பதிவு செய்த நாள் :
காங்., இல்லாத இந்தியா சாத்தியமாகிறதா?
நாடு முழுவதும் பரந்து விரிகிறது பா.ஜ.,

புதுடில்லி : மூன்று வட கிழக்கு மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில், திரிபுராவில் ஆட்சி அமைப்பதுடன், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் கூட்டணி அரசு அமைக்க, மத்தியில் ஆளும், பா.ஜ.,வுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம், மொத்தமுள்ள, 31 மாநிலங்களில், 21 மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி அரசுகள் அமைய உள்ளன.

PM Modi,Amit Shah,Assembly Election, இந்தியா, காங்கிரஸ், பா.ஜ, சட்டசபை தேர்தல், திரிபுரா ஆட்சி , மேகாலயா கூட்டணி அரசு , நாகாலாந்து கூட்டணி அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோட்டை, காங்கிரஸ் இல்லாத இந்தியா,   பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, 
India, Congress, BJP, Legislative Assembly, Tripura rule, Meghalaya Coalition government, Nagaland Coalition government, Marxist Communist Party, Congress-free India, Prime Minister Narendra Modi, 
Bharatiya Janata Party,

மூன்று வட கிழக்கு மாநிலங்களுக்கு, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், 25 ஆண்டுகளாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த திரிபுராவில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக, அங்கு ஆட்சி அமைக்க உள்ளது.

21 மாநிலங்கள்:


இதுதவிர, நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் கூட்டணி அரசு அமைக்கும் வாய்ப்பும்,

பா.ஜ.,வுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நேரத்தில், 21 மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி அமைய உள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை, நான்காக குறைந்துள்ளது.

'அடுத்ததாக, விரைவில் தேர்தல் நடக்க உள்ள, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, எங்களின் இலக்கு' என, பிரதமர் நரேந்திர மோடி மற்றும், பா.ஜ., தலைவர், அமித் ஷா கூறியுள்ளனர். ஏற்கனவே வடக்கு, வட கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சி அரசு அமைந்துள்ளது. அடுத்ததாக, தென் மாநிலங்களை குறிவைத்துள்ளது.

மிகப் பெரிய வளர்ச்சி:


மோடி மற்றும் அமித் ஷா கூட்டணியில், நான்கு ஆண்டுகளில், பா.ஜ., மிகப் பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 2014 லோக்சபா தேர்தலின்போது, ஏழு மாநிலங்களில், பா.ஜ., ஆட்சி இருந்தது. தற்போது, அது, 21 ஆக உயர்ந்துள்ளது. திரிபுராவில் அரசு பொறுப்பேற்ற பின், 17 மாநிலங்களில், பா.ஜ., முதல்வர்கள் இருப்பர், வரும், 2019 லோக்சபா தேர்தல் மற்றும் விரைவில் நடக்க

Advertisement

உள்ள, கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக, இந்த மூன்று மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளதாக, அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

வாய்ப்பு :


சமீபத்தில், குஜராத் சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி மற்றும் அதைத் தொடர்ந்து, சில மாநில சட்டசபை இடைத்தேர்தல் வெற்றிகள், காங்கிரசுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், இந்த மூன்று மாநிலத் தேர்தல் முடிவு, தேசிய அரசியலை புரட்டி போட்டுள்ளது. இதன்மூலம், 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்ற, பா.ஜ., தலைவர்களின் கோஷம், சாத்தியமாக வாய்ப்புள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

வாசகர் கருத்து (106)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
06-மார்-201804:02:41 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>நேரு பீ எம் ஆனதே நமக்கு பெரிய நஷ்டம் வல்லப பாய் படேல் பீ எம் ஆயிருந்தால் நாம் எப்போதோ மேலுக்குவந்துருப்போம் வமிசாவளி யா நேரு>இந்திரா >ராஜிய்வ >சோனியான்னு போனதால் காங்கிரஸ் செத்துப்போச்சு ராகுல் எதுக்கும் லாயக்கேயில்லாத டம்மி பேசுங்க சோனியா மலைமுழுங்கி மஹாதேவி செய்யாத நாசவேலையே இல்லே கட்ச்சில்லியே வேறு ஏவாளும் திறமைசாலிகள் இல்லே மன்மோகன் சிங் பசி எல்லாம் பணம் பண்ணிகளேதான் தமிழ்நாட்டுலே முக ஜெயா கொள்ளையடிச்சாங்க டாஸ்மாக்கையே கட்டின்னு அழுதாங்க பலன் தெற்குத்தெரு இந்த சனியன்களே தான் இருக்கு கண்டநாயிங்களெல்லாம் கோடீலே இருக்குதுங்க மேலும் எழுதினால் தப்பாகிடும்

Rate this:
balakrishnan - Mangaf,குவைத்
05-மார்-201822:24:04 IST Report Abuse

balakrishnanபிஜேபி நல்லதேயே செய்கிறது .நல்லதே நடத்துகிறது .

Rate this:
Viswanathan - karaikudi,இந்தியா
05-மார்-201821:59:32 IST Report Abuse

Viswanathan மிகவும் வளர்ந்தால் ஆணவம் தலைக்கு ஏறி விடும்

Rate this:
மேலும் 103 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X