பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சாட்டை சுழற்றுகிறார் கவர்னர் புரோஹித்;
துணைவேந்தர்களுக்கு அவசர அழைப்பு

உயர்கல்வித் துறையில் ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிப்பது குறித்து, கவர்னர் மாளிகையில், இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், பல்கலை துணைவேந்தர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 Banwarilal Purohit,University ,Vice Chancellor,கவர்னர் பன்வாரிலால் புரோஹித்,  உயர்கல்வித் துறை, பல்கலை ஊழல், பல்கலை முறைகேடு, கவர்னர் மாளிகை, பல்கலை துணைவேந்தர்கள், கோவை பாரதியார் பல்கலை, பல்கலை துணைவேந்தர் கணபதி, Governor,ஆளுநர், புரோஹித், Governor Banwarilal Purohit, Department of Higher Education, University Scam, University abuse, Governor House, University Vice Chancellors, Coimbatore Bharathiar University, University Vice Chancellor Ganapathy,

தமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், துணைவேந்தர் நியமனம், கல்லுாரி முதல்வர்கள், பேராசிரியர்கள் நியமனம், பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்குவது, பிஎச்.டி., வழங்குவது உட்பட, பல்வேறு பணிகளில் சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. இதை வெளிச்சமிட்டு காட்டுவது போல்,

கோவை பாரதியார் பல்கலையில், பேராசிரியர் பணிக்கு, தலா, 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பேரம் பேசிய விவகாரம், கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பல்கலை துணைவேந்தர் கணபதி, கையும் களவுமாக பிடிபட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பாரதியார் பல்கலை அதிகாரிகள் மற்றும் உயர்கல்வி அதிகாரிகளை அழைத்து, ஒரு மாதத்திற்குப் பின், கவர்னர் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், பல்கலைகளின் வேந்தரான கவர்னர், பன்வாரிலால் புரோஹித், பல்கலைகளின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, அவசர ஆலோசனை கூட்டத்தை அறிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் தர்பார் அரங்கில், இன்று காலை, 10:30 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில், 20 பல்கலைகளின் பிரதிநிதிகள், பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


கூட்டத்தில், ஊழல், முறைகேடுகளை களைந்து, தரமான உயர்கல்வி நிறுவனங்களாக மாற்ற, துணைவேந்தர்களுக்கு கவர்னர் உத்தரவிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பல்கலைகளின் ஓராண்டு நடவடிக்கை குறித்த, கோப்புகளை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
03-மார்-201815:20:25 IST Report Abuse

Gnanasekaran Vedachalamகவர்னர் மாளிகையை சுற்றி இருந்த சேட்டை மிட்டை செவ்வாய் கிழமை எல்லோரையும் அனுப்பி விட்டார் பல்கலை கழகம் வேந்தரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கு உள்ள சேட்டை மூட்டை பெரிசாலிகள் முதலைகள் எல்லாம் இனம் காண வேண்டும் பேசி உறவாடி அங்கு உள்ள பணம் ஈட்டுகின்ற கல்வி வியாபார மகா கணபதியை அடையாளம் கண்டு திரு நீறு இட்டு அபிஷேக ஆராதனை செய்து கும்ப மரியாதை செய்து பொருத்தமான இடங்களுக்கு அனுப்ப வேண்டும் .

Rate this:
Raja - Bangalore,இந்தியா
03-மார்-201814:33:20 IST Report Abuse

Rajaதமிழகத்தின் முதல் குடிமகன் கவர்னர் புரோஹித் தமிழகத்திற்கு மிகவும் முக்கியமான காவிரி மேலாண்மை வாரியத்திற்கும் குரல் கொடுப்பாரா? அவர் தான் மத்திய அரசின் தூதுவராயிற்றே? பிரதமருக்கும், மத்தியில் ஆளும் கட்சிக்கும் மிகவும் நெருக்கமானவர். தனது மாநில முதல்வர் என்ற அதிகாரத்தையும், மேலிடத்தில் இருக்கும் செல்வாக்கையும் உபயோகித்து மக்களுக்கு நல்லது செய்வாரா?

Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
03-மார்-201813:59:02 IST Report Abuse

Swaminathan Chandramouliஎன்னவோ இங்கு விமரிசனம் எழுதுவோர் தற்போதய ஆளுநரை பற்றி எல்லாம் தெரிந்தது போல ஆளுக்கு ஆள் கதை விடுகிறீர்கள் . ஆளுநர் மாளிகையில் இத்தனை வருடங்கள் கட்டுமரம் கட்சியும் , அம்மா கட்சியும் மாறி மாறி பழைய ஆளுநர்களை கைக்குள் போட்டுகொண்டு கொள்ளை அடித்தார்கள் . கோடிக்கணக்கான ரூபாய்கள் கபளீகரம் செய்யப்பட்டன . கேட்பதற்கு நாதி இல்லாததால் சுரண்டல் அதிகாரிகள் ஆளுநர் மாளிகையை காலி செய்தனர் . புது ஆளுநர் வந்தார் பழைய ஊழல் பெருச்சாளிகள் மாட்டிக்கொண்டனர் வெளியே விரட்டப்பட்டனர் . தற்போது முற்றிலும் புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது ,நேர்மையான அதிகாரிகள் நியமிக்க பட்டு உள்ளனர் . இதற்கு காரணம் புதிய ,திறமை சாலியான ஆளுநர் தான் . முந்தைய அரசாங்கமும் ,தற்போதைய அரசாங்கமும் செய்த ,செய்யும் ஊழல்கள் படிப்படியாக வெளிக்கொணரப்பட்டு ஆளுநர் அந்த ஊழல் பேர்வழிகளுக்கு சரியான தண்டனை வாங்கி தருவார் . இந்த ஊழல் கணபதிபோல ஆயிரம் கணபதிகள் இன்னும் லஞ்ச லாவண்யத்தில் திளைத்து கொண்டிருக்கிறார்கள் . இன்றைக்கு ஆளுநர் அனைவரையும் அழைத்திருக்கிறார் . ஊழலில் நீந்திக்கொண்டிருக்கும் இந்த முதலைகள் சுடப்படவேண்டும் . வேண்டாத விஷயங்களை பற்றி பேசும் மய்யம் கமல் இதனை பற்றி ஏன் வாயை திறக்கவில்லை ?

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X