'பாலம்' விஷயத்தில், 'சவுத்' எம்.எல்.ஏ.,க்கு 'ஷாக்' 'பார்' படலத்தில், ஆளுங்கட்சி 'மாஜி'க்கு 'செக்'

Added : மார் 06, 2018
Share
Advertisement
வெயில் கொளுத்தி கொண்டிருந்த ஒரு விடுமுறை நாளின் மதிய வேளை. மொபட்டில், சித்ராவும், மித்ராவும் காமராஜ் ரோட்டில் சென்ற போது, சற்று இளைப்பாற, மாநகராட்சி வெள்ளி விழா நினைவு பூங்காவுக்குள் நுழைந்தனர். ''அப்பாடா... இப்பதான், கொஞ்சம் நல்லாருக்குது,'' என்ற வாறே, புல்தரையில் அமர்ந்தாள் மித்ரா. ''ஆமாம்... மித்து, நீ...சொல்றது சரிதான். இப்படியே வெயில் அடித்தால், ஜனங்க வீட்டை
'பாலம்' விஷயத்தில், 'சவுத்' எம்.எல்.ஏ.,க்கு 'ஷாக்' 'பார்' படலத்தில், ஆளுங்கட்சி 'மாஜி'க்கு 'செக்'

வெயில் கொளுத்தி கொண்டிருந்த ஒரு விடுமுறை நாளின் மதிய வேளை. மொபட்டில், சித்ராவும், மித்ராவும் காமராஜ் ரோட்டில் சென்ற போது, சற்று இளைப்பாற, மாநகராட்சி வெள்ளி விழா நினைவு பூங்காவுக்குள் நுழைந்தனர்.
''அப்பாடா... இப்பதான், கொஞ்சம் நல்லாருக்குது,'' என்ற வாறே, புல்தரையில் அமர்ந்தாள் மித்ரா. ''ஆமாம்... மித்து, நீ...சொல்றது சரிதான். இப்படியே வெயில் அடித்தால், ஜனங்க வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாங்க போல,'' என்ற சித்ரா, பூங்கா ஸ்டாலில், கம்பங்கூழ் இரண்டு கப்பில் வாங்கி வந்தாள்.
''தேங்க்ஸ்கா... நானே சொல்லலாம்னு நினைச்சேன். நீங்க வாங்கிட்டு வந்திட்டீங்க,'' என்ற மித்ரா, கடகடவென கம்பங்கூழை குடிக்க ஆரம்பித்தாள்.''அப்படி, இப்படின்னு பேசிட்டு, கடைசியில அரசு போக்குவரத்து கழக பெரிய ஆபீசர் ரிட்டயர்மென்ட் வாங்கிட்டு போயிட்டாரு பார்த்தியா,' என்றாள் சித்ரா. ''ஆமாம். கேள்விப்பட்டேன். ஆனால், இன்னும் அந்த போஸ்டிங் குக்கு யாரையும் நியமிக்கலை. நான், நீன்னு போஸ்டிங் வாங்க முக்கிய பிரமுகர்களை சிபாரிசு கேட்டு, கையில் பெட்டியோடு போட்டா போட்டியாம். இதுல ஒருத்தர் உடுமைலயில் செட்டில் ஆகி விட்ட முன்னாள் ஆபீசர்கிட்ட இதற்காக என்ன செய்வது? என யோசனை கேட்டு அணுகியிருக்காராம்,'' என்று தனக்கு தெரிந்த தகவலை சொன்னாள் மித்ரா.
''நீ யாரை சொல்கிறாய்? ஒரு லோடு டீசல் காணாமல் போன விவகாரத்துல, ஒரு அப்பாவியை பலிகடா ஆக்கின பெரிய ஆபீசரை பத்திதானே?'' என சித்ரா கேட்டதும், ''ஆமாங்க ஆமாம்...,'' என்று விளம்பர பாணியில் வேகமாக பதில் சொல்லவும், பூங்காவில், நுழைந்த ஒருவரை பார்த்த மித்ரா, ''என்ன, மகேந்திரகுமார் அங்கிள், பார்க்கவே முடியறதில்லை,'' என்றாள். அவரும், பதில் சொல்லி விட்டு நகர்ந்தார்.
''பல்லடத்துல வேலை செஞ்ச ஒரு ஆபீசரை திருப்பூருக்கு போஸ்டிங் போட்டிருக்காங்க. ஆனா, இதுக்கு முன்னாடி இருந்த ஒரு 'கில்லாடி' ஆபீசர், டெப்போவுக்கு வராத ஒரு லோடு டீசலை வந்ததாக கணக்கு காட்டியிருக்காரு. ஆடிட்டிங்கில், இந்த விவகாரம் வந்ததால், புதுசா வந்தவரை சஸ்பெண்ட் செஞ்சிட்டாங்க,'' என்று சித்ரா சொன்னதும், ''பழி ஓரிடம்... பாவம் ஓரிடம்னு சொல்றது சரியாத்தானே இருக்கு. அப்புறம் என்ன ஆச்சு?,'' என ஆதங்கப்பட்டாள் மித்ரா.
''இதை மேலிடத்துக்கு கொண்டு போக, சஸ்பெண்ட் ஆனவர் முயற்சி செஞ்சபோது, 'இது பெரிய விவகாரமாக போயிடும்னு.. சொல்லி, சஸ்பெண்டை சத்தமில் லாமல், கேன்சல் பண்ணி, முருகன் ஆண்டி கோலத்துல நிற்கிற ஊருக்கு டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க,'' என்றாள் சித்ரா.''உள்ளாட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தற விவரம் தெரியுமா?'' என்று பீடிகை போட்டாள் மித்ரா.
''ஆமா...உள்ளாட்சி அமைப்பு பதவிக்காலம் முடிந்து ஆபீசர்கள் பொறுப்புல இருந்த நேரத்தில், பல உள்ளாட்சியில் அதிகாரிகள், அதிகார துஷ்பிரயோகம் செஞ்சு, ஏராளமான பொருட்கள் கொள்முதல் செஞ்சிருக்காங்க. இதுக்காக, பல போலி நிறுவனங் களின் லெட்டரை பேடு 'செட் டப்' பண்ணி, கொட்டேஷன் போட்டு, அந்நிறுவனங்களுக்கு 'செக்' கொடுக்கிற மாதிரி கொடுத்து, பல முறைகேடுகளை பண்ணியிருக்காங்களாம்,''''இது தெரிஞ்ச, ஊழல் தடுப்பு போலீசார், இந்த முறைகேடுகளை விசாரித்து, ஆவணங்களை கலெக்ட் பண்ணிட்டு இருக்காங்களாம். இதனால், 'கல்லா' கட்டின ஆபீசர்கள், மடியில, நெருப்பை கட்ன மாதிரி, 'படபடப்பா' இருக்காங்களாம்,'' என்று சித்ரா சொன்னதும், மித்ரா சிரித்தாள்.
''சிட்டியிலுள்ள 'பார்'களில் வசூல் பண்ண, புது டெக்னிக்கை போலீசார் கண்டுபிடிச்சிருக்காங்க, தெரியுமா?'' என்று சித்ரா பீடிகை போட்டதும், ''சொன்னாதானே, தெரியும்?'' என்றாள் மித்ரா.''கமிஷனர் இருக்கும் போது 'பார்'மற்றும் லாட்டரியில், வசூலிச் சா, ஏதாவது பிரச்னை ஆகிவிடும் என்று பயந்த சில போலீசார், அவர் லீவில் இருக்கும் போது, 'சும்மா... பூந்து விளையாடுறாங்களாம். அதிலேயும், ஒட்டுமொத்தமா வசூல் பண்ணி, பங்கு போட்டுட்டாங் களாம்,'' என்று ரகசியத்தை உடைத் தாள் சித்ரா.''ஓ... இப்ப, இந்த டெக்னிக்கை யூஸ் பண்றாங்களா...? நானும் ஒரு விஷயத்தை கேள்விப்பட்டேன். 'அவுட்டரில்' உள்ள ஸ்டேஷனில், 'சார்ஜ்' எடுத்து ஒரு மாசம் கூட, ஆகலை. அதுக்குள்ள, புதுசா வந்த அதிகாரி, வசூலில், பட்டையை கெளப்றாராம். இனிமே, 5ம் தேதிக்குள்ள 'டாஸ்மாக்' வசூலை முடிச்சுக் கோணும்னு, ஸ்டிரிக்ட்டா சொல்லிட் டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''அதே மாதிரி, பாத்திர உற்பத்தி நடக்கிற பகுதி இன்ஸ்பெக்டரும், தானே களமிறங்கிட்டாராம். 'டாஸ்மாக்' பாரில் வசூல் செய்ய மீடியேட்டர் யாரையும் வைக் காமல், தானே களத்தில் இறங்கி, 'கலெக்ட்' பண்றாராம்,'' என்று சித்ரா சொல்லி முடிக்கவும், ''அப்ப... ஒன்மேன் ஆர்மின்னு, சொல்லுங்க,'' என்றாள் மித்ரா.''என்னப்பா, கார்ப்ரேஷன் மேட்டரே இல்லையா?'' என்று சித்ரா கேட்டதும், ''ஏன்... இல் லாம? காப்ரேஷன் சி.எச்.ஓ., துறை சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்க கஷ்டப்படுறாராம். சீனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் சிலர் சொல்ற மாதிரி நடந்துகிட்டு, வேறெந்த வேலையும் செய்யாமல், ஆபீசே கதின்னு கிடக்கறாராம். இதனாலே, சி.எச்.ஓ.,ன்னு ஒருத்தர் இருக்கிறாரான்னு, சந்தேகப்படும் அளவுக்கு ஆயிடுச்சுன்னா, பார்த்துங்கோங்க,'' என்று மித்ரா, படபடவென பேசிவிட்டு, 'மணி, ஒன்னு ஆகப்போகுது. இந்த பூபதி சித்தப்பா இன்னும் போன் பண்ணலையே,'என்று யோசித்தாள்.
அதற்குள் பேசிய சித்ரா, ''பல ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு, ஏ.சி., ரூமில் உட்கார்ந்து வேலை பார்க்கிற ஆபீசருக்கு, மக்கள் பிரச்னை என்னைக்குத்தான் புரியுமோ? இந்த விஷயத்தை கேளேன். மூன்றாவது மண்டலத்தில், புதிய வாட்டர் கனெக்ஷனுக்கு, விண்ணப்பம் வாங்க ஆபீசர் மறுக்கின்றனராம். ஆனால், வைட்டமின் 'ப'வை கொடுக்கிறவங்களுக்கு மட்டுமே, உடனே லைன் கொடுக் கறாங்களாம்,'' என்றாள்.''கார்ப்ரேஷன் என்றால், கரெப்ஷன்னு சொல்ற அளவுக்கு ஆபீசர்களும் நடந்துக்கிறாங்க. அட.. ஆபீசர்கள்தான் அப்படின்னா... இந்த எம்.எல்.ஏ.,.க்களும் அப் படித்தா இருக்காங்க. 32வது வார்டில், அதிகமாக குடிநீர் போறமாதிரி, 'வால்வை' திறக்கச் சொல்லி, 'சவுத்' கொடுத்த 'டார்ச் சரில்'திறந்தாங்களாம், இதை தெரிஞ்சுட்டு, மக்கள் கடுமையா எதிர்ப்பு தெரிவிச்சதால, 'சவுத்' பின்வாங்கிட்டாராம்,'' என்றாள் மித்ரா.''நானும் கேள்விப்பட்டேன். 'இவரு 'சவுத்'துக்கு எம்.எல். ஏ.,வா? அல்லது ஒரு லே-அவுட்டுக்கா?'ன்னு கேட்டு, மக்கள் கொதிச்சு போயிட்டாங்களாம்?'' என்று சொன்ன சித்ரா, ''மித்து... போயி... வேர்க்கடலை வாங்கிட்டு வா. பசிக்குது,'' என்றதும், மித்ரா எழுந்து சென்றாள்.வேர்க்கடலையை சாப்பிட்டு கொண்டே ''ெஷரீப் காலனியில, ஜெ., பிறந்த நாள் விழாவுக்கு இடத்த சுத்தம் செஞ் சதுக்காக, துப்புரவு தொழிலாளிய சஸ்பெண்ட் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''என்னக்கா இது அநியாயம்?'' என்று ஆவேசப்பட்டாள் மித்ரா.''ஏய்.. நீ சும்மா, டென்ஷன் ஆகாதடி. ஜெ., பிறந்த நாள் விழாவுக்காக, சசி குரூப் ஆளுங்க, அரண்மனைப்புதுார் பகுதியில, அன்னதானம் கொடுத்தாங்க. அதுக்காக, ஏரியா 'மாஜி'கவுன்சிலர் சொன்னதால், அந்த இடத்தை, பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செஞ்சு கொடுத்துட்டாங்க. இதை தெரிஞ்சுகிட்ட, முக்கிய புள்ளி ஒருத்தர், எம்.எல்.ஏ.,கிட்ட பத்த வைச்சிட்டாரு. உடனே, தனியார் நிறுவன துப்புரவு பெண் ஊழியர 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க,'' என்று விளக்கினாள் சித்ரா.''எம்.எல்.ஏ.,னு சொன்னதும் ஞாபகம் வருதுக்கா... ஜெ., பிறந்த நாள் விழாவுக்கு, 'சவுத்' வரலையாமே'' என்றாள் மித்ரா.''இதுல என்ன நடந்துச்சுனு நான் சொல்றேன் கேளு. 'நான் சென்னை போறதால், எந்த விழாவும் நடத்தக்கூடாதுன்னு', 'மாஜி'சொல்லிட்டு போயிட்டாராம். அதனாலே, தான் நடத்த இருந்த விழாவை கைவிட்ட 'சவுத்', அதுக்கப்புறம், 'மாஜி'நடத்தின விழாவுக்கு போகலையாம்,'' என்று சித்ரா சொன்னதும், ''இவங்க சண்டையே தீர மாட்டேங்குது. இதுல, மக்கள் பிரச்னைய பத்தி நினைக்கவா போறாங்க...''என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.
''டாஸ்மாக், 'பார்'மேட்டரை கேள்விப்பட்டியா?'' என்று பொடி வைத்தாள் சித்ரா. ''சொன்னாதாங்க தெரியும்,''என்று மித்ரா சொன்னதும், ''ஆளும்கட்சிக்காரங்க, ஆனந்தமான 'மாஜி'மேல, 'செம' கோபமா இருக்காங்க. தனக்கு வேண்டிய ஆட்களை போட்டு, 'பினாமி' பேர்ல 'பார்' எடுத்து, அவரே எல்லாத்தையும் வச்சுக்கிறாராம்,''''இதை தெரிஞ்சிகிட்ட, சில நிர்வாகிகளை, 'சவுத்' தன்பக்கம் இழுத்து, 'செக்' வைச்சுட்டாராம். இதை தெரிஞ்சா 'மாஜி' கடுப் பாயிட்டாராம்,'' என்றாள் சித்ரா.
''சவுத் பத்தி இன்னொரு மேட்டரை கேளுங்க. காமராஜ் ரோடு பாலம் கட்டுற பணியை, ஆய்வு செஞ்ச எம்.எல்.ஏ., அதனை, தன்னோட 'பேஸ்புக்'கில் போஸ்ட் செஞ்சிருக்காரு. இதை பார்த்துட்டு, 'நெட்டிஷன்கள்' 'கிழி கிழி'ன்னு கிழிச்சுட்டாங்களாம். 'இந்த 'பறக்கும்'பாலம் முத லில் தேவையானு நீங்க யோசிச் சிருக்கனும்... தேவையில்லாம கட்டற பாலத்தை, ஆய்வு செய்யறீங்கன்னு சொல்லி, 'சவுத்'துக்கு சராமரியாக 'கமென்ட்' வந்ததாம்,''என்று மித்ரா சொன்னதும், ''அடடே... அப்டியா.. என்னோட இன்பாக்ஸில் கூட, 'காமராஜ் ரோட்டில் வரும் புழுதி, பாதி திருப்பூரையே மறைச் சிடுச்சு,'ன்னு 'செமையா' ஓட்டி எடுத்திருக்காங்க,''என்று சிரித்தாள் சித்ரா.
''ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி, எந்த போன் வந்தாலும் பயந்து நடுங்குறாராம்?''என்று கேள்வி கேட்டாள் மித்ரா.''அவரு, அதிகாரியா இருந்தப்ப, பஞ்சாயத்துக்கு குளோரின் மாத்திரை வாங்குனதுல ஊழல் நடந்திருக்குனு, 'எப்.ஐ.ஆர்.,' இருக்கு. இப்ப புரமோஷனில், திருப்பூர் வந்துட்டாலும், கேஸ் தீவிரமாயிடுச் சாம். தலைக்கு மேல் கத்தி தொங்கறாலே, எப்பவுமே பதட் டமா இருக்காராம். சரி. மித்து. கிளம்பலாம் வா போற வழியில, 'ரமேஷ்' ஸ்டோரில், சில பொருள் வாங்கிட்டு போயிடலாம்,'' என்று சொல்லி, மொபட்டை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X