அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் தலை வணங்குகிறேன்: மோடி

Updated : பிப் 24, 2018 | Added : பிப் 24, 2018 | கருத்துகள் (60)
Advertisement
 பாரதி ,பிறந்த மண்ணில் ,நிற்பதற்கு, பெருமை ,மோடி

சென்னை: தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் தலை வணங்குகிறேன் என சென்னையில் நடந்த விழாவில் தமிழில் பேசினார் பிரதமர் மோடி..
மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம்.தமிழக மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் தலை வணங்குகிறேன். மகா கவி பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமை கொள்கிறேன். ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பங்கு பெறுவது மகிழ்ச்சி. அவரின் கனவுத் திட்டமான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கி வைப்பதில் பெருமை கொள்கிறேன். பெண்கள் மேம்பாடு சுற்றுசூழல்பாதுகாப்பு ஆகியஇரு திட்டங்களும் மகத்தானது. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 4 லட்சத்தது 16 ஆயிரம் கோடி ரூபாய் எந்த வித உத்தரவாதமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள் 70 சதவீதம் பேர் பெண்கள்.ஜெயலலிதா எங்கிருந்தாலும் உங்கள் முகங்களில் மகிழ்ச்சியை கண்டு அவர் மகிழ்வார். குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் குடும்பமே படித்ததற்கு சமம். பெண்ணின் நலம் பேணினால் குடும்ப நலன் மேம்படும்.சுகாதாரம் விவசாயிகளின்நலனை இலக்காக கொண்டு அரசு செயல்படுகிறது. சூரிய மின் சக்தி, தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு தமிழகத்திற்கு அதி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாய கூட்டணியில்14-வது நிதி குழுவின் மூலம் தமிழகத்திற்கு ரூ.1.80லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியை காட்டிலும் பாஜ ஆட்சியில் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகப்பேறு விடுமுறை 12 வாரங்களில் இருந்து 26 வாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தின் மூலம் அதிகளவில் பெண்கள் பயன்பெறுகின்றனர். 31 கோடி ஜன்தன் திட்டத்தில் 16 கோடி வங்கிகணக்குகள் பெண்களுடையது. 3.5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பெண்கள் உரிமை மதிக்கப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 9.5 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் குடும்பத்திற்கு பெரும் பயனை தரும்.

மத்திய அரசின் திட்டத்தின் மூலம் தமிழக விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். மீன்பிடித்தலை நவீனமயமாக்கியதன் மூலம் தமிழகம் பயன் பெற்றது. மீனவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.100 கோடி வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக 5 மகளிருக்கு மானிய விலை ஸ்கூட்டரை வழங்கினார் .

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Chennai,இந்தியா
25-பிப்-201800:47:23 IST Report Abuse
krishnan சமஸ்கிரத விரும்பிகள் இப்போ என்ன சொல்லறீங்க. நொடேவுக்கு கீழ வெச்சு ஒரு காட்டு காட்டனு மிலா, அதோட எபெக்ட் தன.
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
24-பிப்-201823:02:56 IST Report Abuse
krishnan ஹாஹா
Rate this:
Share this comment
Cancel
Nana -  ( Posted via: Dinamalar Android App )
24-பிப்-201822:37:31 IST Report Abuse
Nana தமிழ் சமஸ்கிருதத்தை விட தொன்மையானது என்று இவர் சொன்னது உம்மையானால் ஐ நா (United Nations) வில் தமிழை பர்வர்த்தனை மொழியாக்கப் பாபுபடுவாறா? ஆடு நனைகிறது என்று ஓனாய் கவலைப்பட்டதாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X