பொது செய்தி

இந்தியா

மறைந்தார் 'மயிலு'ஸ்ரீதேவி

Updated : பிப் 25, 2018 | Added : பிப் 25, 2018 | கருத்துகள் (100)
Share
Advertisement
சென்னை: தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். தமிழில் வெளியான
மறைந்தார், 'மயிலு' ,ஸ்ரீதேவி

சென்னை: தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சொந்த ஊராக கொண்ட இவர் தனது 4 வயதிலேயே திரை துறையில் நுழைந்து விட்டார். தமிழில் வெளியான துணைவன் என்ற படத்தில் முருக கடவுள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் நடித்ததில் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.
சிவாஜிகணேசன், கமல், ரஜினி போன்ற பிரபல தமிழ் நடிகர்களுடனும், முன்னணி தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்களுடனும் நடித்தவர்.
தமிழ்த்திரைப் படங்களில் புகழின் உச்சிக்கு சென்ற ஸ்ரீதேவி. இந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். பின் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி, இங்கிலிஸ் விங்கிலிஸ், புலி போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் அவர் நடித்த மாம் என்ற இந்தி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.


அவருடைய இறப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு: http://cinema.dinamalar.com

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abupollachi - pollachi,இந்தியா
27-பிப்-201817:29:28 IST Report Abuse
abupollachi இந்த மண்ணை விட்டு சென்றாலும் உங்கள் நினைவுகள் என்றும் எங்களையும் திரை உலகையும் விட்டு பிரியாது ........ ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.........
Rate this:
Cancel
Afsaral Ali - Bangalore,இந்தியா
26-பிப்-201813:43:47 IST Report Abuse
Afsaral Ali ஸ்ரீ தேவி ஒரு திறமையான நடிகை .உடல் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுத்துருக்கலாம் .ஆழ்ந்த அனுதாபங்கள் .
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
26-பிப்-201802:14:56 IST Report Abuse
jagan "டுவிட்டர் பக்கத்தில், 'ஏதோ தப்பாக தெரிகிறது... வித்தியாசமான பதற்றம் நிலவுகிறது... ஏன் என, தெரியவில்லை' என, அமிதாப் ட்வீட் செய்திருந்தார் ...விஜாரிக்க வேண்டும், துபாய் தாவூத் ஆட்கள் அதிக நடமாட்டம் உள்ள இடம்....நம்ப முடியவில்லை, நாம பரிசோதனை செய்யவேண்டும்.....அமிதாபையும் தனியாக விஜாரிக்க வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X