அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் பேச்சாளர்களை நியமித்தார் கமல்

Added : மார் 01, 2018 | கருத்துகள் (32)
Advertisement
மக்கள் நீதி மய்யம்,பேச்சாளர்,கமல்

சென்னை: புதிதாக மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை ஆரம்பித்துள்ள கமல், கட்சியின் 10 பேர் கொண்ட மாநில பேச்சாளர்கள் கொண்ட பட்டியலை பெயரை அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் பிப்.,21ம் தேதி அரசியல் களத்தில் இறங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தை துவக்கினார். மதுரை மாநாட்டில் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயர் வைத்து கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து அரசியில் வேலைகளில் கமல் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தனது கட்சிக்கு 10 பேர் கொண்ட பேச்சாளர்களை கமல் அறிவித்துள்ளார்.


10 பேர்:


ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், முரளி அப்பாஸ், கமிலா நாசர், பட்டிமன்ற பேச்சாளர் ஞான சம்பந்தன், ரங்கராஜன், ஆர்.ஆர்.சிவராமன், சவுரி ராஜன், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
02-மார்-201812:09:42 IST Report Abuse
Cheran Perumal ஒரே கருத்தாக இருக்குமா? அல்லது ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறுவார்களா? ஆமாம் இவர்களுக்கு கொள்கை என்ன?
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
02-மார்-201810:56:29 IST Report Abuse
partha நான் கமலின் சினிமா ரசிகனா அல்லது எந்தக்கட்சி சார்ந்தவனோ அல்ல அப்படி இருந்தும் இதுவரை தமிழகத்தை மொத்தமாக கொள்ளை அடித்த / அடித்துக்கொண்டிருக்கும் திருட்டு முட்டாள் கழகங்களுக்கு மாற்றாக யாராவது வந்து தமிழகத்தை நல்வழிபடத்தமாட்டார்களா என்று ஏங்குபவன் விஜயகாந்த் , ராமதாஸ் அல்லது சீமான் செய்வர்களோயென்று எதிர்பார்த்தேன். அவர்கள் யாரையும் தமிழகமக்கள் நம்பவில்லை கமலையும் பின்னால் வரப்போகும் ரஜினியையும் கண்டமேனிக்கு விமரிசிக்கிறார்கள் இப்படியே போனால் தமிழகத்திற்கு விடிவுகாலம் வராதுபோல் இருக்கிறதே
Rate this:
Share this comment
sundara pandi - lagos ,நைஜீரியா
03-மார்-201811:37:13 IST Report Abuse
sundara pandiகமல் தனது மையம் வெளிநாட்டு கிறிஸ்தவ அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தி குறித்து கமல் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. உங்கள் கருத்து என்ன? நன்றி...
Rate this:
Share this comment
Cancel
rramjee - chennai,இந்தியா
02-மார்-201810:50:51 IST Report Abuse
rramjee அவரகளும் இவரைப்போல் நமக்கு புரியும்படி பேசுவாகலா. .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X