பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை - பெங்களூரு இடையே ஹைப்பர்லூப்?

Added : பிப் 27, 2018 | கருத்துகள் (44)
Share
Advertisement
ஆந்திராவின் புதிய தலைநகரான, அமராவதியில், 'ஹைப்பர்லுாப்' போக்குவரத்து தொழில்நுட்பத்தில் இணைக்கும் திட்டத்தை, அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டப்படி, விஜயவாடா, புதிய தலைநகர் அமராவதி ஆகியவை, ஹைப்பர்லுாப் போக்குவரத்து வசதி மூலம் இணைக்கப்படும்.இந்த திட்டம் நிறைவேறினால், விஜயவாடா - அமராவதி இடையிலான, 40 கி.மீ., துாரத்தை, சில நிமிடங்களில் கடந்து விடலாம்.
Andhra Pradesh, Amaravati, Hyperloop ,Bengaluru,Chennai, சென்னை, பெங்களூரு, ஆந்திரா, அமராவதி, ஹைப்பர்லுாப் போக்குவரத்து தொழில்நுட்பம், ஹைப்பர்லுாப் ஒன், காந்த விசை, பாட்,  Hyperloop Transportation Technology, Hyperloop One, magnetic force, Bot,

ஆந்திராவின் புதிய தலைநகரான, அமராவதியில், 'ஹைப்பர்லுாப்' போக்குவரத்து தொழில்நுட்பத்தில் இணைக்கும் திட்டத்தை, அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டப்படி, விஜயவாடா, புதிய தலைநகர் அமராவதி ஆகியவை, ஹைப்பர்லுாப் போக்குவரத்து வசதி மூலம் இணைக்கப்படும்.

இந்த திட்டம் நிறைவேறினால், விஜயவாடா - அமராவதி இடையிலான, 40 கி.மீ., துாரத்தை, சில நிமிடங்களில் கடந்து விடலாம். ஹைப்பர்லுாப் தொழில் நுட்ப முறைப்படி, பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நவீன வாகனம், காற்று புகாத டியூப்பில், மணிக்கு, 1,100 கி.மீ., வேகத்தில் செல்லும்.'பாட்' எனப்படும் இவ்வகை வாகனம், காந்த விசையை பயன்படுத்தி, காற்று புகாத டியூப்புக்குள் அசுர வேகத்தில் கடந்து செல்லும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை, அமெரிக்காவின், 'ஹைப்பர்லுாப் ஒன்' என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனம், பெங்களூரு - சென்னை, பெங்களூரு வழியாக, மும்பை - சென்னை, பெங்களூரு - திருவனந்தபுரம், மும்பை - டில்லி, மும்பை - கோல்கட்டா ஆகிய ஐந்து மார்க்கங்களில், ஹைப்பர்லுாப் தொழில்நுட்ப பாதைகளை அமைக்கும் திட்டத்தை கடந்தாண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை - பெங்களூரு இடையே, ஹைப்பர்லுாப் திட்டம் நிறைவேற்றப்பட்டால், 20 நிமிடத்தில் இலக்கை அடைந்து விட முடியும் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
28-பிப்-201809:48:37 IST Report Abuse
Kuppuswamykesavan அட, மாமல்லபுரத்துல இருந்து திருவாமூர் வரை, பஸ்ஸில் வர, ஒரு மணி நேரம் தாங்க ஆகுது. ஆனால், திருவாமூரில் இருந்து கோயம்பேடு வர, இரண்டு மணி நேரம் ஆகுதுங்களே?, பீக் ட்ராபிக் நேரங்களில்.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
27-பிப்-201819:02:23 IST Report Abuse
raghavan இனி அதிக தூரத்தை குறைந்த நேரத்திலும், குறைந்த தூரத்தை(ஊருக்குள்) அதிக நேரத்திலும் கடக்க வேண்டியதுதான்.
Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
27-பிப்-201820:02:21 IST Report Abuse
K.Sugavanamஇது ஆதி காலத்துல இருந்து நடக்கிற நடப்பு தானே.....
Rate this:
Cancel
svaiyaburi - Bangalore,இந்தியா
27-பிப்-201818:04:17 IST Report Abuse
svaiyaburi Government could have plan Domestic airport rather than this plan. It will cost more than flight tickets. Completion cost of this project will be more for sure. Also it occupy more agricultural land.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X