ஊழியர்களையும், தேவஸ்தான பணியிலிருந்து நீக்கி, அவர்கள் வகித்து வரும் பணிக்கு தகுந்தபடி, அரசு பணி வழங்க வேண்டும்' என, தேவஸ்தானம் முடிவு செய்தது.

இது குறித்து, ஆந்திர மாநில அரசிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், தேவஸ்தான அதிகாரிகளின் இந்த முடிவுக்கு, அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், 'தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களும், மனதால் ஹிந்து மதத்துக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்து, ஏழுமலையான் மீது, பயபக்தியுடன் பணியாற்றி வருகிறோம்.

'அதனால், எங்களை தேவஸ்தான பணியிலிருந்து நீக்க தடை விதிக்க வேண்டும' என, 45 ஊழியர்களும் ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதை நேற்று விசாரித்த நீதிபதிகள், தேவஸ்தான பணியிலிருந்து, வேற்று மத ஊழியர்களை நீக்க தடை விதித்து, உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
22-பிப்-201820:49:56 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. Ms document - நீங்கள் சொல்வது சிறு ஊர் தர்காவுக்கு தான் பொருந்தும், நாகூர் தர்கா வேறு விதம். அங்கே வருமானமே வேறு லெவல். வரு‌ம் வருமானம் அனைத்தும் trustee member பிரித்து கொள்கிறார்கள். என் நண்பனின் குடும்பம் அ‌தி‌ல் ஒன்று. மேலும் பற்பல உண்டியல் அங்கே உண்டு. நூற்றுக்கும் மேற்பட்ட வர்கள் அங்கே ஊழியம் செய்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வருமானம் உண்டு. மேலும் பல வழிகளில் வருமானம் உண்டு. கோவில் களை போன்று அங்கேயும் கூட, தட்டில் வசூல் உண்டு. இந்து களுக்கு, திருநீறு போன்று ஊது பத்தி தூள் கொடுத்து வசூலிக்கப்படுகிறது.
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
23-பிப்-201804:33:36 IST Report Abuse
Pannadai Pandianநாகூர் தர்காவை அரசு எடுத்துக்கொள்ளுமா ??? அப்படி எடுத்துக்கொண்டால் மத சார்பின்மைக்கு குந்தகம் வருமா ??? ஒருமுறை எனது நண்பனின் தந்தை மாப்பிள்ளை ராவுத்தரிடம் 2 ரூபாய் கொடுத்து, நாகூர் தர்காவுக்கு போறீங்க....சக்கரை வாங்கி பாத்தியா ஓதிடுங்கன்னு சொன்னேன்....அவரு சக்கரை பொட்டலத்தை வாங்கினார்....ஆனால் மணல் மேடு கிராமம் வழியா போனப்ப ஒரு வெள்ளரிப்பழம் தோட்டம் வந்தது...வெள்ளரிப்பழத்தை வாங்கி சக்கரையை போட்டு தின்னுட்டேண்டான்னாரு.......அது ஒரு குசும்பு பெரிசு.......
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
22-பிப்-201820:12:10 IST Report Abuse
Pasupathi Subbian இந்த வேலையாட்கள் , எந்தவித பொறுப்பும் இன்றி , தங்களின் வேலையை சரிவர செய்ய முடியாது. அது ஒரு இந்துக்கோவில். இவர்கள் மாற்று மதத்தவர் , இவர்கள் எப்படி ஈடுபாடுடன் இருக்கமுடியும். இவர்கள் தற்பொழுது இருக்கும் பணிக்கு தக்கபடி வேறு இடங்களில் வேலைகளை தருவதாக அரசாங்கம் ஒத்துக்கொண்டும், இவர்கள் அதை மறுப்பது தவறு. ஒருவேளை தாங்கள் இந்த வேளையில் அதாவது, ஹிந்து கடவுளுக்கு இறைபணியில் முழு மனதுடன், ஈடுபாடுடன் சேவை செய்வதாக கூறினால், இவர்களின் மத்தை சார்ந்தவர்கள் இவர்களை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள். உதாரணத்துக்கு தாய்நாட்டு பாடல் பாட இசுலாமியர் சம்மதிக்கவில்லை. அது அவர்களின் கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது என்று கூறுகின்றனர். அதே போல வேற்று இறைவனை அவர்கள் ஆராதிக்கவோ , அல்லது பணிசெய்வதோ தவறாகும் என்று கூறலாம். எங்கேனும் ஒரு மசூதியில் மாற்றுமதத்தவரை வாடகைக்கு கூட இருக்க அனுமதிக்காதவர்கள் , ஹிந்து கோவிலில் கடைவைக்கவும். ஹிந்து கோவிலில் ஊழியம் செய்யவும் அனுமதிப்பது தவறு. அடிப்படையில் ஏழுமலையான் சைவம், ஆனால் இஸ்லாமிய சமூகத்தினருக்கு மாமிசம் ஒரு அடிப்படை தேவை. மாமிசத்தை உண்டுவிட்டு ஏழுமலையானுக்கு இவர்கள் ஈடுபாடுடன் சேவை செய்வார்கள் என்றால் நம்ப முடியுமா? ஏன் இந்த தேவையில்லாத பரீட்சை, இத்தனைநாள் இந்த வேறுபாடு வெளியே தெரியாமல் போய் இருந்தது, இனியும் அது தொடரக்கூடாது, நாளைக்கு யாரேனும் , இந்த மாற்றுமதத்தவரை கேலிசெய்வதோ, அல்லது அவமானப்படுத்துவதோ நடக்கலாம் . எதற்கு இந்த பிரச்சனை. எப்போது வெளிவந்துவிட்டது அப்போதே அதை களைவது நிம்மதி.
Rate this:
Cancel
Ganesh Shetty - chennai,இந்தியா
22-பிப்-201820:09:22 IST Report Abuse
Ganesh Shetty இதை தேவஸ்தானம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X