புதுடில்லி : ஹோலி கொண்டாட்டத்தின் போது, சிறுநீர் நிரப்பப்பட்ட பலுான்களை, தங்கள் மீது சிலர் எறிந்ததாக, டில்லி பல்கலைக்கழக மாணவியர் புகார் அளித்துள்ளனர்.
அத்துமீறல்கள்:
ஹோலி பண்டிகை, நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. டில்லியில், ஒரு வாரமாகவே, ஹோலி கொண்டாட்டத்தின் போது, பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டது. பலுானில்
விந்து நிரப்பி, அதை பெண்கள் மீது எறிந்ததாக, டில்லி பல்கலைக்கழக மாணவியர் புகார் அளித்தனர்.
இந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, நடவடிக்கை எடுக்கும்படி, டில்லி போலீஸ் தலைமையகம் முன், கல்லுாரி மாணவியரும், ஆசிரியர்களும், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போதிய பாதுகாப்பு வழங்க, போலீசார் தவறி விட்டதாக குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில் நேற்று, ஹோலி கொண்டாட்டத்தின் போது, டில்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர், அமர் காலனியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள், அவர் மீது பலுான் எறிந்துள்ளனர். அந்த பெண்ணின் மார்பில் பட்டு, அந்த பலுான் வெடித்தது.
புகார்:
அதில் நிரப்பப்பட்டிருந்த சிறுநீர், அந்த பெண்ணின் ஆடை முழுவதும் பட்டது. இதே போன்ற ஒரு சம்பவம், கிரேட்டர் கைலாஷ் பகுதியிலும் நேற்று நடந்தது. இது போன்ற பாலியல் அத்துமீறல்கள் குறித்து, போலீசில் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், டில்லி உயர் நீதிமன்றத்தை அணுக, கல்லுாரி மாணவியர் முடிவு செய்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (70)
Reply
Reply
Reply