அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க., இளைஞரணி செயலராகிறார் உதயநிதி?

தி.மு.க.,வில், இளைஞரணி செயலர் பதவிக்கு, உதயநிதியை கொண்டு வருவதற்காக, அக்கட்சியில் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

Udhayanidhi, Stalin, DMK, தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகம், உதயநிதி, ஸ்டாலின்,  அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குடும்பம், தி.மு.க இளைஞரணி செயலர், முன்னாள் அமைச்சர் சாமிநாதன், Former Minister Swaminathan,Dravida Munnetra Kazhagam, Mahesh Poyyamozhi, Stalin family, DMK Youth Secretary,


அதன் துவக்கமாக, தற்போதைய இளைஞரணி செயலர் மாற்றப்பட்டு, உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான நண்பர், மகேஷ் பொய்யா மொழியை நியமிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு வசதியாக, இளைஞரணி செயலர் பொறுப்பில் இருக்கும், முன்னாள் அமைச்சர், சாமிநாதனிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இளைஞரணி செயலர் பதவியை விட்டுக் கொடுக்கும் சாமிநாதனுக்கு, கட்சியில் வேறு உயர் பதவி வழங்கப்படும் என, கூறப்படுகிறது.


இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., கட்டமைப்பில், இளைஞரணி, முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அணியை, 1982ல் தோற்றுவித்தபோது, மாநில செயலர் பதவி, ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. இளைஞரணியினருக்கு, பிரத்யேக சீருடையும் வடிவமைக்கப்பட்டது. தி.மு.க., மாநாட்டில்,


இளைஞரணி ஊர்வலம் முக்கிய நிகழ்ச்சியாக இடம்பெறுகிறது. இளைஞரணியினருக்கு, எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிகளும் வழங்கி, கட்சியில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.


இந்தப் பதவியை நீண்ட ஆண்டுகளாக, தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்டாலின், 63வது வயதில், அப்பதவியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். அவருக்கு பதிலாக, தன் நம்பிக்கைக்கு உரியவரான, சாமிநாதனை, அப்பொறுப்பில் நியமித்தார். எந்த சர்ச்சையிலும் சிக்காமல், இப்பொறுப்பில் அவர் நீடித்து வருகிறார்.


இந்நிலையில், ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதிக்கு, கட்சியில் திடீர் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. கட்சி நிகழ்ச்சிகள், விளம்பர பேனர்களிலும், அவர் பெயர் இடம்பெறத் துவங்கி உள்ளது. படிப்படியாக, அவரை இளைஞரணி செயலர் பதவிக்கு கொண்டு வரவும், ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில், அவரை உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கேற்ப, இளைஞரணியில் சில மாற்றங்களை செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. அதன் துவக்கம் தான், சாமிநாதன் ராஜினாமா.


இளைஞரணி துணைச் செயலரும், திருவெறும்பூர், எம்.எல்.ஏ.,வுமான, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். உதயநிதியின் நெருக்கிய நண்பர். அதனால், முதலில் அப்பதவி, மகேஷுக்கு தரப்படுகிறது.


Advertisement

அவரது ஏற்பாட்டில், இளைஞரணி நிகழ்ச்சிகளுக்கு, உதயநிதி வரவழைக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில், இப்பொறுப்பில் உதயநிதி அமர வைக்கப்படுவதுடன், சட்டசபை தேர்தலிலும், அவரை களமிறக்க, வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.


சென்னையில் நடந்த, ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற உதயநிதி, 'தி.மு.க.,வில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும்' என தெரிவித்துள்ளதன் பின்னணி இது தான். உதயநிதிக்காக பதவியை விட்டுத் தரும் சாமிநாதன், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள பெரும்பான்மை சமுதாய ஆதரவை பெற, அவருக்கு முக்கிய பதவி தரப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yila - Nellai,இந்தியா
05-மார்-201815:51:05 IST Report Abuse

yilaஆ ராசா, கனிமொழி மற்றும் இவர்.... இவர்கள் மூவர் மீதும் மக்களுக்கு கடும் காட்டம் உள்ளது..இவர்களின் முகங்களை பார்த்தாலே ஓட்டுக்கள் குறைவதற்கான வாய்ப்புகள் ரொம்ப அதிகம்...எனவே இவர்களுக்கு, "உட்கட்சி" பொறுப்புகள் கொடுத்து உளளேயே உட்கார வைப்பது திமுகாவிற்கு நல்லது...

Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
04-மார்-201817:56:30 IST Report Abuse

Krish Samiஉயர்திரு.. உதயநிதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். எப்போது இன்பநிதி (உதயநிதி மகன்) குழந்தைகள் அணி தலைவர் ஆவார்? எப்போது தன்மயா (உதயநிதி மகள்) பெண் குழந்தைகள் அணி தலைவர் ஆவார்? அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Rate this:
balakrishnan - Mangaf,குவைத்
03-மார்-201821:58:39 IST Report Abuse

balakrishnanஒரு உபயோகமும் இல்லை .

Rate this:
மேலும் 111 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X