அரசியல் செய்தி

தமிழ்நாடு

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு

Updated : பிப் 24, 2018 | Added : பிப் 24, 2018 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை: ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு முன் நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார்.ஆலோசனைமதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் கமல், தொடர்ந்து திருச்சியில் வரும் ஏப்ரல் 4ம் தேதி மாநாடு நடத்த போவதாக அறிவித்துள்ளார். இது
Neduvasal ,actor Kamal,Makkal Meethi Maiam, கமல், நெடுவாசல் போராட்டம்,நெடுவாசல் மக்கள், மக்கள் நீதி மய்யம், நடிகர் கமல், திருச்சி மாநாடு, ஹைட்ரோ கார்பன் திட்டம், திருச்சி பொதுக்கூட்டம்,  கமல் அரசியல், நாளை நமதே ,Kamal, Neduvasal struggle, Neduvasal people,  Trichy conference, Hydrocarbon project, Trichy Public meeting, Kamal politics, naalai namathe,

சென்னை: ஏப்ரல் 4ம் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு முன் நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களை சந்திக்க, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் முடிவு செய்துள்ளார்.


ஆலோசனை


நெடுவாசல் செல்கிறார் கமல்

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கிய நடிகர் கமல், தொடர்ந்து திருச்சியில் வரும் ஏப்ரல் 4ம் தேதி மாநாடு நடத்த போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் அடுத்த கட்ட பயணம் மற்றும் கிராமங்கள் தத்தெடுப்பு தொடர்பாக ஆலோசனை நடந்தது.

ஏப்ரல் 4ல் திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்பது என்றும், முன்னதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களையும், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ,புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்களை நேரடியாக சந்திப்பது என்றும் கமல் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


கரை வேட்டி வேண்டாம்

கமல் வெளியிட்ட அறிக்கை: மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கரை வேட்டி கட்ட வேண்டாம். மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடியேற்ற வேண்டும். போலீசாரின் தடையை மீறி, பேனர் மற்றும் விளம்பரங்கள் வைக்கவேண்டாம். மதுரையை விட திருச்சியில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath,manjamedu - coimbatore,இந்தியா
24-பிப்-201820:48:06 IST Report Abuse
Sampath,manjamedu ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களை சந்திப்பதற்கு முன் ,அவர்களுக்கு ஆதரவாகவும்.இந்த ஆபத்தான திட்டத்திற்கு எதிராகவும் உங்கள் கருத்தை துணிவோடு பதிவு செய்து விட்டு சந்தித்தால் ,அந்த மக்களின் உணர்வுகளை புரிந்தாவது வைத்திருக்கீறிர்கள் என்று அர்த்தம்,கமலோட மொழியில் சொன்னால் கமல் நல்லவரா என்று தெரியல, இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன்,
Rate this:
Cancel
Nanthakumar.V - chennai,இந்தியா
24-பிப்-201820:22:16 IST Report Abuse
Nanthakumar.V Really super Tamilar Neethi.... Awesome thanks indeed.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-பிப்-201820:09:43 IST Report Abuse
Pugazh V ஹரஹரன் என்கிற ஜாதிவெறி பிடித்த ஒரு வாசகர் ஏன் மதவெறியுடன் அலைகிறார்?? கமல்ஹாசனுக்கு யார் உதவி பண்ணினால் இவருக்கெனன? உங்களிடம் கேட்டால் முடியாது ன்னு சொல்லிட்டு போங்க.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
27-பிப்-201812:47:58 IST Report Abuse
vadiveluஜாதி வெறியை விட மதவெறி கொடியது என்பதை புரிந்து கொள்ளவும்.அவரை ஜாதி வெறியால் ஒன்றும் கெடுதல் வராது, ஆனால் மதவெறி நாட்டையே அழித்து விடும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X