சென்னை: மக்கள் நீதி மையத்தின் தலைவராக இருக்கும் நடிகர் கமல், முன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை இரண்டாவது முறையாக சந்தித்துப் பேசியிருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் அவர், நடிகர் கமலிடம், 'எப்படி கட்சி நடத்தப் போகிறீர்கள்' என்று கேட்டிருக்கிறார். 'வழக்கமான கட்சி போல, நடத்தும் எண்ணம் இருந்தாலோ, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் எண்ணம் இருந்தாலோ, இப்போதே சொல்லி விடுங்கள். உங்களுக்கு உதவ மாட்டேன்' என்று டி.என்.சேஷன், நடிகர் கமிலிடம் கறாராக சொல்லி உள்ளார். அதற்கு கமல், 'அப்படி செய்யத்தான் ஆயிரம் கட்சிகள் இருக்கின்றனவே. அதில் இருந்து வேறுபட்டு, தூய்மையான எண்ணத்துடன், மக்கள் பணி செய்யவே புதிய கட்சித் துவங்கி இருக்கிறேன்.
உங்கள் ஆசியும், ஆதரவும் எனக்கு என்றைக்கும் வேண்டும். எந்த இடத்தில் நாங்கள் பிறழ்ந்தாலும், உரிமையுடன் அதை சுட்டிக் காட்டி, நேர்வழி பாதையில் எங்களை பயணிக்க வழிகாட்ட வேண்டும். அதற்காகத்தான், தொடர்ந்து உங்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறேன்' என்று நடிகர் கமல் சொல்ல, சேஷன் நெகிழ்ந்து போய் விட்டார் என, கமல் கட்சி பிரமுகர்கள் கூறுகின்றனர்.