பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பயணியின், 'டுவிட்டர்' புகாருக்கு உடனடி தீர்வு! அதிரடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே அமைச்சர்

கோவை: 'டுவிட்டர்' மூலம் புகார் சொன்ன ரயில் பயணியின் குறையை, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உடனடியாகத் தீர்த்து வைத்தார்.

Railway,Piyush Goyal,Twitter complaint,டுவிட்டர் புகார்,  ரயில் பயணி,  ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல், ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், ரயில் கழிவறை, ராஜ்குமார், கழிவறை சுத்தம் , Railway Minister Piyush Goyal, Yercaud Express Train, Rail Toilet, Rajkumar, Toilet Cleaning,  train traveler,

கோவையை அடுத்த, கோவைப்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35. இவர், சேலம் மாவட்டம், சங்ககிரியில், தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து சங்ககிரிக்கு, ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், 'எஸ் - 13' பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
இவரது படுக்கை, கழிவறைக்கு அருகே அமைந்திருந்தது. கழிவறை சரிவர சுத்தம்

செய்யப்படாமல் இருந்ததால், துர்நாற்றம் வீசியது. ராஜ்குமார், தன் டுவிட்டர் கணக்கில், ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்குகழிவறை பிரச்னையை, 'டுவிட்' செய்திருக்கிறார்.

சற்று நேரத்தில், இந்திய ரயில்வே சேவா அமைப்பில் இருந்து, 'தங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு வருந்துகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவலை அனுப்பி இருக்கிறோம். தங்கள், பி.என்.ஆர்., எண்ணைத் தாருங்கள்' என, டுவிட்டரில் பதில் வந்திருக்கிறது.

ராஜ்குமார், பி.என்.ஆர்., எண்ணை அனுப்பி வைக்க, 'உங்கள் பிரச்னையை உடனடியாகத் தீர்த்துவைக்கிறோம்' என, டுவிட்டர் மூலமே தகவல் வந்தது.
அரக்கோணத்துக்கு நள்ளிரவு, 12:00 மணிக்கு ரயில் வந்தது. அங்கு, ரயில் நிலைய அதிகாரியுடன், நான்கு துப்புரவு பணியாளர்கள்

Advertisement

தயாராக நின்றனர். அவர்கள், கழிவறையை சுத்தம் செய்து முடித்து, ராஜ்குமாரிடம் தெரிவித்து சென்றனர்.

'தீர்வுக்கு மகிழ்ச்சி'



ராஜ்குமார் கூறுகையில், ''நள்ளிரவு நேரத்தில், நான் அனுப்பிய புகாரை கவனத்தில் எடுத்து, உடனடியாகத் தீர்த்து வைத்த ரயில்வே அமைச்சரின் சுறுசுறுப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
28-பிப்-201807:47:40 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>நாற்றம் மட்டுமா இருக்கு

Rate this:
Kannan Iyer - Bangalore,இந்தியா
27-பிப்-201819:27:24 IST Report Abuse

Kannan Iyerநம் மக்களுக்கு பாராட்டும் மனப்பான்மை போய்விட்டது. பயணியிடம் அமைச்சரின் நம்பர் மட்டும் இருந்திருக்கும். உடனடியாக சரிசெய்வது பாராட்ட தகுந்ததாக இருந்தாலும் யார் தன் வேலையை சரியாக செய்யவில்லை என்று அறிந்து அவர்கள் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் மக்கள் கழிவறை உபயோகித்த பின் சரியாக நீர் விட்டு சுத்தம் செய்வது கூட கிடையாது.

Rate this:
27-பிப்-201819:07:41 IST Report Abuse

ஆப்புபிறகு என்ன? எல்லோரும் டுவிட்டர் மூலம் ரயில் நாத்தங்களை அமைச்சருக்கு அனுப்பிடுங்க....

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X