பொது செய்தி

இந்தியா

வங்கி கடனை திருப்பி செலுத்தாதோர் அதிகரிப்பு

Updated : மார் 10, 2018 | Added : மார் 10, 2018 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, அதை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.வங்கிகளில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாதவர்கள் குறித்து, லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர், ஷிவ்பிரதாப் சுக்லா அளித்த பதிலில் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளில், நடப்பு நிதியாண்டில் கடன்
Public Sector Banks, Lok Sabha,Shiv Pratap Shukla,பொதுத்துறை வங்கிகள், லோக்சபா, நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ்பிரதாப் சுக்லா, ரிசர்வ் வங்கி கிரிமினல் நடவடிக்கை, வங்கி கடன் மோசடி , 
 Finance Minister Shiv Pratap Shukla, Reserve Bank criminal proceedings, bank loan fraud,

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று, அதை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, அரசு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாதவர்கள் குறித்து, லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நிதித்துறை இணை அமைச்சர், ஷிவ்பிரதாப் சுக்லா அளித்த பதிலில் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளில், நடப்பு நிதியாண்டில் கடன் பெற்றவர்களில், 9,063 பேர், வேண்டுமென்றே கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளனர். இந்த தொகை, 1.10 லட்சம் கோடி ரூபாய்.

கடனை திரும்ப செலுத்த வசதி இருந்தும், வேண்டு மென்றே அதை செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த நிதியாண்டை விட, 1.66 சதவீதம் அதிகரித்துள்ளது. இவர்கள் மீது, ரிசர்வ் வங்கி கிரிமினல் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கடனை திரும்ப செலுத்தாத, 2,108 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 8,462 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில், மார்ச், 2016 வரை, 2.30 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சொல்லின் செல்வன் - Bangalore,இந்தியா
10-மார்-201820:16:31 IST Report Abuse
சொல்லின் செல்வன் இவர்களுக்கெல்லாம் குலசாமி விஜய் மல்லயா
Rate this:
Cancel
10-மார்-201817:47:51 IST Report Abuse
kulandhaiKannan கடன் ஏய்ப்பாளர்களில் பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன், விவசாயி, வியாபாரி என்ற வேறுபாடில்லை. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
Rate this:
Cancel
shankar - chennai,இந்தியா
10-மார்-201817:11:17 IST Report Abuse
shankar அதிக வட்டி மற்றும் கடனுக்கும் வட்டிக்கும் சேர்த்து அதிக தொகையை அப்பாவி மக்களை ஏமாற்றி பெரும் வங்கிகளை என்ன செய்யலாம் அதுவும் தேசிய அரசுடைமை ஆக்க பட்ட வங்கிகளை என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். கடனை கட்டாதவர் மீது நடவடிக்கை வட்டி சதவிகிதத்தை சரியாக கணக்கிடாமல் அதிக வட்டி வசூல் செய்யும் வங்கிகள் மீதும் நடவடிக்கை எடுக்க பொது மக்களுக்கு அதிகாரம் உள்ளதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X