எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நடந்தது என்ன?
நடிகை ஸ்ரீதேவி மரணம் துபாயில் நடந்தது என்ன?

துபாய்:இந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்த, பிரபல நடிகை ஸ்ரீதேவி, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றபோது, மாரடைப்பால் காலமானார்; அவருக்கு வயது, 54.

Sridevi, Dubai, Bonnie Kapoor,ஸ்ரீதேவி மரணம் ,நடிகை ஸ்ரீதேவி, துபாய், போனி கபூர்,  ஸ்ரீதேவி மாரடைப்பு , பிளாஸ்டிக் சர்ஜரி ,Sridevi death , Heart attack, actress Sridevi ,  அறுவை சிகிச்சை , Plastic surgeries , cardiac arrest,  Sridevi , RIP Sridevi , actress sridevi, ஸ்ரீதேவி கணவர் போனி கபூர்,ஸ்ரீதேவி மகள் குஷி கபூர், ராஸ் அல் காய்மா,  ஸ்ரீதேவி படங்கள்,Sridevi husband Boney Kapoor,Sridevi daughter Kushi Kapoor, Ras al-Kaima,ஸ்ரீதேவி,


ஸ்ரீதேவியின் இறுதிச் சடங்கு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இன்று நடக்கும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது.ஹிந்தி திரையுலகின், முதல், 'லேடி சூப்பர் ஸ்டார்' என்ற பெருமைக்குரியவர், நடிகை ஸ்ரீதேவி. தமிழகத்தின் சிவகாசியில் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் நடித்து, புகழ் பெற்றவர்.


ஸ்ரீதேவி, தன் உறவினரும், நடிகருமான, மோகித் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, குடும்பத்துடன், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சென்றிருந்தார்.அவருடன், கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி, 17, சென்றிருந்தனர். மூத்த மகள் ஜான்வி, 20, தற்போது, மராத்தி படத்தில் நடித்து வருவதால், துபாய் செல்லவில்லை.

துபாய் அருகேயுள்ள, ரஷ் அல் கய்மா என்ற நகரில், பிப்., 23ம் தேதி, மோகித் திருமணம்
நடந்தது. அப்போது, திரை நட்சத்திரங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்த, 'செல்பி' படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் ஸ்ரீதேவி பகிர்ந்திருந்தார்.


கதறி அழுதனர்திருமண நிகழ்ச்சி முடிந்தபின், தன் குடும்பத்தினருடன், ஸ்ரீதேவி, துபாயில் உள்ள, எமிரேட்ஸ் டவர்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீதேவியை சோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக

தெரிவித்தனர். இதைக்கேட்டதும், போனி கபூர், குஷி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.


இதைத் தொடர்ந்து, ஸ்ரீதேவியின் உடல், துபாயில் உள்ள, போலீஸ் துறை தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில், பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் சான்றிதழ் பெறும் நடைமுறை கடுமையாக பின்பற்றப்படுவதால், ஸ்ரீதேவி உடலை, மும்பை கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.


துபாயில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள், ஸ்ரீதேவி உறவினர்களுடன் இணைந்து, இதற்கான
நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர்.இதையடுத்து, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முடிந்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இன்று பகலில் உடல் ஒப்படைக்கப்படும் என,அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றே மும்பை எடுத்து வரப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடக்கும் என, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.


ஸ்ரீதேவியின் உடலை எடுத்து வர, தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான விமானம், துபாய் சென்றுள்ளது.ஸ்ரீதேவியின் மரணச் செய்தி கேட்டதும், மும்பை உள்ளிட்ட நகரங்களில், சினிமா ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாயினர். திரையுலக பிரபலங்களும், இந்த மரணத்தை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர். மும்பை, அந்தேரி பகுதியில் உள்ள, ஸ்ரீதேவி வீட்டின் முன், ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.


'மயிலு' கதாபாத்திரம்ஸ்ரீதேவி, 1963ல், சிவகாசியில் பிறந்தவர். குழந்தை நட்சத்திரமாக, கந்தன் கருணை, துணைவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நம் நாடு படத்தில், எம்.ஜி.ஆருடனும், ஆதிபராசக்தி படத்தில்,
ஜெயலலிதாவுடனும், குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி நடித்திருந்தார்.கடந்த, 1976ல்,
பாலசந்தரின், மூன்று முடிச்சு வாயிலாக, கதாநாயகியாக அறிமுகமானார். பாரதிராஜாவின், 16 வயதினிலே படத்தில், ஸ்ரீதேவி ஏற்று நடித்த, மயில் கதாபாத்திரம், இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.இதையடுத்து, ஹிந்தி பட உலகிலும், தன்னை நிலை நிறுத்தினார்.


பிரபல பாலிவுட் தயாரிப்பாளர், போனி கபூரை திருமணம் செய்தபின், திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்த இவர், 2012ல், இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் வாயிலாக, மீண்டும், 'ரீ- என்ட்ரி' ஆனார். தமிழில் கடைசியாக, விஜயுடன், புலி படத்திலும், ஹிந்தியில், 2017ல், மாம் என்ற படத்திலும் நடித்திருந்தார். போனிகபூரை

Advertisement

மணந்து, இரண்டு பெண்களுக்கு தாயாக, குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வந்தார்.


தமிழகம், ஆந்திரா, கேரள அரசு விருது களையும், நான்கு முறை, பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். கலைத் துறையில், இவரது சேவையை பாராட்டி, 2013ல், மத்திய அரசு, பத்மஸ்ரீ விருதை வழங்கி சிறப்பித்தது. ஸ்ரீதேவியின் மறைவு, நாடு முழுவதும், தீராத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்ரீதேவியின் மரணத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


அமிதாப்பின் உள்ளுணர்வுஸ்ரீதேவி மறைவு செய்தி, இந்திய நேரப்படி, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு ஊடகங்களில் வெளியானது. அதற்கு முன், 1:15 மணியளவில், நடிகர் அமிதாப் பச்சன் தன், டுவிட்டர் பக்கத்தில், 'ஏதோ தப்பாக தெரிகிறது... வித்தியாசமான பதற்றம் நிலவுகிறது... ஏன் என, தெரியவில்லை' என, குறிப்பிட்டிருந்தார்.அவர், டுவிட் செய்த சிறிது நேரத்தில், ஸ்ரீதேவி மறைவு செய்தி வெளியானது. இதையடுத்து, அமிதாப் பச்சனின், டுவிட்டர் பதிவு இணையதளத்தில், அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 'ஸ்ரீதேவியின் மறைவு குறித்து, அமிதாப் பச்சனின் ஆறாம் உணர்வுக்கு முன்பே தெரிந்துள்ளது' என, நெட்டிசன்கள், 'ரீ -டுவிட்' செய்துள்ளனர்.


சொந்த ஊரில் சோகம்விருதுநகர், சிவகாசி மீனம்பட்டியில் ஸ்ரீதேவி, 4 வயது வரை தான் இருந்தார். பின், சென்னைக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். 1989ல், ஸ்ரீதேவியின் சித்தப்பா, சிவகாசி தொகுதி, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு பிரசாரம் செய்ய, ஸ்ரீதேவி குடும்பத்துடன் வந்தார். பாலிவுட் சென்றபின், சிவகாசியுடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. நான், ஸ்ரீதேவி
சிறுவயதில் வசித்த வீட்டில் தான் குடியிருக்கிறேன். சிவகாசி மக்கள் மனதில் ஸ்ரீதேவிக்கு என்றைக்குமே இடம் உள்ளது. அவரின் மறைவு, எங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சீனிவாசன்

ஸ்ரீதேவியின் உறவினர், சிவகாசி


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ulagan - coloumbu,இலங்கை
27-பிப்-201809:27:19 IST Report Abuse

ulaganஸ்ரீதேவி, ஏழைகளுக்கு உதவிருந்தால் பாராட்டலாம் , சாவித்திரியும் குடித்து மரணம் தழுவினனார் மனிதன் பிறப்பதும் இறப்பதும் சகஜம்தான் அவருடைய மரணம் சினிமா உலகத்திற்கு இழப்பு அவ்வளுவுதான் ,

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26-பிப்-201815:56:42 IST Report Abuse

Endrum Indianயார் இறந்தாலும் ஒரு மரியாதை நிமித்தம் நிச்சயம் அவர் ஆன்ம சாந்தி பெறவேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள், அப்படியே நானும். ஆனால் இதை மீறி சில கேள்விகள். இது தான் வாழ்க்கையின் யதார்த்தம். 1 ) எப்படி இறந்தார், வாட்ஸப்பில் விரலாக் பரவுகின்றது. உடல் வனப்பு, உடல் உடைக்க சாப்பிட்ட மருந்தினால்-ஆகவே தவறு யாருடையது. 2 ) தரித்திர புத்திரன் சமூக ஆர்வலர்கள் உலருக்கின்றார்களே-குழந்தை பிராயத்தை தொலைத்த குழந்தை தொழிலாளிகள் என்று வருடக்கணக்காய் .????? அப்போ 4 வயதில் நடித்த ஸ்ரீதேவி 7 வயதில் குழந்தை நட்சத்திரம் அவார்டு அப்போ இவர் குழந்தை தொழிலாளி அல்லவா???? 3 ) அவ்வளவு முக்கிய நிகழ்வு-உறவினர் வீட்டில் பெரிய மகள் போகவில்லையாம்-இது தான் குடும்பம், கேட்டால் படப்பிடிப்பு???? 4 ) வீதியில் போகும் எவரையும் காசு மிகுந்த அளவில் கொடுத்தால் பல ஸ்ரீதேவிகள் உருவாவார்கள் 5 ) பணம் கொடுத்தார்கள் நடிப்புக்காக அவள் நடித்தார், அவ்வளவே, இதில் என்ன ஒரு ஸ்ரீதேவி போனால் ஏதோ உலகமே இருந்து போனது போல?நாட்டுக்கு என்ன செய்தார், ஏழை எளியோர்களுக்கு தன பணத்தில் இருந்து ஏதோ ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து ஏதாவது செய்தாரா? இல்லவே இல்லை. பின் எதற்கு இந்த ஆஹா ஓஹோ.???? 6 ) போனி கபூரின் முதலாம் மனைவியை துரத்தி துரத்தி அடித்து இரண்டாம் மனைவி, இந்த மாதிரி நமது குடும்பங்களில் நிகழ்ந்தால் நாடு வெளங்கிடும். 7 ) அந்த உடலை உடனே திருப்பிக்கொடுக்க நமது அரசு மிகுந்த தீவிரம் காட்டியது, இதே ஒரு சாதாரண மனிதருக்கு காண்பிக்குமா? கொஞ்சம் அல்ல நிறையவே சந்தேகம், உடல் அம்பானி விமானத்தில் கொண்டு வரப்பட்டது???அந்த அளவுக்கு இவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும் பொது நாம் சாதாரண மக்கள் எதற்கு இதை இந்த அளவு உச்சத்தில் கொண்டு போக வேண்டும். 7 ) வெறும் உடல் காட்டி நடிக்கும் நடிக /நடிகையர்களுக்கு ஏன் இந்த அளவு நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். காமராஜரை, கக்கனை, சுப்பிரமண்யம் ..............முதல் கலாம் வரை எல்லோரையும் மறந்து விட்டோம். பழைய வ.வூ.சி, பாரதியார் எல்லாம் எப்போதோ எப்போதோ மறந்து விட்டோம். ஏதோ கடன் எழவே என்று அவர்கள் பிறந்த மறைந்த நாளில் ஒரு வாழ்த்து சொல்வது, ஆனால் அவர்கள் சொன்ன நல்லொழுக்கங்களை நாம் மறந்து விட்டோம். டாஸ்மாக் நாடு"குடி" மக்களே தயவு செய்து உடல் காட்டி பிழைக்கும் இந்த நடிகநடிகையர் பின்னாடி செல்லாதீர் தயவு செய்து. அவர்களுக்கு வேண்டியது பணம், புகழ் அது உங்கள் ஆஹா ஓஹோவால் அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைக்கின்றது. ஆனால் நீங்கள் செய்வது உழைப்பு, தியாகம், இதை உணருங்கள். திருந்துங்கள்.

Rate this:
raghavan mageswary - chennai,இந்தியா
27-பிப்-201809:54:35 IST Report Abuse

raghavan mageswaryஅற்புதம். ...

Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
26-பிப்-201815:22:37 IST Report Abuse

Tamilnesan வட இந்தியர்கள் மனைவியை கொலை செய்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வது சாதாரணமாக நடக்கும் நிகழ்வாகும். உதாரணம் சுனந்தா சசி தரூர். அதுவும் பிரபலங்கள் என்றால் கேக்கவே வேண்டாம். அதுவும் சினிமா துறையில் வீட்டில் டீ குடிப்பது போல சதிவேலைகள் நடக்கும். எனவே, இந்த வழக்கை சிபிஐ-இடம் ஒப்படைக்க வேண்டும். குற்றவாளி சாகும்வரை தூக்கிலிடுபட வேண்டும்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X