சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி கொலை

Updated : மார் 09, 2018 | Added : மார் 09, 2018 | கருத்துகள் (95)
Advertisement
 Meenakshi college,student Ashwini ,student murder,சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி, கத்தியால் குத்தி கொலை, மீனாட்சி கல்லூரி, ரகசிய கண்காணிப்பு கேமரா, போலீசார் விசாரணை, மாணவி அஸ்வினி கொலை, Chennai college student Ashwini, Secret surveillance camera, police investigation, student Ashwini murdered,

சென்னை: சென்னையில் கல்லூரி வாயிலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சென்னை கேகே நகரில் மீனாட்சி கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி அஸ்வினி. வகுப்பு முடிந்து வீடு திரும்பிய போது, அவரை கல்லூரி வாயிலில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அஸ்வினியை மீட்டு அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கத்தியால் குத்திய இளைஞரை பொது மக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கொலை செய்தவர் செஞ்சியை சேர்ந்த அழகேசன் என்பதும், சுகாதார துறையில் பணிபுரிந்து வரும் அவர் மதுரவாயல் பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அஸ்வினி அளித்த புகாரின் பேரில் அழகேசனை போலீசார் கைது செய்ததாகவும், இதனால், ஆத்திரமடைந்த அழகேசன் கொலை செய்ததாக தெரியவந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் , சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெற்றோர் விழிப்பாக இருந்திருந்தால்..

கல்லூரி மாணவி கொலை குறித்து தியாகராய நகர் துணை ஆணையர் அரவிந்தன் தெரிவிக்கையில், பிற்பகலில் கல்லூரி முடிந்து வெளியே வந்த போது அஸ்வினியை அழகேசன் கொலை செய்துள்ளார். மதுரவாயிலில் வாட்டர் கேன் போடும் அழகேசனுடன் நட்பாய் ஆரம்பித்து காதலித்து வந்துள்ளார் அஸ்வினி. பெற்றோர் கண்காணிப்போடு இருந்திருந்தால் அஸ்வினி கொலை நடந்திருக்காது. அஸ்வினியை கொலை செய்தபின் அழகேசனும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

பொதுமக்கள் தாக்கியதில் அழகேசன் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அழகேசன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அழகேசனுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி தர போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசாரை நண்பனாக பார்த்து ஆரம்பத்திலேயே புகார் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan - chennai,இந்தியா
10-மார்-201801:32:26 IST Report Abuse
Nagarajan இந்த கொலைக்கு காவல் துறை அலட்சியம் தான் காரணம் அவர்கள் ஏற்கனவே புகார் செய்துள்ளார்கள்
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
09-மார்-201821:07:03 IST Report Abuse
suresh சிலையை உடைத்தவனையும் பெண்ணை கொன்றவனையும் பிடித்தது திராவிட தமிழ் மகனே
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
09-மார்-201820:41:12 IST Report Abuse
ஜெயந்தன் சொம்பு, ஒல்லி பிச்சான் , இன்னு பிற கேடு கெட்ட நடிகர்களின் படம் தான் இதற்கெல்லாம் காரணம்.. இந்த கேடு கெட்ட சினிமாவிலிருந்து தான் தமிழ் நாட்டின் அடுத்த முதல்வராக துடிக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
09-மார்-201821:02:45 IST Report Abuse
Darmavanஏன் இந்த மூளை கெட்ட ஜனங்கள் அவன் பின்னால் போகிறார்கள் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X