அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆட்சியாளர்கள் செய்யாததை செய்வதே கொள்கை: கமல்

Updated : பிப் 22, 2018 | Added : பிப் 22, 2018 | கருத்துகள் (83)
Share
Advertisement
மதுரை: ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சி துவக்கிய நடிகர் கமல், மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட பயணம் மற்றும் நடவடிக்கை குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு அவர் அளித்த பேட்டி: புதுக்கட்சி என்பதால், காவிரி குறித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
 Kamal Haasan,  makkal neethi maiam, Madurai meeting, மக்கள் நீதி மய்யம், கமல், திராவிடம், தேசியம்,  நடிகர் கமல், கமல் அரசியல்  பயணம் ,  மதுரை மாநாடு , நாளை நமதே , கமலஹாசன், maiam, naalai namadhe, Kamal , Madurai conference, Madurai public meeting,People Justice, Dravidam, Nationality, Actor Kamal, Kamal Political Journey,

மதுரை: ஆட்சியாளர்கள் செய்ய தவறியதை செய்வதே எங்களது கொள்கை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி துவக்கிய நடிகர் கமல், மதுரையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட பயணம் மற்றும் நடவடிக்கை குறித்து நடந்த ஆலோசனைக்கு பிறகு அவர் அளித்த பேட்டி: புதுக்கட்சி என்பதால், காவிரி குறித்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அதில் பங்கேற்க சென்னை செல்கிறேன். அழைப்பு இல்லாவிட்டாலும் எங்கள் பணி தொடரும். புதுக்கட்சியாக சென்னைக்கு செல்கிறேன். வேலைகளை தொடர்வதற்கான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். அடுத்த மாத மத்தியில் பயணம் தொடரும்.


கிராமங்கள் செழிக்க

அடுத்த மாத நடுவில் வந்து கிராமங்கள் தத்தெடுப்பு திட்டம் தொடரும். அரசு ஒத்துழைப்பு வழங்கினால், அதற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். இதற்கு அரசு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், கிராமங்கள் தத்தெடுப்பது தொடரும். கிராம நிர்வாகிகளுடன் ஒப்பந்தம் போட்டு, அவர்களுக்கு தேவையான உதவி செய்வோம். தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களை செழிக்க வழி செய்வோம்.
தலைவன்


கட்சி உயர் மட்ட குழுவில் அறிஞர்கள், படித்தவர்கள், அறிவுள்ளவர்கள் சமூக ஆர்வம் உள்ளவர்கள் இடம்பெற்றுள்ளனர். நாங்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். கட்சியை பொறுத்தவரை நான் தலைவனாக இருப்பேன். நேற்று கூடிய கூட்டம் சினிமா நட்சத்திரத்தை காண அல்ல. உணர்வுபூர்வமாக மாற்றம் வர வேண்டும் என விரும்பியவர்கள் கூடினர். எத்தனை பேர் வந்தனர் என்பதை பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. விஞ்ஞான ரீதியாக எத்தனை பேர் கூடினர் என்பதை தெரிவிப்போம். சாதாரண மக்களுக்கு தெரிந்த நியாயத்தை வர்த்தகமாக்கிவிட்டனர். அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்வோம். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் என்ஜிஓ பாணியில் இருப்பதில் என்ன தவறு.


நட்சத்திரங்கள்

நான் இடதா வலதா, என்றால் நான் மையத்தில் உள்ளேன். கிராமியம் என்பது தேசியமே. திராவிடத்தை இழக்கவில்லை. தேசியத்தையும் இழக்கவில்லை. நாடு முழுவதையும் திராவிடம் ஆக்கிரமித்துள்ளது. கட்சியில் உள்ள எட்டு முனை நட்சத்திரங்கள் தென்னாட்டு மக்கள். ஆறு கைகள் புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-பிப்-201812:09:15 IST Report Abuse
sundar raja கொள்கை இல்லாதவர்கள் அல்லது கொள்கை என்றால் என்ன என்று தெரியாத விஜய காந்த் போன்றவர்கள் பேசுவது போல பேச கூடாது. பெரிய எதிர் பார்புகளுடன் இருக்கும் என் போன்ற படித்தவர்களை ஏமாற்றி நாடு ஆற்றில் விட கூடாது. மற்ற கட்சிகள் இரண்டு நிலவு இரண்டு சூரியன் கொண்டு வருவோம் என்று சொல்ல வில்லை. நீங்கள் அதை செய்து விடுவீர்களா. என்ன முட்டாள் தனமான பேச்சு.
Rate this:
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
23-பிப்-201806:19:18 IST Report Abuse
tamilvanan இது என்ன பிதற்றல். இது வரை ஆளும் கட்சியினர் ஊழலை எதிர்ப்போம் என்றே சொல்லிவருகிறார்கள். இவரது மய்யம் புறச்சி செய்து ஊழல் பகிரங்கமாக செய்வோம் என்கிறாரா? இனி எல்லாமே நடிகர் ஆட்சிதானோ?
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
23-பிப்-201804:09:22 IST Report Abuse
jagan நேரு/சாஸ்திரிக்கு பின் மொரார்ஜி வராம இருக்க இந்திராவை கொண்டுவந்து வாரிசு அரசியலை துவக்கியவர் கர்ம வீரர் காமராசர் ....அப்போவே எல்லாம் போச்சு....நீ ஆடு ராஜா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X