ஐ.ஐ.டி.யில் சமஸ்கிருத பாடல்: ஸ்டாலின் கண்டனம்

Added : பிப் 26, 2018 | கருத்துகள் (35)
Advertisement
சென்னை: ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குபதிலாக சமஸ்கிருத பாடல் இடம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து ஸ்டாலின் கூறியது, தமிழ்நாட்டில் தமிழ்தாய் வாழ்த்து மீண்டும் ஒரு முறை அவமதிப்பு
ஐ.ஐ.டி.யில், சமஸ்கிருத, பாடல், ஸ்டாலின், கண்டனம்

சென்னை: ஐ.ஐ.டி.யில் தமிழ்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குபதிலாக சமஸ்கிருத பாடல் இடம் பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து ஸ்டாலின் கூறியது, தமிழ்நாட்டில் தமிழ்தாய் வாழ்த்து மீண்டும் ஒரு முறை அவமதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. வேற்றுமை ஒற்றுமை காணும் நாட்டின் பண்முகத்தன்மையை சிதைக்கும் அணுகுமுறையை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழை புறக்கணிப்பது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopalan k v - bangalore,இந்தியா
27-பிப்-201817:37:40 IST Report Abuse
venugopalan k v முதலில் இவர் தந்தையின் பெயரை அன்புச்செல்வன் என்று மாற்ற vendum
Rate this:
Cancel
kumar - chennai,இந்தியா
27-பிப்-201817:05:34 IST Report Abuse
kumar நிகழ்ச்சி ஐஐடியில் கடல்சார் தொழில்நுட்ப மையம் அமைப்பதற்கான தொடக்க விழா. அது எத்தகைய தொழில்நுட்பம், அதைப் பற்றி யார் என்ன பேசினார்கள் என்று சொல்லக் காணோம். கடவுள் வாழ்த்தைப் பிடித்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டு மாநில அரசாணையில் போட்டுவிட்ட (அதுவும் விருப்பத்திற்குரியாதாக, கட்டாயமாக அல்ல) தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடவில்லை என்று குதிகுதியென்று குதிக்கிறார்கள். இத்தனைக்கும் அது மாநில அரசு நிகழ்ச்சியும் அல்ல. ஒரு கல்வி நிறுவனம் நடத்தும் தனியார் நிகழ்ச்சி, Private event. மகாகணபதிம் என்ற பாடல் தமிழ்மண்ணின் தவப்புதல்வர்களில் ஒருவரான முத்துசாமி (தமிழ்ப்பெயர்) தீட்சிதர் என்ற இசைமேதை இயற்றியது. சிந்துபைரவி என்ற தமிழ்த் திரைப்படத்திலும் அது வந்துள்ளது. ஔவையார் உட்பட தமிழ்ச் சான்றோர்கள் பலரும் போற்றிய வணங்கிய ஆனைமுகக் கடவுளை, தமிழ்மண்ணின் ஆலமரத்தடியெங்கும் அமர்ந்து அருள்புரியும் ஏழை எளியோர்களின் தெய்வமான பிள்ளையாரைக் குறித்தது. ஏன் தமிழ்நாட்டில் அதைப் பாடக்கூடதா? என்னடா உளர்றீங்க? என்னவோ சம்ஸ்கிருதப் பாடலும் கணபதி வந்தனமும் உலகத்திலேயே மோசமான விஷயம் என்பது போல வெறுப்பைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வீணர்கள். இந்தியாவில் எத்தனையோ அரசு நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சுலோகங்களும் வேதமந்திரங்களும் ஓதப்படுகின்றன. ஏராளமான பள்ளிக்கூடங்களின் கடவுள் வாழ்த்துகளாகவும் அவை உள்ளன. செயற்கைக் கோளை செலுத்துமுன்பு கூட தேங்காய் உடைத்து வேதஒலியுடன் பூஜை நடக்கிறது. இந்த தேசத்தில் தொன்மைக் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் மகத்தான பண்பாட்டை நினைவுகூரும் விதமாகத் தான் இதனை நாட்டுமக்கள் அனைவரும் கருதுகிறோம். இப்படித் தான் எங்கள் தெய்வங்களைப் போற்றுவோம், பாடுவோம். உனக்குப் பிடிக்கவில்லையென்றால் காதைப் பொத்திக் கொள், கண்ணை மூடிக்கொள், அல்லது ஒழிந்து போ. இந்த தேசத்தை இணைத்து ஒன்றாகவும் உயிர்த்துடிப்புடனும் வைத்திருக்கும் பண்பாட்டின் மீது இந்தக் கயவர்கள் தொடர்ந்து வெறுப்பை உமிழ்வது அவர்களது தேசவிரோத, பண்பாட்டு அழிப்பு மனநிலையை அம்பலப் படுத்துகிறது. தமிழ்நாட்டு இந்துக்கள் முட்டாள்கள் அல்ல, அவர்கள் இன்னும் உறக்கத்தில் இல்லை என்பதை இந்தப் புல்லர்கள் புரிந்து கொள்ளட்டும்.
Rate this:
Cancel
Siva_Muscat - Muscat,இந்தியா
27-பிப்-201813:16:38 IST Report Abuse
Siva_Muscat தேர்தல் அறிக்கைல இந்து கோவில் சொத்துக்களை பட்டா போட்டு குடுக்கணும்னு சொல்ற சுடலையை என்ன பண்றது. இவரு தமிழை காப்பாத்த போறாரா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X