9 குழந்தைகள் மீது காரை ஏற்றி கொன்ற பா..ஜ. பிரமுகர் மீது எப்.ஐ.ஆர்.

Added : பிப் 27, 2018 | கருத்துகள் (117)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில் 9 பள்ளி குழந்தைகள் மீது காரை ஏற்றி கொன்ற பா..ஜ. பிரமுகர் மனோஜ் பைதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்துள்ளனர்.பீஹாரின் முஷாபர்பூர் மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி அசுரவேகத்தில் வந்த கார் சாலையின் குறுக்கே நடந்து சென்ற பள்ளிக்குழந்தைகள் மீது மோதியது. இதில் 9 குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ
School children, Manoj Paitha,BJP,பள்ளி குழந்தைகள் , மனோஜ் பைதா,சி.சி.டி.வி., காங்கிரஸ் தலைவர் ராகுல், பீஹார் முதல்வர் நிதீஷ், மதுவிலக்கு,  பா.ஜ, எப்.ஐ.ஆர்,  CCTV, Congress leader Rahul, Bihar Chief Minister Nitish, Prohibition,  FRI,

பாட்னா: பீஹாரில் 9 பள்ளி குழந்தைகள் மீது காரை ஏற்றி கொன்ற பா..ஜ. பிரமுகர் மனோஜ் பைதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பீஹாரின் முஷாபர்பூர் மாவட்டத்தில் கடந்த 24-ம் தேதி அசுரவேகத்தில் வந்த கார் சாலையின் குறுக்கே நடந்து சென்ற பள்ளிக்குழந்தைகள் மீது மோதியது. இதில் 9 குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தனர். மோதிய கார் அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. மேலும் கார் அனாதையாக விடப்பட்டிருந்தது. காரை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பா.ஜ. பிரமுகர் மனோஜ் பைதா மீது போலீசார் எப்.ஐ.ஆர்.பதிவு செய்துள்ளனர். அவரை மாநில பா.ஜ. மேலிடம் சஸ்பெண்ட் செய்துள்ளது.


ராகுல் கண்டனம்இது குறித்து காங். தலைவர் ராகுல் கூறியது, பீஹாரில் முதல்வர் நிதீஷ் மதுவிலக்கை அமல்படுத்தியதாக கூறினார்.ஆனால் அவர் கூட்டணி வைத்துள்ள பா.ஜ. பிரமுகர் குடி போதையில் தான் 9 குழந்தைகள் மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார். என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
27-பிப்-201820:27:07 IST Report Abuse
ஜெயந்தன் Bjp காரனுங்களுக்கு நாடு, நடு ரோடு ரெண்டுமே ஒன்றுதான்..கொலை களம்
Rate this:
Cancel
மக்குமக்கு - அரையூர்,இந்தியா
27-பிப்-201819:06:44 IST Report Abuse
மக்குமக்கு பல கோடி பேர் உறுப்பினர்கள் உள்ள கட்சி பிஜேபி . இதில் ஒருவர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த கட்சியை குறை சொல்லுபவர்கள் . ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தீவிரவாதிகளாக உள்ளனர் . கடத்தல் , கொலை , கற்பழிப்பு செய்தால் ஒட்டு மொத்த அந்த சமூகத்தை குற்றவாளிகளாக சொல்ல முடியும் என்றால் பிஜேபி யையும் சொல்லலாம். கட்சி மேலிடமும் கட்சியை விட்டு நீக்கி விட்டு . காங்கிரசு மற்றும் திராவிட கட்சிகள் செய்யுமா . தவறு யார் செய்தாலும் தவறு . அநாதை இல்லங்களில் முதியவர்கள் கொலையை அந்த மதத்தை சார்ந்தவர்கள் கண்டித்து கருத்து சொல்லி உள்ளனரா . பழங்குடி மனநில பாதிக்க பட்ட இளஞ்சரை அடித்து துன்புரித்து கொன்றது அந்த மத காரர்கள் கண்டிதனரா . ஆனால் நாங்கள் இந்த குழந்தைகளை கொன்றவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் சொல்கிறேன் . நான் சொல்வதை போல் ஜைஹிந்து புறம் , சாதிக் போன்றவர்கள் கண்டிப்பார்களா.
Rate this:
27-பிப்-201820:04:31 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்பல கோடி பேர் உறுப்பினர்கள் உள்ள கட்சி பிஜேபி///நைனா பிசெபிக்கு கொரவில்லாம பல கோடிபேரு காங்கிரசுலயு ஈக்காங்க...இதையே காங்கிரசுக்காரன் செஞ்சிருந்தா ஒங்கருத்து இப்டி ஈக்குமா?...
Rate this:
Cancel
Prabhakaran - Delhi,இந்தியா
27-பிப்-201817:47:35 IST Report Abuse
Prabhakaran பீகார், உபி, ஹரியானா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மனிதாபிமானம் மிகவும் குறைவு சமூக ஏற்றத்தாழ்வு, சுயநலம் மிக அதிகம். இவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் இப்படித்தான். திட்டமிடப்படாத கொலை(விபத்து) என்று தீர்ப்பு வழங்கி அதிகபட்சம் 5 வருட சிறைத்தண்டனை கிடைக்கும். பிஞ்சு குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தான் பாவம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X