அரசியல் செய்தி

தமிழ்நாடு

கணேச துதி பாடியதில் தவறில்லை : எச்.ராஜா

Added : பிப் 28, 2018 | கருத்துகள் (231)
Share
Advertisement
H Raja, Chennai IIT,ganapathy song,கணேச துதி பாடல், எச்.ராஜா, சென்னை ஐ.ஐ.டி., இந்து கோவில், கோவில் சொத்துக்கள்,  தமிழ் தாய் வாழ்த்து, பா.ஜ., 
Ganesha song,  Hindu temple, temple assets, Tamil Thai valthu, BJP,

சென்னை: ''சென்னை, ஐ.ஐ.டி.,யில், கணேச துதி பாடியதில் தவறு இல்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா கூறினார்.
சென்னை அருகே, பூந்தமல்லியில் உள்ள, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், எச்.ராஜா, நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.பின், அவர் கூறியதாவது :இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தான், பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்து கோவில் மீட்பு இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன்.

கோவில் சொத்துக்களை விஞ்ஞான முறையில், அரசு கொள்ளையடித்து வருகிறது. பூந்தமல்லி, திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், போலி கணக்கு வாயிலாக, பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டு வருகிறது. ஊழல் செய்யும் கோவில் அதிகாரியை, கைது செய்ய வேண்டும். தமிழகத்தில், கோவில் சொத்துகளை முறையாக வாடகைக்கு விட்டால், ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இதன்மூலம், கல்வி, மருத்துவம் இலவசமாக கொடுக்கலாம்.

சென்னையில், ஐ.ஐ.டி., என்ற, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன விழாவில், கணேச துதி பாடியதில், என்ன தவறு உள்ளது; இது குறித்து கருத்து கூறும் தலைவர்களை கண்டிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (231)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Agrigators - Chennai,இந்தியா
05-மார்-201820:56:50 IST Report Abuse
Agrigators இந்தியாவில் எதுவும் தவறில்லை கொள்ளை கொள்ளை கொள்ளை சூறையாடப்பட்டு நாசமாகிக்கொண்டிருக்கிறது Agrigators.org
Rate this:
Cancel
Lakshmi Narayanan - Chennai,இந்தியா
05-மார்-201810:19:00 IST Report Abuse
Lakshmi Narayanan ஐ ஐ டி ஆல் இந்தியன்ஸ் படிக்கும் காலேஜ். தமிழ் தாய் தமிழ் நாட்டுக்கு ஓகே, ஆனால் இதர ஸ்டேட் ஸ்டுடென்ட்ஸ் க்கு இந்த பாடல் தெரியாது. பிள்ளையார் துதி என்பது அனைத்து மாநில மாணவர்களுக்கும் தெரிந்த புரிந்த ஒன்று. அதனால் பிள்ளையார் துதி பாடுவதில் என்ன தவறு.
Rate this:
K.Palanivelu - Toronto,கனடா
06-மார்-201817:03:08 IST Report Abuse
K.Palaniveluதமிழ்த்தாய் என தமிங்கிலீஷ் பேசிவரும் சிலர் அழைப்பது நகைப்புக்குரியது. குறைந்த பக்ஷம் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் கலப்பில்லாது உரையாடாத இப்போலிகள் தமிழ்த்தாய் என அழைக்கவே லாயக்கில்லாதவர்கள். பிறமாநிலத்தவர் யாரேனும் இந்திதாய், தெலுங்குதாய், மலையாள தாய் , கன்னடத்தாய், வங்காளதாய், ஒரியா தாய் என அவரவர் மொழியை போற்றுகின்றனரா? இருந்தாலும் அவர்களின் மொழியை செம்மையாக்க ஆக்கபூர்வமாக பாடுபடுகின்றனர்....
Rate this:
Cancel
murasu - madurai,இந்தியா
04-மார்-201803:00:14 IST Report Abuse
murasu இனி மான தமிழன் பிள்ளையார் சதுர்த்தியை புறக்கணிப்பான்
Rate this:
Skylap July - salem,இந்தியா
05-மார்-201802:31:17 IST Report Abuse
Skylap Julyஅப்படியா??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X