அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மக்களை நம்பியே
அரசியலுக்கு வந்தேன்'

திருப்பூர் : ''மக்களை நம்பி, மக்களுக்காக அரசியலுக்கு வந்தேன்,'' என, அவிநாசியில் மக்கள் நீதி மைய தலைவர், கமல் பேசினார்.

'மக்களை நம்பியே அரசியலுக்கு வந்தேன்'


ஈரோட்டில், கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்ற கமல்ஹாசனுக்கு, திருப்பூர் மாவட்டம் சார்பில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, கமல்ஹாசன் பேசியதாவது: யாரை நம்பி, எதற்காக அரசியலுக்கு வந்தேன் என்று கேட்கின்றனர். மக்களை நம்பியே, மக்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன். மக்களிடம் தாக்குப்பிடித்தால் போதும்; எதிலும் தாக்குப்பிடிக்கலாம்.

இலக்கை நான் காட்டுகிறேன். அதை நோக்கி நாம் பயணிப்போம். என் பின்னால் வாருங்கள் என்று நான் சொல்லவில்லை. என்னோடு இணைந்து வாருங்கள் என்கிறேன். நாம் இணைந்து விட்டால் வெற்றி தான். யாரோ பார்த்துக் கொள்வர் என்று,
இதுவரை இருந்து விட்டோம். இனி, நாம் இறங்கி வேலை செய்தால் தான் முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின், கமலை, அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர், சந்தித்து பேசினர்.

Advertisement

அத்திக்கடவு திட்டம் குறித்து விபரம் மற்றும் அதன் தற்போதைய நிலை, பயன்பாடு, திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, ஐ.ஐ.டி., வல்லுநர்களிடம் விவாதிப்பதாக, அவர்களிடம் கமல் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
12-மார்-201815:12:53 IST Report Abuse

Tamilnesan ஆனால் மக்கள் உங்களை போன்ற ....களை நம்ப தயாராக இல்லையே

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
12-மார்-201810:39:14 IST Report Abuse

Malick Rajaசென்னியனுக்கு ஏண்டா குரங்கு சேட்டை என்பார்கள் அதை உவமையாக தனக்காக்கிக்கொண்ட கமலுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ... அவரின் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு 10.லட்சங்களாக மட்டுமே ஓட்டுக்கு இருக்க வாய்ப்பிருக்கிறது தவிர ஒரு சில MLA.க்களை கூட பெறுவதே கடினம் நிலைமை இவ்வாறிருக்க கூடுதலாக சொல்லவேண்டியதில்லை .. ரஜினியும் இதுபோலத்தான் ஆக சிலரின் தூண்டுதல் வெளி பொருளாதாரம் போன்ற வகைகளில் தமிழகத்தை வலம்வரலாம் ஆனால் சென்னை கோட்டைக்குள் நுழைய முடியாது .. என்பது மட்டும் உண்மை

Rate this:
Murthy - Bangalore,இந்தியா
12-மார்-201800:54:54 IST Report Abuse

Murthyஐஐடி இல் படிப்பவனுக்கு எப்படி அத்திக்கடவு - அவிநாசி பற்றி தெரியும்.....அவன் அமெரிக்க போறதுக்குத்தான் படிக்கிறான்......நல்லா காமெடி பண்றரைய்யா

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X