‛தீயாக வசூல் செய்யும் குமாரு': தாலுகா ஆபிசில் புரோக்கர் ஆதிக்கம் ரொம்ப ‛ஜோரு'

Added : பிப் 27, 2018
Share
Advertisement
""இன்னும் வெயில் காலமே வரலே. அதுக்குள்ளே... இப்படி காய்ச்சுதே!'' என்று, "உஸ்...' கொட்டி, ஹெல்மெட்டுடன், மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.""என்னக்கா, வெயில் ஜாஸ்தியா இருக்குதுபோல. அடுத்த வாரம் எக்ஸாம் வரதால, வெளியே போகலை. ரூமிலேயே படிச்சுட்டிருக்கிறேன்,'' என்று பதிலளித்த, மித்ரா, ""மம்மி... ஜில்லுன்னு, மோர் கொண்டு வாங்க. சித்து அக்கா வந்திருக்காங்க,'' என்று
 ‛தீயாக வசூல் செய்யும் குமாரு': தாலுகா ஆபிசில் புரோக்கர் ஆதிக்கம் ரொம்ப ‛ஜோரு'

""இன்னும் வெயில் காலமே வரலே. அதுக்குள்ளே... இப்படி காய்ச்சுதே!'' என்று, "உஸ்...' கொட்டி, ஹெல்மெட்டுடன், மித்ரா வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
""என்னக்கா, வெயில் ஜாஸ்தியா இருக்குதுபோல. அடுத்த வாரம்
எக்ஸாம் வரதால, வெளியே போகலை. ரூமிலேயே படிச்சுட்டிருக்கிறேன்,'' என்று பதிலளித்த, மித்ரா, ""மம்மி... ஜில்லுன்னு, மோர் கொண்டு வாங்க. சித்து அக்கா வந்திருக்காங்க,'' என்று குரல் கொடுத்தாள்.
""அடடா... வாம்மா. பேசிட்டிருங்க மோர் கொண்டு வர்றேன்,'' என்றவாறு, மித்ராவின் அம்மா உள்ளே சென்றார்.
""பக்கத்துல இருக்கிற சபாநாயகர் தொகுதி முழுவதும் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கிட்டிருக்கு கேள்விப்பட்டாயா?'' என்று பீடிகை போட்டாள் சித்ரா.
""ம்..ம்..! சரமாரி புகார்களால் மாற்றப்பட்ட அந்த "சாமி' மீண்டும் மீசையை முறுக்கிட்டு திரும்ப வந்துட்டாராம். போஸ்டிங் வாங்கிட்டு வந்த இரண்டு வருஷத்துல, "பெரிய' நாலு சேர்த்திட்டாராம். இதுலதான், 30 "எல்' பேரம் பேசி, 25க்கு முடிச்சாராம். அதில், 17ஐ "அட்வான்ஸ்' கொடுத்திட்டு, மீதி கொடுக்க, பத்து நாள் டைம் வாங்கியிருக்கிறாராம்,'' என்றாள் மித்ரா.
""ஓ... பரவாயில்லையே. நல்லா தெரிஞ்சு வச்சுருக்கியே. ஆனால், "சாமி'யோ , "நான் திரும்பி வர்றதுக்கு, "சபா'தான் முக்கிய காரணமுன்னு, பல பேரிடம் "வான்ட்டடா' சொல்லிட்டிருக்கிறாராம். சம்பந்தமில்லாமல், "சபா'வை ஏன், சிக்க வைக்கிறாருன்னு, அந்த அவிநாசியப்பருக்கே வெளிச்சம்,'' என்று சலித்து
கொண்டாள் சித்ரா.
அதற்குள் மோர் வந்து விடவே, ஒரே மூச்சில் குடித்து விட்டு,
"" ஆன்ட்டி, சூப்பரா இருக்கு. இன்னொரு டம்ளர் கொண்டு வாங்களேன்,'' என்று சித்ரா சொன்னதும், மித்ராவின் அம்மா, ""ஓ.. தாராளமா'' என்று சொல்லி மீண்டும் உள்ளே சென்றார்.
""பக்கத்துல உள்ள சேவூரில், டூ வீலரில் போறவங்க குறுகலான வீதிகளில் ரொம்ப கவனமாகத்தான் போறாங்க. ஏன் தெரியுமா? மெயின் ரோட்டை விட, சிறிய ரோட்டில்தான் போலீஸ் கெடுபிடி அதிகமாம். ஸ்@டஷனை சேர்ந்த ஒரு அதிகாரி, "மீசையை' முறுக்கிட்டு, வாகன சோதனைங்கிற பேரில், தனியா நின்னுட்டு,
"வசூல்' செய்யறதில், பலே கில்லாடியாம்,'' என்றாள் சித்ரா.
அப்போது "டிவி'யில், "தீயா வேலை செய்யணும் குமாரு' படம் துவங்கியது. ""அக்கா.. இந்த படம் செம காமெடியா இருக்கும்,'' என்ற மித்ரா, ""அதே ஊரில் உள்ள "மேக'மான ரெவின்யூ ஆபீசர், "விவேக'மாக செயலாற்றும் (?) அதிகாரிக்கு, "ரைட் ஹேண்டா' இருந்துட்டு, "வசூல்' பண்ணி கொடுக்கிறாராம். தாலுகாவிலேயே மண் திருட்டு நடப்பது, சேவூர் பிர்காவில் மட்டும்தான். இதைப்பற்றி யாராவது கேட்டால், "பர்மிட்' இருக்குதுன்னு சொல்லி சமாளிக்கிறாராம்,'' என்றாள்.
""நானும் கேள்விப்பட்@டன். அவரு எப்பவுமே அப்படித்தானாம். இதேபோல், மக்கள் எந்த "சர்டிபிகேட்' வாங்க போனாலும், "பைசா' இல்லாம, பேனா மூடியை திறக்கறதே இல்லையாம். மக்களின் வரிப்பணத்தில், சம்பளம் வாங்கும் இதுபோன்றவர்களை, கலெக்டர்தான் ஒரு கை பார்க்கணும்,'' என்று ஆவேசமாக
பேசினாள் சித்ரா.
""அது சரி, "டிரான்ஸ்பரில்' சென்ற அலட்டல் ஆபீசர். அங்கிருந்து தன் பவரை காட்டணும் செயல்படுகிறாராம். அதுக்காக, தனக்கு "விசுவாசமாக' உள்ள ஆட்களுக்கு, ஏதாவது வேணும்னா, செஞ்சு கொடுங்கன்னு, உத்தரவு போடறாராம்,'' என்றாள் மித்ரா.
""சரி விடு... அவரு திருந்துற மாதிரி தெரியலை,'' என்று சித்ரா சொல்லி முடிக்கவும், மீண்டும் மோர் வரவும் சரியாக இருந்தது. டீபாயின் மேல் மோரை வைத்து விட்டு, ""பக்கத்து வீட்டு, முருகேஷ் தாத்தாவுக்கு நல்லாயில்லையாம். நான் போய் பார்த்துட்டு வந்துடறேன்,'' என்று சொல்லி நகர்ந்தார் மித்ராவின் அம்மா.
மீண்டும் மோர் குடித்த, சித்ரா,
""மித்து... இப்பதான் சூப்பராயிருக்கு'' என்றாள். அப்போது, "டிவி'யில், மாற்றுத்திறனாளிகள் பற்றிய செய்தி வந்தது.அதைப்பார்த்த மித்ரா, ""மாற்றுத்திறனாளிகனு பார்க்காம, அவங்க கிட்டயும் கையேந்த ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்கு தெரியுங்களா'' என்றாள். ""சொன்னதானே தெரியும்,'' என்றாள் சித்ரா.
""திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில், வாராவாரம் வெள்ளிக்கிழமை, மாற்றுத்திறனாளிகள் முகாம் நடக்குது. மாவட்டம் முழுவதும் இருந்து வரும் மாற்றுத்திறனாளிகள், தங்களோட பாதிப்பை டாக்டர்கிட்ட காண்பித்து, தேசிய அடையாள அட்டையில், எவ்ளோ சதவீதம் பாதிப்புன்னு, எழுதி வாங்குறாங்க''
""இதுக்காக, அங்கேயும், புரோக்கர்கள் புகுந்திட்டாங்க. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளை கைக்குள்ள போட்டுட்டு, புரோக்கர்கள் ராஜ்ஜியம் கொடி கட்டி பறக்குதாம். எந்த விவரமும் தெரியாம வர்ற அப்பாவிக கிட்ட, 500 முதல், 2 ஆயிரம் ரூபாய் வரைக்கும் கறந்திடறாங்களாம். அட்டை போடறதுல துவங்கி, உதவி பணம் வாங்கி கொடுக்கற வரைக்கும் எல்லா வேலையையும் செஞ்சு கொடுக்கறோம்னு ஏமாற்றி பிழைக்கிறாங்களாம். இது விஷயத்தில், உயரதிகாரிகள் கவனிச்சு, இதுக்கு ஒரு முடிவு கட்டோணும், மாற்றுத்திறனாளிகள் புலம்பறாங்க'' என்று மித்ரா வேதனைப்பட்டாள்.
""புலம்பல் சொன்னதும், நம்ம எம்.எல்.ஏ.,க்கள் ஞாபகம் வருது,'' என்ற சித்ரா, ""அம்மா டூ வீலர் திட்டத்துல, 25 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்குதுன்னு, ஆளுங்கட்சிக்காரங்க ஆளாளுக்கு "அப்ளை' பண்ணிட்டாங்க. கட்சி உறுப்பினர் அட்டையோட போயி, எம்.எல்.ஏ.,க்கள் கிட்டயும் நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க சிபாரிசு செஞ்சும் கூட, கலெக்டர் ஏத்துக்க முடியாதுனு கறாரா சொல்லிட்டாராம்''
""டூ வீலர் வாங்குவாங்க; மானியம் கிடைக்கும்; மீதி பணத்த கட்டாம போயிட்டா, திட்டமே பெயில் ஆகிடும். அதனால, சுழற்சி அடிப்படையில, முறையா பணம் செலுத்தும் பயனாளிகளை கண்டுபிடிச்சுத்தான் கொடுப்போம். சிபாரிசு பண்ணினாலும் இதுதான் செய்ய முடியும்னு, கலெக்டர் தரப்புல "கட் அண்ட் ரைட்'டா சொல்லிட்டாங்களாம். அதனால "டென்ஷன்' ஆன, எம்.எல்.ஏ.,க்கள் போன வாரம் சி.எம்., கிட்ட புகார் செய்யலாம்னு போனாங்களாம். ஆனா, அங்க என்ன நடந்துச்சுனு தெரியலை. "கப்..சிப்..'ன்னு"ரிடர்ன்' ஆயிட்டாங்களாம்,'' என்று "படபட'வென பேசினாள் சித்ரா.
""சரி.. எப்படியோ? தகுதியானவர்களுக்கு வண்டி கிடைச்சா சரிதானே. கலெக்டர் ஆபீஸ், நார்த், சவுத் பொதுசேவை மையத்துல புரோக்கர் நடமாட்டம் எக்கச்சக்கமாம். மக்கள் கவுன்ட்டரில், விண்ணப்பம் கொடுத்தாலும், புரோக்கர்கள்தான், நேரா ஆப்ரேட்டர்கள்
கிட்டயே போயி உட்கார்ந்து, தங்களோட விண்ணப்பத்த பதிவு பண்ணிட்டு போறாங்களாம். புரோக்கர் வர்ற நேரத்துல, ""சர்வர் வேலை செய்யலை''னு சொல்லி, பொதுமக்களை காத்திருக்க வச்சிடறாங்க,'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.
வேகமாக குறுக்கிட்ட சித்ரா "" இந்த தாசில்தார்களும், அதிகாரிகளும், "சேவை' மையத்துக்கும் நமக்கு சம்பந்தமே இல்லைங்கற மாதிரி நினைக்காம, மையத்தை கண்காணிக்கணும்,'' என்றாள்.
இருவரின் பேச்சு, பக்கத்து ஊர் பக்கம் திரும்பியது. ""கோழிப்பண்ணை யூனியன்ல, தனி அதிகாரி கவர்மென்ட் "ஜீப்'லயே உடுமலையில இருக்கற வீட்டுக்கு போயிட்டு வர்றாங்கனு, பேசினோமே, ஞாபகம் இருக்குதுங்களா?'' என்றாள் மித்ரா.
""ஆமாம். அதுக்கு ஏதாவது "ஆக்ஷன்' எடுத்தாங்களா?'' என்று ஆர்வமானாள் சித்ரா.
"" மாவட்ட அதிகாரி ஒருத்தர், அந்த யூனியன் ஆபீசுக்கு போனாராம். இது விஷயமா, சம்பந்தப்பட்ட தனி அதிகாரிகிட்ட, அரை மணி நேரம் பேசினாராம். இந்த விஷயம் எப்படி வெளியே போச்சுனு, எல்லோரையும் கூப்பிட்டு மிரட்டி பார்த்தாங்களாம். ஆனால், யார்னு கண்டுபிடிக்க முடியலையாம். அதுல இருந்து, ஆபீஸ்
"ஜீப்'ல போறதில்லையாம். இப்போதெல்லாம், வாடகை கார் வைச்சுட்டு போறாங்களாம்,'' என்று சொல்லி சிரித்தாள் மித்ரா.
""எப்படியோ... நல்லது நடந்தா சரிதான்,'' என்றாள் சித்ரா.
""என்னக்கா... இன்னைக்கு கிரைம் சப்ஜெக்ட் இல்லையா?''என்று மித்ரா கேட்டதும், ""அது இல்லாமலா? திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பஸ் ஸ்டாப் பக்கத்துல உள்ள "டாஸ்மாக்' மதுக்கடையால், எப்போது பார்த்தாலும், "டிராபிக்' ஜாம் ஆகுது. அதுவும், சண்@டன்னு சொல்லவே வேண்டாம். ஜனங்க நடக்க
முடியாத அளவுக்கு, மதுக்கடைக்கு செல்லும் "குடி'மகன்கள் வண்டிகளை ரோட்டில் நிறுத்தி செல்கின்றனர்''
""இதனால், அந்த இடத்தில் "டிராபிக்' ஏற்படக்கூடாது என்பதற்காக, போலீசார் டியூட்டியில் இருப்பார். ஆனால், ரெண்டு நாளா, யாருமில்லையாம். இதை தெரிஞ்சுகிட்ட கமிஷனர், சம்பந்தப்பட்ட போலீசாரை, "மைக்கில்' கூப்பிட்டு, "எப்ப கேட்டாலும், ஏதேதோ சொல்லி சமாளிக்க வேண்டாம். வேலை
செய்யலன்னா, "சார்ஜ்' கொடுத்துடுவேன், பார்த்துக்குங்க,' சடசடன்னு பட்டாசு மாதிரி பொறிஞ்சு தள்ளிட்டாராம். இதைக்கேட்ட போலீசார், ஆடிப்போயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
""இப்படி "ஸ்டிரிக்ட்'டா இல்லைன்னா... ரூரல் மாதிரி ஆகிடும் தெரியுங்களா?'' என்றள் மித்ரா.
""அதென்னவோ, உண்மைதான். கேரள அரசை கண்டிச்சு, ஒரு கட்சிக்காரங்க, திடீர்ன்னு ஜூவல்லரி முன் போராட்டம் நடத்தினர். ஆனால், 30 மீ., தூரத்தில் ஸ்@டஷன் இருந்தும்கூட, போலீசார் மெதுவாகத்தான் வந்தாங்களாம். போலீசார், இவ்ளோ ஸ்பீடா இருந்தா எப்படி? மித்து,'' என்றாள் சித்ரா.
""அப்புறம் வேறென்ன விஷயம் இருக்குதுக்கா,'' என்றாள் மித்ரா.
""இரு.. இரு.. சொல்றேன். "நார்த் ரேஞ்' லிமிட்டில், "எல் அண்ட் ஓ' போலீசார் ராத்திரி நேரத்தில் வாகன சோதனை செய்கின்றனர். அதில், திருட்டு பைக்குடன் வருபவர் குறித்து, "கிரைம்' போலீசுக்கு தகவல் கொடுத்தால், யாருமே வருவதில்லையாம். எப்ப சொன்னாலும், "காலையில பார்த்துக்கிறோம்'ன்னு சொல்லி சமாளிக்கிறாங்களாம். தானாக வந்து மாட்டும் திருடர்களை கூட பிடிக்கிறது சோம்பேறித்தனம் பட்டா என்னாகும்?'' என்றாள் சித்ரா.
""இதென்ன கொடுமையாக இருக்கு. இதைவிட ஒரு பெரிய கொடுமை சொல்றேன் கேளுங்க. அனுப்பர்பாளையம் ஸ்டேஷனுக்கு செல்லும், "ரிப்போர்ட்டர்ஸ்' கிட்ட நோட்டில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஆர்டர் போட்டிருக்கிறாராம். இது என்ன சார்,
புதுசா இருக்குதுன்னு சொல்ல, "ரிப்போர்ட்டர்' ஒருவர், நாங்க என்ன "அக்யூஸ்ட்டா?' என்று கேள்வி கேட்டு, அதெல்லாம் போட முடியாதுன்னு சொல்
லிட்டாராம்,'' என்றாள் மித்ரா.
""இந்த போலீஸ்காரங்க, ஏன்தான் இப்படி புதுசு புதுசா சொல்றாங்கன்னு தெரியலே,'' என்று சித்ரா சொல்லவும், "டிவி'யில், "நடிகை ஸ்ரீதேவி உடல், மும்பை வருவதில், தாமதம்', என்று செய்தி வெளியானது.
""மயிலு நடிகை இப்படி திடீர்ன்னு இறப்பாருன்னு' யாருமே நினைக்கலைப்பா. அவரோட படங்கள், மனசில் வரிசைகட்டி நிக்குது,'' என்ற சித்ரா,
""ஓகே.. மித்து, நான் கிளம்பறேன். பெஸ்ட் ஆப் லக்,'' என்று சொன்னவாறு புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X