அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் பாரம்பரியத்திற்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி

Updated : பிப் 24, 2018 | Added : பிப் 24, 2018 | கருத்துகள் (22)
Advertisement
PM Modi, CM Palanisamy,amma scooter,  சென்னை விழா, பிரதமர் மோடி , மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா,  அம்மா ஸ்கூட்டர் , கவர்னர் பன்வாரிலால் , மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் பன்னீர்செல்வம் , 
Chennai ceremony, Prime Minister Modi, late Chief Minister Jayalalitha birthday, Governor Banwarilal, Union Minister Pon radha Krishnan, Chief Minister Palanisamy, Deputy Chief Minister Panneerselvam,

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்ட துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மாலை சென்னை வந்தார். இவரை கவர்னர் பன்வாரிலால் , மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர், துணை முதல்வர், தலைமை செயலர் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து, இன்று மாலை, 5:20க்கு, சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில், 'ஐ.என்.எஸ்., அடையாறு' ஹெலிகாப்டர் தளம் செல்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, கலைவாணர் அரங்கம் செல்கிறார். அங்கு, பணிபுரியும் மகளிருக்கு, இரு சக்கர வாகனங்கள் வாங்க, 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும், 'அம்மா ஸ்கூட்டர்' திட்டத்தை, துவக்கி வைக்கிறார். ஜெ., பிறந்த நாளை முன்னிட்டு, இத்திட்டம் துவங்கப்படுகிறது. இதற்காக, 1,000 இரு சக்கர வாகனங்கள், கலைவாணர் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.


விழாவில், முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சி முடிந்து, மாலை, 6:35க்கு, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு பிரதமர் செல்கிறார். இரவில் அங்கு தங்கும் பிரதமர், முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார். முதல்வர், துணை முதல்வரும் சந்தித்து பேச, நேரம் கேட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gunasekaran -  ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-201819:18:18 IST Report Abuse
Gunasekaran கஞ்சிக்கு உப்பில்லை என்றால் பால்பாயசத்திற்கு நெய்விட்ட கதை இந்த ஸ்கூட்டர் திருவிழா. இந்தபணத்தில் அரசு கடனை அடைத்திருக்கலாம். மோதி விரும்பாத திட்டம்
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
24-பிப்-201819:16:31 IST Report Abuse
GB.ரிஸ்வான் பிரதமர் மோடி.... கடைசியில் வணங்கியே விட்டார்....
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
24-பிப்-201819:13:42 IST Report Abuse
Needhiyin Pakkam Nil ஜெயாவின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பல லட்சம் மரங்கள் நடப்படுகிறது ஆனால் அதெல்லாம் எங்கு நடப்படுகிறது யார் தண்ணீர் ஊற்றுகிறார்கள் என்பது மட்டும் இன்று வரைக்கும் பரம ரகசியமாகவே இருந்து கொண்டிருக்கிறது.............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X