பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'கிடுக்கிப்பிடி'
வெளிநாடு தப்பிச் செல்வோருக்கு..
புதிய சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி : வங்கிக் கடன் மோசடி உட்பட, பொருளாதார குற்றங்கள் செய்து, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வோரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Arun Jaitley,Bank Fraud,Nirav Modi,வெளிநாடு தப்பிச் செல்வோர், புதிய சட்டம், மத்திய அமைச்சரவை ஒப்புதல், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வங்கிக் கடன் மோசடி, விஜய் மல்லையா, பஞ்சாப் நேஷனல் வங்கி, நிரவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடி , பொருளாதார குற்றவாளிகள் , என்.ஏ.எப்.ஆர்.ஏ., தேசிய நிதி பதிவு ஆணையம், சொத்துகள் பறிமுதல், 
 Union Cabinet Approval, Federal Finance Minister Arun Jaitley, Vijay Mallya, Punjab National Bank, Prime Minister Narendra Modi, Economic Criminals, NAFRA, National Financial Registration Authority, Assets Confiscation,


பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பினார்.

மோசடி:


அந்த வரிசையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரிகள் உதவியுடன், 12 ஆயிரத்து, 700 கோடி ரூபாய் மோசடி செய்த, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர், சோக்சி, சமீபத்தில் வெளிநாட்டுக்கு தப்பினர்.

இவ்வாறு வெளிநாடு தப்பிச் செல்லும் குற்றவாளிகளின் சொத்துகளை முழுமையாக பறிமுதல் செய்யும் வகையில், 'வெளிநாடு தப்பிச் செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மசோதா'வை நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது: 'வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்வது உள்ளிட்ட பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சட்டம் நிறைவேற்றப்படும்' என, பட்ஜெட்டில் அறிவித்தோம். அதன்படி, வெளிநாடு தப்பிச் செல்லும் பொருளாதார குற்றவாளிகள் மசோதாவை நிறைவேற்ற, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதா, வரும், 5ல் துவங்கும், பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டத்திலேயே தாக்கல் செய்யப்படும். ஏற்கனவே உள்ள சட்டத்தின்படி, குற்றத்தால் கிடைக்கும் லாபத்துக்கு நிகரான சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய முடியும்; அதுவும், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் தான், இந்த நடவடிக்கையும் எடுக்க முடியும்.

பறிமுதல்:


அதே நேரத்தில்., புதிய சட்டத்தில், சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியும். சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக, நீதிமன்றம் கைது, 'வாரன்ட்' பிறப்பித்தால், வழக்கின் விசாரணைக்கு அஞ்சி, வெளிநாடு தப்பிச் சென்றால் அல்லது விசாரணைக்கு ஆஜராவதற்காக நாடு திரும்ப மறுத்தால், அவர், வெளிநாடு தப்பிச் சென்ற பொருளாதார குற்றம் செய்தவராகக் கருதப்படுவார். இந்த சட்டம், 100 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட மோசடிகளுக்கு பொருந்தும். ஏற்கனவே தப்பிச் சென்றவர்கள் மீதும் இந்தச் சட்டம் பாயும்.

வெளிநாடு தப்பிச் சென்றவர் மீதான வழக்கு உடனடியாக முடிவுக்கு வர வாய்ப்பில்லை. அதனால், உடனடி நிவாரணம்

Advertisement

கிடைக்கும் வகையில், நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்த உடனேயே, அந்த நபரின் அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். இதை எதிர்த்து, எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பதிவு:


ஏமாற்றும் ஆடிட்டர்களை கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில், என்.ஏ.எப்.ஆர்.ஏ., எனப்படும், தேசிய நிதி பதிவு ஆணையம் ஏற்படுத்தவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, அனைத்து நிறுவனங்களின் ஆடிட்டர்களும் இந்த ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

வங்கி கணக்கு முடக்கம்:

வங்கி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டு, வெளிநாடு தப்பியுள்ள, பிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின் மோசடி குறித்து, பல்வேறு அமைப்புகள் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய், மத்திய கிழக்கு நாடான பஹ்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின் ஆன்ட்ரப் கிளைகளில் உள்ள, நிரவ் மோடியின் கணக்குகளை முடக்கி வைத்துள்ளதாக, எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (57)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
Viswanathan - karaikudi,இந்தியா
02-மார்-201821:30:32 IST Report Abuse

Viswanathan இதெல்லாம் Too late அவசர அவசரமாக Over night இல் பண மதிப்பு இழப்பை அறிமுகம் செய்ய தெரிந்தவர்களுக்கு இந்த சட்டத்தை பற்றி இப்பொது தான் யோஜனை வந்திருக்கிறது

Rate this:
ஜெயந்தன் - Chennai,இந்தியா
03-மார்-201810:55:34 IST Report Abuse

ஜெயந்தன்அதனால்..இது நம்பும்படியாகவா இருக்கிறது ???...

Rate this:
mani k - trichy,இந்தியா
02-மார்-201821:10:15 IST Report Abuse

mani kநீங்கள் கொண்டு வரும் சட்டம் கண் கெட்டு சூரிய நமஸ்காரம் செய்வது போல் உள்ளது.உள் நாட்டில் அவர்கள் கடன் அளவிற்கு சொத்து இருந்தால் அவர்கள் ஏன் வெளி நாடு சென்று தங்கி விடுகிறார்கள். சொந்தங்கள் பெயரிலும் பினாமி பெயரிலும் வங்கியில் வாங்கிய பணத்திற்கு சொத்துக்களை வாங்கி குவிப்பதுடன் வெளி நாட்டிலும் முதலீடு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். இதில் ஏமாளி சாமான்ய மக்கள் தான். இனி வரும் காலங்களில் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு வங்கி பணியாளர்களும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு கடன் அளிக்க வேண்டும். இதற்க்கு மத்திய அரசாங்கம் சரியான சட்டங்களை கொண்டு வர வேண்டும். அப்பொழுது தான் வங்கிகள் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டு நாடு நலம் பெரும். கி.மணி.திருச்சி

Rate this:
Vittal Anand - Chennai,இந்தியா
21-ஏப்-201816:58:43 IST Report Abuse

Vittal Anandஇவனை பதவியிலிருந்து கழட்டி விட்டாலே போதும் நாடு விளங்கிவிடும். இவனால் தான் பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான் ஏழை மேலும் ஏழையாகிறான்....

Rate this:
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
02-மார்-201819:55:06 IST Report Abuse

Narayanan Sklaxmiஸ்ட்ரோங் டாட்டா பேஸ் உருவாக்கி அதன்முலம் அணைத்து பாஸ்போர்ட் / விசா பெறுபவர்களை கண்கணிக்க வேண்டும். (இப்பொழுது அணைத்து பாஸ்ப்போர்ட் அலுவலகங்களிலும் கைரேகை டாட்டா எடுக்கிறார்கள்) விசா கொடுக்கும் முன் அமெரிக்கன் எம்பஸிஸியில் இருக்கும் முறையில் அனைவரது கைரேகைகளை பதிவுசெய்யவேண்டும் (இரட்டை குடியுரிமை உள்ளவர்களை இதன்முலம் கண்கணிக்கமுடியும்) மிடடீலீஸ்ட் நாடுகளில் உள்ளதுபோல் அணைத்து குற்றங்களையும் மெயின் சேர்வேரில் பதிவிட்டால் (வெளிநாட்டவர்கள்/ உள்நாட்டவர்கள் தங்கள் மேல் தண்டனை / பைன் இருந்தால்) நாட்டிலுருந்து வெளியேறாமல் தடுக்க முடியும் . அணைத்து கடனாளிகளையும் (கம்பெனிகள் உட்பட அதன் டிரேக்டர்ஸ எல்ல்லோரையும்) இப்போதுள்ள கிரீஸில் முறைப்படி மானிட்டர் செய்த்து கடன்தவணை மூன்றுமுறை கட்ட தவறினால் ஆட்டோமெட்டிக்காக மேற்குறிய சேர்வேரில் லாக் செய்யவேண்டும். கம்பெனிகள் டைரக்டர் பதவிக்கு வரும் அணைத்து நபர்கள் மற்றும் அந்த கொம்பனியிங் ஆடிட்டர்களின் சொத்துக்கள் விவரங்கள் கம்பெனி ரெஜிஸ்ட்ரார் / மொனிட்டரிங் துறையிடம் பதிவிடவேண்டும். ஒரு கம்பெனி இரண்டு வருடம் நஷ்டத்தில் இயங்குவததாக கடன் வாங்கிய பாங்குகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தல் உடனே மேற்கூறிய சேர்வேரில் லாக் செய்யவேண்டும். ஏதாவது கம்பெனி திடிரென்று மூடப்பட்டால் அந்த கம்பெனியின் தற்போது இருக்கும் டிரேக்டர்ஸ மற்றும் அதன்முன்பு இருந்த டிரேக்டர்ஸையும் கம்பெனி ஆடிட்டர்களையும் (நீரவ் மோடி யௌளில் ஆடிட்டர் தன் கடமையை சரியாக செய்யவில்லை என்று ஒரு கருத்து நிலவுகிறது) பொறுப்பாகி அவர்களின் சொத்துக்களில் இருந்து கடனை வசூலிக்கவேண்டும் (அதற்குத்தான் அவர்கள் அதிகமாக சம்பளம் மற்றும் வசதிகள் எடுக்கிறார்கள்). இவை அனைத்தையும் செய்யமுடியும் ஆனால் செய்யமாட்டார்கள்.

Rate this:
மேலும் 52 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X