புதுடில்லி: 'கணித மேதை ஆரியபட்டாவின் மூளை அல்லது வீர சிவாஜியின் உடல்வாகு அல்லது நன்கு சிவப்பாக, உயரமாக குழந்தை பிறக்க வேண்டும்' என, விருப்பப்படும் பெற்றோருக்கு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சுலப வழியை காட்டுகிறது.
குஜராத் மாநிலம், ஜாம்நகரில் அமைந்துள்ளது, ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான, கர்ப்பவிக்யான் அனுசந்தான் கேந்திரா.
புத்தகங்கள் :
இந்த அமைப்பு, கர்ப்பிணிகளுக்கு ஆலோசனைகள் வழங்கும் சேவையை செய்கிறது. தற்போது, இந்த அமைப்பு, மந்திரங்கள் அடங்கிய, 10 சிடிக்கள் மற்றும் புத்தகங்களை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, இந்த அமைப்பின் மேலாளர், ரேகா கவுர் கூறியதாவது: கர்ப்பக் காலம், பெண்களுக்கு மிகவும் முக்கியம். கர்ப்பக் காலத்தின் போது, குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்; குழந்தை எப்படி இருக்க வேண்டும் என, பெற்றோர் நினைக்கின்றனரோ, அதற்கேற்ப பலன் கிடைக்கும்.
மந்திரங்கள் :
நம் புராணங்களில், இதற்கு தீர்வு அளிக்கும் பல மந்திரங்கள் உள்ளன. அந்த மந்திரங்களை, கர்ப்பக் காலத்தில் படித்து வந்தாலே, நீங்கள் விரும்பியபடி குழந்தைகள் பிறக்கும். இங்கு, கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் உள்ளனர். இந்த மந்திரங்கள் குறித்த பயிற்சி பெற்ற அவர்கள், கர்ப்பிணிகளுக்கு தேவையான மந்திரங்களை பரிந்துரைப்பர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE