சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

Added : மார் 04, 2018 | கருத்துகள் (1)
Advertisement
சொல்கிறார்கள்


மாடி தோட்டத்துக்கு 35 சதவீத நிழல் போதும்!


கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, காய்கறிகள் துறை தலைவர் மற்றும் பேராசிரியர், ஆறுமுகம்: தனி வீடுகளில் இருப்போர், ஓரளவு மண், சூரிய ஒளிபடும் நிலப்பகுதி வீட்டில் இருந்தால், கண்டிப்பாக முருங்கை, பப்பாளி, எலுமிச்சை, மா போன்ற, 'பெரினியல்' மரங்களை, அதாவது, நீண்ட காலம் பயன் தரக்கூடியவற்றை வளர்க்கலாம். மூலிகைச் செடிகளான துளசி, கற்பூரவல்லி, துாதுவளை வளர்க்க எளிது.

மாடித் தோட்டம், இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. கட்டடம் கட்டும்போதே மேற்கூரையில் நீர் இறங்காதபடி, தோட்டம் போட ஏதுவாக, தரையை, 'லேமினேட்' செய்யும் தொழில்நுட்பம் வந்து விட்டது. 3 - 5 ஆண்டு வரை, இதில் தண்ணீர் இறங்காது; ஒரு சதுர அடிக்கு, 6 - 7 ரூபாய் தான் செலவாகும்.

கோடை வெயிலில் செடிகள் வாடாமல் இருக்க, நிழல் வலைக் கூடாரம் அமைப்பது சிறந்த வழி. இதில், 35, 50, 70 சதவீதம் நிழல் என, பல விதங்களில் கிடைக்கிறது. மொட்டை மாடி காய்கறித் தோட்டத்துக்கு, 35 சதவீத நிழல் உகந்தது. இதன் வழியாக வரும், 'டிப்யூஸ்ட்' ஒளி, நல்ல பலனைத் தரும்.தொட்டி தவிர, பெரிய பாலித்தீன் பைகளிலும் செடிகளை வளர்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தேங்காய் நார் கட்டிகள் பயன்படுத்தினால், எடை இல்லாமல் லேசாக இருப்பதுடன், மண் போட்ட அதே பலனும் கிடைக்கும்.

செடிகளுக்கு, உயிர் உரங்கள் எனப்படும், 'பையோ பர்டிலைசர்' போடலாம். ஆர்கானிக் உரம் தவிர, 'காம்ப்ளக்ஸ்' உரம் இடலாம். நர்சரிகளில் கிடைக்கும் மண்புழு உரமும் சிறந்தது. ரசாயன உரங்களான, யூரியா, டை அம்மோனியம் பாஸ்பேட் போடுவதாக இருந்தால், ஒரே ஒரு டீஸ்பூன் உரத்தை, நீரில் கரைத்து, 10 நாட்களுக்கு ஒருமுறை போட்டால் போதும்.மண் இருக்கும் ஒரு மூலையில் காய்கறி குப்பைகளைப் போட்டு வந்தால், ஆறு மாதத்தில் மக்கி, அருமையான இயற்கை உரம் கிடைக்கும்.

வீட்டுக்குள் அலங்கார தொட்டிகளில் செடிகளை வளர்ப்பதால், மனதிற்கும் இதம்; அவை வெளியிடும் ஆக்சிஜனும் கிடைக்கும். பூச்செடிகளுக்கு நல்ல வெயில் வேண்டும் என்பதால், அவை வீட்டுக்குள் அவ்வளவாக வளராது. நிழற்பகுதியில், 'டைப்பன்பாக்கியா, அக்ளோநீமா, குளோரபைட்டம், பனை வகைகள், மணிப்ளான்ட், பில்லோடென்ட்ரான்ஸ் மரண்டா' போன்றவற்றை, வீட்டுக்குள் வைக்கலாம். அவற்றையும் வாரம் ஒருமுறை வெயிலில், 5 - 6 மணி நேரம் வைத்து எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
05-மார்-201816:13:30 IST Report Abuse
ganapati sb இது எல்லாம் சரிதான் இந்த நுட்பத்தை பள்ளிகள் மூலம் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விறபனைக்கு அறிமுக படுத்துங்கள் அல்லது தபால் அலுவலகம் காதி கடைகள் போல மக்கள் வந்து செல்லும் பகுதிகளில் ஆர்டர் பெற்று விற்கலாம் ஏனெனில் இவை எங்கே கிடைக்கும் என விருப்பமுள்ள என்னை போல பலருக்கும் தெரிவதில்லை எல்லோராலும் விவசாய கல்லூரிக்கு வேலை நாட்களில் இதற்கென வர முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X