சிவகங்கை: நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம், வென்ற லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஒன்பது ஆண்டாக, போலீசார் பாதுகாத்து வருகின்றனர்.
சிவகங்கை தொகுதியில், 2009 லோக்சபா தேர்தலில், காங்., முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, அ.தி.மு.க, சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், மூன்று அறைகளில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
அவற்றை, 'ஷிப்டு' முறையில், இரவு, பகலாக போலீசார் பாதுகாத்து வருகின்றனர். தீர்ப்பு வராத நிலையில், 2014 லோக்சபா தேர்தலும் முடிந்து, பா.ஜ., ஆட்சி அமைத்தது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வருகிறது. சிதம்பரம் தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.
அதேபோல், 2011 சட்டசபைத் தேர்தலில், திருப்புத்துார் தொகுதியில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வென்றார். அந்த தேர்தலில் சர்ச்சை எழுந்ததால், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE