அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'படிக்கிற காலத்தில் அரசியல் வேண்டாம்'
ஆங்கிலம் கற்றுக்கொள்ள ரஜினி

சென்னை : ''தமிழ் பேசினால் மட்டும், தமிழ் வளராது; தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும். நவீன உலகில், ஆங்கிலம் கற்று, பிற மாநிலங்கள், பிற நாடுகளுக்கு சென்று பெயர் வாங்கினால், தமிழனுக்கு பெயர். ''எனவே, ஆங்கிலம் படியுங்கள். படிக்கிற காலத்தில் அரசியல் வேண்டாம்,'' என, நடிகர் ரஜினிகாந்த், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Kollywood,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்


சென்னை, வேலப்பன் சாவடியில் உள்ள, ஏ.சி.எஸ்., மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது:மனித ஜென்மத்தின் வசந்த காலம், மாணவர் பருவ காலம். அந்த சந்தோஷமான நாட்கள் தான், சோதனையான நாட்களும் கூட. உங்கள் வாழ்க்கையின் அஸ்திவாரம் அதில் தான் உள்ளது.
நான்கு ஆண்டு கஷ்டப்பட்டு படித்தால், 40 ஆண்டுகள் நன்றாக இருக்க முடியும். எனவே, படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கல்லுாரி படிக்கட்டில் ஏறும் போது, உங்கள் எதிர்காலம், பெற்றோரின் உழைப்பு, அவர்களின் சந்தோஷம், அவர்களின் எதிர்காலம் அனைத்தையும் சுமந்து, படியேறுவதை மறந்து விடாதீர்கள்.
அரசியல் குறித்து, தெரிந்து கொள்ளுங்கள்; படிக்கும் போது அரசியலில் ஈடுபடாதீர்கள். நான் கட்சி ஆரம்பித்தாலும், அரசியலில் ஈடுபடாதீர்கள். ஓட்டு போடுங்கள்; கவனத்தை சிதற விடாமல் படியுங்கள்.நான் கர்நாடகாவில், கன்னட பள்ளியில் படித்தேன். அப்போது, 98 சதவீத மதிப்பெண் எடுத்தேன். நன்றாக படித்ததால், உயர்நிலைக் கல்வி கற்க, ஆங்கிலப் பள்ளியில் சேர்த்தனர்.
அங்கு, அனைவரும் ஆங்கிலம் பேசினர். நான் தமிழில் படித்து விட்டு சென்றதால், ஆங்கிலம் படிக்க சிரமப்பட்டேன். இதனால், 17 மதிப்பெண்கள் எடுத்தேன்.முதல் பெஞ்சிலிருந்தவன், பின்னால் உள்ள பெஞ்சிற்கு வந்து விட்டேன். அதே போல், பல்கலையில் எத்தனையோ பேர், தமிழ் மீடியம் படித்து விட்டு வந்திருப்பீர்கள். அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் இருக்கும். ஆங்கிலம் புரியாவிட்டால் கஷ்டமாக இருக்கும்.


பிற மொழியை தவறாக பேசினால் ரசிப்பர். ஆனால், ஆங்கிலத்தை தவறாக பேசினால் கிண்டலடிப்பர்.மாணவர்களே, ஆங்கிலம் பேச, பேசத்தான் வரும். எனவே, நண்பர்களோடு ஆங்கிலம் பேச கற்றுக் கொள்ளுங்கள்; உங்கள் தொழிலுக்கு உதவும். இது, கம்ப்யூட்டர் உலகம். தமிழ் பேசினால் மட்டும், தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும்.
நவீன உலகில் ஆங்கிலம் கற்று, பிற மாநிலங்களுக்கு, நாடுகளுக்கு சென்று பெயர் வாங்கினால் தான், தமிழனுக்கு பெயர்.சுந்தர் பிச்சையால் தமிழனுக்கு, தமிழுக்கு பெயர். அப்துல்கலாமால் தமிழனுக்கு, தமிழுக்கு பெயர். காரணம், ஆங்கிலப் புலமை இருந்தது. அதனால், ஆங்கிலம் பேச பழகிக் கொள்ளுங்கள். உங்கள் துணைவியை சரியாக தேர்வு செய்கிறீர்களோ இல்லையோ, நண்பர்களை சரியாக தேர்வு செய்யுங்கள். அவர்கள் தான், உங்கள் வாழ்க்கையை திசை திருப்புவர்.
துரோணாச்சாரியார் ஒரு முறை, துரியோதனனை அழைத்து, '30 நாட்கள் அவகாசம் தருகிறேன். எனக்கு, 10 நல்லவர்களை அழைத்து வா' என, கூறினார். துரியோதனன்,'சரி' எனக்கூறி சென்றான். பின், தர்மரை அழைத்து, '10 கெட்டவர்களை அழைத்து வா' என்றார்; அவரும் புறப்பட்டு சென்றார்.
துரோணாச்சாரியாரிடம், 30 நாட்கள் முடிந்து துரியோதனன் வந்தான். 'ஒரு நல்லவன் கூட கிடைக்கவில்லை' என்றான். தர்மர் வந்து, 'ஒரு கெட்டவர் கூட கிடைக்கவில்லை' என்றார்.
துரியோதனன் கெட்ட குணம் கொண்டவன். எனவே, பார்ப்பவர்கள் எல்லாம், அவருக்கு கெட்டவர்களாக தெரிந்தனர். தர்மர் நல்லவன்; அவர் பார்க்கும் போது அனைவரும் நல்லவர்களாக தெரிந்தனர். அதே போல், நீங்கள் நல்லவர்களாக இருந்தால், நல்ல குணம் உள்ள நண்பர்கள் கிடைப்பர்.இவ்வாறு, ரஜினிகாந்த் பேசினார்.

'இனி சூப்பர் ஸ்டார் அல்ல!'


*நடிகர்கள் விஜயகுமார், பிரபு, தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விக்கிரமன், நடிகையர் லதா, சச்சு, கஸ்துாரி உட்பட பலர் பங்கேற்றனர்
*தயாரிப்பாளர் தாணுபேசுகையில், ''இனி, 'சூப்பர் ஸ்டார்' அல்ல; மக்களின் தலைவர் ரஜினி.
நாட்டையும் ஆள்வார்; காட்டையும் ஆள்வார். அவருக்கு போட்டி யாரும் இல்லை,'' என்றார்
*கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், ''கமல், ரஜினி இடையிலான போட்டி, இன்று அரசியலில் உருவாகி உள்ளது. இதனால் மக்களுக்கு நல்லது தான்,'' என்றார்
* விக்கிரமன் பேசுகையில், ''எம்.ஜி.ஆரை போல், சினிமாவில் நல்ல கருத்துகளை சொன்னவர், ரஜினி,'' என்றார்.

Advertisement


அதிர வைத்த ரஜினி!


நடிகர் ரஜினி, 2017 டிச., 31ல், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். இன்னமும் கட்சி துவக்கவில்லை. மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அவருக்கு போட்டியாக அரசியலுக்கு வந்த, நடிகர் கமல், பிப்., 21ல் கட்சியை துவக்கி விட்டார். அவர், மதுரைக்கு ரசிகர்களை அழைத்து, கட்சி பெயரை அறிவித்தார். அவரது அரசியல் கட்சி, பெரிய அளவில் தாக்கத்தைஏற்படுத்தவில்லை.ஆனால், இன்னமும் கட்சி துவக்காத ரஜினி, நேற்று எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில் பேசியது, அரசியல் அரங்கை அதிர வைத்துள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும், ரஜினி பேச்சு குறித்தே விவாதிக்க துவங்கி விட்டனர்.
அவர் பேச்சை கேட்டு, இளைஞர்கள் ஆர்ப்பரித்தது, மனதில் பட்டதை படபடவென அவர் பேசியது, அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.அவர் பேசிய சில நிமிடங்களில், சமூக வலைதளங்களில், அவரது பேச்சு பரவியது. அதைத் தொடர்ந்து, விமர்சனங்களும், 'மீம்ஸ்'களும் பறந்த படி இருந்தன; அவற்றில் சில:
* கமல் உயிரை கொடுத்து நடிப்பார்; தலைவர் தலையை சிலுப்பி, மொத்தமாக காலி செய்து விடுவார்
* கமல் கோடிக்கணக்கில் செலவு செய்து, பொதுக்கூட்டம் நடத்தினார். ரஜினி, பைசா செலவு இல்லாமல், அனைத்தையும் முடித்து விட்டார்
* தமிழகம் முழுவதும் இனி நம்ம, 'கன்ட்ரோல்' தான் - ரஜினி ரசிகர்கள்
* தமிழ் பேசினால் தான் தமிழ் வளரும் - கமல்; 'தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராதுங்க. தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும்' - ரஜினி. நீங்களே முடிவு செய்யுங்கள், ராமனா, ராவணனா?


Advertisement

வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sulikki - Pudukkottai,இந்தியா
06-மார்-201820:01:23 IST Report Abuse

Sulikkiகன்னட பள்ளியில் இவர் தமிழில் படித்தாராம்? போட்டாரு பாரு ஒரே போடா. இவருக்கு தமிழே பேச வராது. குதறி கொன்று காலி செய்துவிடுவார். இவர் மட்டும் தமிழ்ல பேசி நடிப்பார் அத பார்த்து நாங்க விசிலடிக்கணும். இதுக்கும் பொறுக்கி தின்ன, ஜால்றா போட பின்னாடி ஒரு கூட்டம். ஒரு தமிழன் போய் கர்நாடகாவில் இப்படி பேச முடியுமா?. மானம் கெட்ட தமிழனே சிந்திப்பீர்.

Rate this:
Kailash - Chennai,இந்தியா
07-மார்-201809:07:28 IST Report Abuse

Kailashதமிழன் தமிழ் நாட்டில் தான் பேச முடியும் கர்நாடகாவில் போய் பேசினால் அவர்களுக்கு புரியுமா? ரஜினி கர்நாடகாவில் கன்னடத்தில் பேச முடியும் அவருக்கு அந்த மொழியும் தெரியும் உன் சீமான் அங்கே போய் இதே போல வீராவேசமாக பேச துணிவு இருக்கிறதா? குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவன் உலக தமிழரை முன்னேற்றுவாராம்.......வீரன் எப்போதும் போரில் தான் போட்டி போட வேண்டும் அதற்க்கு பயந்து எதிரே இருக்கும் வீரனின் முதுகில் குத்த நினைப்பவன் வீரனா? ...

Rate this:
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
06-மார்-201819:25:46 IST Report Abuse

Rajhoo Venkateshஐயா ரஜினி அவர்களே படிக்கும் போதே அரசியலுக்கு வந்த தும்பிடோரை இன்னிக்கி எத்தனை கல்லூரி வெச்சுருக்கார். நீங்க சினிமாவில் சம்பாதிச்சதை எல்லாம் பாதுகாக்க தான் அரசியலுக்கு வருகிறீர்கள் மற்றபடி மக்களாவது மண்ணாவது. சும்மா நடிக்காதீங்க. அவ்வளவு அக்கறை இருந்திருந்தால் நீங்கள் எப்போதோ அரசியலுக்கு வந்திருக்கவேண்டும். காலம் போன பின்னால் வந்து கன் சலூட் ஒன்னு தான் .பாக்கி

Rate this:
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-மார்-201818:30:55 IST Report Abuse

Muthuபடிக்கிறபிள்ளைகளுக்கு அரசியல் வேண்டாம் ..அதே போல நடிக்கிற உங்களுக்கும் அரசியல் வேண்டாமே

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X