தத்ரூபமாக இருக்கு ஜெ., சிலை : அடித்து சொல்கிறார் அமைச்சர்

Added : பிப் 26, 2018 | கருத்துகள் (16) | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்: ''அ.தி.மு.க., அலுவலகத்தில், ஜெ., சிலை தத்ரூபமாக உள்ளது,'' என, பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., அலுவலகத்திற்கு வரும் போது, ஜெயலலிதா எப்படி கையசைத்து வருவாரோ, அதுபோல் தத்ரூபமாக சிலை இருக்கிறது. அ.தி.மு.க., ஒன்றரை கோடி தொண்டர்களின் பலத்தால், ஆலமரம் போல, அஸ்திவாரம் போட்டு,
தத்ரூபமாக இருக்கு ஜெ., சிலை : அடித்து சொல்கிறார் அமைச்சர்


ஸ்ரீவில்லிபுத்துார்: ''அ.தி.மு.க., அலுவலகத்தில், ஜெ., சிலை தத்ரூபமாக உள்ளது,'' என, பால்வள துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., அலுவலகத்திற்கு வரும் போது, ஜெயலலிதா எப்படி கையசைத்து வருவாரோ, அதுபோல் தத்ரூபமாக சிலை இருக்கிறது. அ.தி.மு.க., ஒன்றரை கோடி தொண்டர்களின் பலத்தால், ஆலமரம் போல, அஸ்திவாரம் போட்டு, 'ஸ்டிராங்கா' இருக்கிறோம். இதிலிருந்து ஒரு செங்கல்லை கூட, யாரும் உருவ முடியாது.பழுத்த மரமான எங்களை பற்றி பேசித்தான் பலர், 'பப்ளிசிட்டி' பெறுவர். ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ்., இருவருமே ஒன்றாக இணைந்து கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துகின்றனர். அவர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் வேலையை மீடியாக்கள் செய்கிறது. ஆனாலும், ஒன்றுபட்டு வழி நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், மதுரையில் அளித்த பேட்டி: கமல் கூறுவதற்காக மக்கள் பொங்க மாட்டார்கள். அந்தளவிற்கு சட்டம், ஒழுங்கு பிரச்னை இல்லை. மக்களுக்கு தேவையான திட்டங்களை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில், இரவை பகலாக்கி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் செயல்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா
26-பிப்-201819:32:51 IST Report Abuse
Ganapathysubramanian Gopinathan நிச்சயம் அடித்து தான் சொல்ல முடியும். ஏனெனில் மக்களை வரிப் பணம் மூலம் கொள்ளை அடித்து, அதிகாரத்தால் நியாய அநியாயங்களை கதற அடித்து கான்ட்ராக்டர்களுக்கு வயிற்றில் அடித்து, அவர்களிடமிருந்து கமிஷன் அடித்து செய்த சிலை அல்லாவா..
Rate this:
Cancel
Prem - chennai,இந்தியா
26-பிப்-201818:22:58 IST Report Abuse
Prem Unmiyana jayalalitha thondarukku therium athu yaar endru
Rate this:
Cancel
JANANI - chennai,இந்தியா
26-பிப்-201817:31:16 IST Report Abuse
JANANI avaravar thanipatta karuthukkalai solla thaan seivaanga..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X