புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.2 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பு 2017- - 18ம் நிதியாண்டின், அக்., - டிச., வரையிலான மூன்றாவது காலாண்டில், ஜி.டி.பி., வளர்ச்சி, 7.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஏப்., - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், ஜி.டி.பி., மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 5.7 சதவீதமாக சரிவடைந்தது. இது, ஜூலை - செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், 6.3 சதவீதமாக உயர்ந்தது.
மூன்றாம் காலாண்டில், 'ஜி.வி.ஏ.,' எனப்படும், மொத்த மதிப்பு கூட்டல் வளர்ச்சி, 6.7 சதவீதமாக உள்ளது. இது, இரண்டாம் காலாண்டில், 6.1 சதவீதமாக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய அரசின், பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தின.
இதனால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ஜி.டி.பி., மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவடைந்தது. அதன்பின், தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE