பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விஸ்வரூபம் எடுக்கும் ஈ.வெ.ரா., சிலை விவகாரம்;
அ.தி.மு.க., உறுதியால் சிக்கல் நீடிப்பு

புதுடில்லி : ஈ.வெ.ரா., சிலை விவகாரம் தொடர்பாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், பார்லி.,யின் இரு சபைகளும், நேற்று முடங்கின.

  ADMK MPs,EVR statue affair,Parliament,அ.தி.மு.க எம்.பிக்கள், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,  ஈ.வெ.ரா சிலை விவகாரம், காவிரி விவகாரம், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரம், ஆந்திர மாநிலம் சிறப்பு அந்தஸ்து , காவிரி மேலாண்மை வாரியம், 
 Anna Dravida Munnetra Kazhagam,  Cauvery affair, Parliamentary Budget Session, Punjab National Bank affair, Andhra Pradesh Special status, Cauvery Management Board,


'காவிரி விவகாரத்தில், ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்து, விவாதம் நடத்த வேண்டுமென்பதில், பின்வாங்க முடியாது' என, லோக்சபா சபாநாயகரிடம், அ.தி.மு.க., உறுதியாக கூறிவிட்டதால், பார்லிமென்டில் சிக்கல் நீடிக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரின், கடந்த இரண்டு நாட்களும் வீணாகிவிட்ட நிலையில், மூன்றாவது நாளான நேற்று, லோக்சபா கூடியதுமே ரகளை ஆரம்பானது.

அமளிபஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தை முன்வைத்து, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ்,எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர்.ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, அம்மாநில, எம்.பி.,க்களும், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கேட்டு, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, எம்.பி.,க்களும், மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கோரி, சிவசேனா, எம்.பி.,க்களும் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, கடந்த இரு நாட்களும் அமளியில்இறங்கிய, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நேற்று, ஈ.வெ.ரா., சிலை விவகாரம் குறித்தும் குரல் எழுப்பினர்.
பா.ஜ.,வைக் கண்டிக்கும் வகையிலான போஸ்டர்களுடன், சபை முழுக்க நிறைந்து நின்றும், வலம் வந்தும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆவேசமாக குரல் கொடுத்தனர்.
கடந்த காலங்களில், அமைதியாகவும் இருக்கும் இடம் தெரியாமலும் வலம் வந்த தமிழக,எம்.பி.,க்கள், இவ்வளவு ஆக்ரோஷம் காட்டி, சபையை முடக்கும் வேகத்தால், சபை முழுவதும்,பரபரப்பு காணப்பட்டது.

ஒத்திவைப்பு


இதனால், இரண்டு முறை அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டு, பின், நாள் முழுவதும், சபைஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவிலும் காலை முதலே ரகளை ஆரம்பமானது. அங்கும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், அனலை கிளப்பினர். ஈ.வெ.ரா., சிலை விவகாரம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று, தி.மு.க., - எம்.பி., சிவா, 'நோட்டீஸ்' அளித்திருந்த நிலையில், இதே பிரச்னையில், அ.தி.மு.க.,வும் இணைந்து கொண்டதால், எதிர்ப்பு கோஷங்களால், ராஜ்யசபா அதிர்ந்தது.அப்போது பேசிய சபைத் தலைவர், வெங்கையா நாயுடு, ''எல்லா பிரச்னைகளையும் விவாதிக்கலாம். அதற்கு சபையில் அமைதி தேவை.''ஆனால், தற்போதைய நிலைமை, மிகவும் மோசம். சரியான திசையில் சபை நடவடிக்கைகள் செல்லவில்லை. இந்த அமளி ஜனநாயத்துக்கு எதிரானது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்,'' என்று கூறிவிட்டு, சபையை மதியம் வரை ஒத்திவைத்தார்.
அதன்பிறகு அடுத்தடுத்து கூடியும், அலுவல்களை தொடர முடியாத நிலை ஏற்படவே,வேறு வழியின்றி நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisementஆய்வுக்குழு கூட்டம்


இந்நிலையில், முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, சபாநாயகர், சுமித்ரா மகாஜன் தலைமையில், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டம் குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் காலதாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து, சபையில் விவாதம் நடத்த வேண்டும். தமிழக மக்களின் உரிமை பிரச்னை என்பதால், எக்காரணம் கொண்டும் எங்களால் பின்வாங்க முடியாதென பார்லிமென்ட், அ.தி.மு.க., தலைவர், வேணுகோபால் உறுதியாக கூறிவிட்டார்.

சபாநாயகர், பலமுறை சமாதானம் செய்தும், அதை ஏற்காத வேணுகோபால், 'பார்லிமென்டில், அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு இதுதான். இதில் மாற்றம் ஏதும் வேண்டுமெனில், எங்கள் கட்சித் தலைமையிடம் பேசிக் கொள்ளுங்கள். அதுவரை அமளி தொடரும்' என கூறினார்.

பிற எதிர்க்கட்சிகளும், அவரவர் நிலைப்பாடுகளில் உறுதி காட்டினர். இதனால், சபை சுமுகமாக நடக்க, தற்போது ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை விலக வாய்ப்பில்லை. அடுத்த சில நாட்களுக்கு, சிக்கல் நீடிக்கவே செய்யும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
08-மார்-201821:41:43 IST Report Abuse

தத்வமசி பெரியார் மண்ணு, கண்ணு, பொண்ணுன்னு சொல்லிட்டு ஆட்சிய புடிச்சவனுங்க,,, அவரோட சொத்த ஆளுபவர்கள் எல்லாம் அவருடைய உளுத்து போன காலத்துக்கு ஒவ்வாத கொள்கைகளை ஏற்கனவே கோட்டைக்கு கிழக்கே ஒரு மைலுக்கு அப்பால் தூக்கி போட்டு விட்டார்கள். இன்னும் மிஞ்சி இருப்பது அவரது சிலைகள் மட்டும் தான். ராஜா ஏன் அவரசர படுகிறாரோ.. இன்னும் கொஞ்ச நாள் அதுவும் மதிப்பில்லாமல் போய் விடும். கண்டுக்க மாட்டார்கள். இவரது சீடர்கள் எல்லாம் எல்லாம் அவர்கள் வீட்டில் கணஜோராக பெரியாரின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து ஆரிய கொள்கைகளை கொண்டாடி வருகிறார்கள். திருமணத்தில், மணிவிழாவில், பவளவிழாக்களில் முதலில் ஆரியரை வைத்து அட்சதை தூவி, தாலியை பய பக்தியுடன் அணிந்து கொண்டு, தங்கள் குல தெய்வத்தின் கோவிலில் இருந்து வந்த மாலை மரியாதைகளை வாங்கி அணிந்து கொண்டு நன்கு நடை பெறுகிறது. வெளியில் கடைசியில் ஒரு மேடை வைத்து அதில் தலைவர்கள் வந்து எதிர்களை வாங்கு வாங்கு என்று வாங்கி பெரியார் முறையில் திருமணம் நடத்து கின்றனர். தலைவர்கள் தங்களை பக்குவமாக பார்த்து கொண்டு, டிவிக்கு முன் நான் பெரியாரின் கொள்கைகளின் வாரிசு என்று அட்டகத்திய சுத்தறானுங்க. வீரமணியும் அப்படித்தான். எதோ சில பேரு மட்டும் அவர தெய்வம் மாதிரி அவரது கொள்கைகளை பின் பற்றி ஆரிய முறையில் வாழ்ந்து அவருக்கு சிலை வைத்து தவறாமல் அந்த பெரியார் சிலையாக இருக்கும் கருங்கல்லை, சிமென்ட் + ஜல்லி + இரும்பு கலவையை வருடா வரும் தவறாமல் மாலை இட்டு, தூபம் போட்டு, கற்பூரம் கொளுத்தி, வாழை பழம் வைத்து பயபக்தியுடன் கும்பிட்டு அவர் பெயரில் வாழ்கையை ஓட்டுவதற்கு, நன்கு பிரார்த்தனை செய்து உண்மையில் ஆரியத்தை தமிழகத்தில் நன்கு வளர்க்கின்றனர். பெரியாரின் கொள்கை என்று கூற வேண்டும் என்றால் அவரது படம் கூட இருக்க கூடாது. இவனுங்க கத்துறானுங்க. அட போங்கப்பா... போய் பொழைப்ப பாருங்க. இங்கே ஒரு நண்பர் தமிழரல்லாதவர் பெரியார் பற்றி கேட்டார்..? கேட்டவர் அவர் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் என்ன செய்துள்ளார் என்று கேட்டார். என்னங்க பதில் சொல்லலாம். உண்மையிலேயே அவர் என்னங்க செய்துள்ளார்...?

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
08-மார்-201818:35:27 IST Report Abuse

Sundaramஹெச்.ராஜா மீது கண்டிப்பான முறையில் நடவடிக்கை எடுக்க பட வேண்டும்

Rate this:
Siva - Chennai,இந்தியா
08-மார்-201818:26:42 IST Report Abuse

Sivaஏன்டா அ தி மு க, அந்த குருமவளவன் கோவிலை உடைப்பேன்னு சொன்ன போது எங்க போயிருந்தீங்க ???

Rate this:
மேலும் 81 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X