அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசரின் முதல்வர் கனவால்
அதிர்ச்சியில் ஸ்டாலின்

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி பிளவுபடும் வகையில், தமிழக முதல்வர் வேட்பாளருக்கான தகுதி தனக்கு உள்ளது என, தமிழக காங்., தலைவர், திருநாவுக்கரசர் பேசியுள்ளதால், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்து உள்ளார்.

D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்வரும், 24, 25ம் தேதிகளில், ஈரோட்டில் நடக்கவுள்ள, தி.மு.க., மண்டல மாநாட்டில், கூட்டணி குறித்த முக்கிய முடிவை அறிவிக்கவும், அவர் திட்டமிட்டுள்ளார். எனவே, அம்மாநாட்டிற்கு பின், தமிழக அரசியலில், புதுக் கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளது.
'எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைப்பேன்' என்ற, நடிகர் ரஜினியின் ஆவேச பேச்சு, தி.மு.க., தலைமையிடம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 'ஜெயலலிதா மறைவு, கருணாநிதியின் உடல்நலக் குறைவுக்கு பின், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது; அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு, தகுதியான தலைவர்கள் இல்லை. என்னால், அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்' என, சென்னையில் நடந்த, எம்.ஜி.ஆர்., சிலை திறப்பு விழாவில், ரஜினி பேசினார்.

பாதிப்பு?


இந்த பேச்சு, அவரது ரசிகர்களையும் கடந்து வரவேற்பை பெற்றுள்ளது.ரஜினியின் எம்.ஜி.ஆர்., புகழ் பாடும் பேச்சு, அ.தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுக்களை அறுவடை செய்யுமானால், தி.மு.க., வெற்றியை

பாதிக்கும் என, ஸ்டாலின் கருதுகிறார்.
ரஜினி கட்சிக்கு, தன் கட்சியிலிருந்து முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் ஓட்டம் பிடிக்காமல் இருப்பதற்காக, விரைவில், தி.மு.க.,வில் பெரிய மாற்றம் செய்ய உள்ளார்.கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் துவங்கி, கீழ்மட்டம் வரை, இந்த மாற்றம் இருக்கும் என, தெரிகிறது. அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், புதிய நிர்வாகிகள் பட்டியலையும் தயாரித்து வருகிறார்.

கூட்டணி கட்சிகளை நம்பி, தேர்தலை சந்திக்காமல், தன் சொந்த கட்சி ஓட்டுகளை நம்பி, களமிறங்கவும் முடிவு செய்துள்ளார். அதற்கு முன், ஓட்டு வங்கியை பலப்படுத்தவும், ஸ்டாலின் விரும்புகிறார்.

எனவே, மீண்டும் அழகிரியை சேர்த்து, துணைப் பொதுச்செயலர் பதவியும், கனிமொழிக்கு, தென் மண்டல அமைப்பு செயலர் பதவியும் வழங்கி, குடும்ப உறுப்பினர்களிடம் நிலவும் பூசலுக்கு முடிவுரை எழுதவும், ஸ்டாலின் தரப்பினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை ஆதரித்து, அழகிரியும், கனிமொழியும், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டால் நல்லது என்றும், கட்சியிலும், குடும்பத்திலும் முழு ஒற்றுமை ஏற்பட்டுள்ளதை காட்ட வேண்டும் என்றும், கட்சிக்கு அப்பாற்பட்ட சிலர், ஸ்டாலினுக்கு யோசனை தெரிவித்துள்ளனர்.

மேலும், கருணாநிதியால் பேச முடியாவிட்டாலும், அவர் மேடை ஏறி கை அசைத்தாலே போதும்; தொண்டர்கள் உற்சாகமடைந்து விடுவர் என்பதால்,அவருக்கும், 'பிசியோதெரபி' பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதுபற்றி, டாக்டர்கள் குழுவினரிடம் ஆலோசனை கேட்க, ஸ்டாலின் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

புதிய கூட்டணி


தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ,

Advertisement

'ஸ்டாலினை முதல்வராக்கி, அவரை என் கண்ணின் இமைபோல பாதுகாப்பேன்' என்கிறார். ஆனால், மற்றொரு கூட்டணி கட்சியான காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசரோ, முதல்வராக ஆசைப்படுகிறார்.
சென்னை, ராயபுரத்தில் நடந்த கட்சி விழா ஒன்றில் பங்கேற்ற திருநாவுக்கரசர், தன் பேச்சில், ௧௦ முறை முதல்வர் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். திருநாவுக்கரசரின் ஆசை, ஸ்டாலினுக்கு தெரிய வந்ததும், அவர் கடும் அதிருப்தி அடைந்தார்.

கூட்டணியில் இருக்கும் போது, ஸ்டாலினை ஆதரித்து பேசாமல், தன்னை தானே, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதால், அவரை இனி கூட்டணியில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை என, தி.மு.க., 'மாஜி'க்கள் சிலர், ஸ்டாலினிடம் துாபம் போட்டுள்ளனர்.

எனவே, காங்கிரஸ் கட்சியை, 'கழற்றி' விடுவதா அல்லது நீடிக்க வைப்பதா என்ற குழப்பத்தில், ஸ்டாலின் உள்ளார்.அது தொடர்பான அறிவிப்பை, வரும், 24, 25ம் தேதிகளில், ஈரோட்டில் நடக்கவுள்ள, தி.மு.க., மாநாட்டில் வெளியிட, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். எனவே, அம்மாநாட்டிற்கு பின், தமிழக அரசியலில், புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்புள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Madambakkam - Chennai,இந்தியா
19-மார்-201817:31:26 IST Report Abuse

Ramachandran  Madambakkamடெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் அவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து தருவோம் என்று கூறி உள்ளார். காங்கிரசின் தோழமை கட்சி என்கின்ற முறையில் தி. மு. க அதை இப்போதே பலமாக எதிர்க்க வேண்டும். ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து என்பது மறைமுகமாக தமிழக வளர்ச்சியை பாதிக்கும். எனவே ஸ்டாலின் அவர்கள் இப்போதே ராகுல் அவர்களுக்கு அவரது தீர்மானத்தை திரும்பப்பெற கடுமையான அழுத்தம் தர வேண்டும். இல்லை என்றால் நாளைய தலைமுறை அவரை மன்னிக்காது.

Rate this:
D.RAMIAH - RAIPUR,இந்தியா
12-மார்-201820:31:33 IST Report Abuse

D.RAMIAHTHIRUNAVUKKARASAR -ADMK- MINISTER IN MGR CABINET - AIADMK JANAKI AMMAL PARTY - AIADMK JAYA AMMA MINISTER - SEPARATE AIADMK - MINISTER IN BAJPAYEES CABINET- RAJAYA SABHA MP FROM MADHYAPRADESH ON BJP TICKET - UPTO 2010 - NOW IN CONGRESS WHO KNOWS MAY BECOME CM IN AIADMK-DMK-BJP COMBINE

Rate this:
INDIAN Kumar - chennai,இந்தியா
12-மார்-201816:44:07 IST Report Abuse

INDIAN Kumarயாருக்கு முதல்வர் ஆகும் பிராப்தம் இருக்கிறதோ அவர்கள் தான் பொறுப்புக்கு வரமுடியும் , எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்று யாராவது 2016il நினைத்தார்களா??? எல்லாம் வல்ல இறைவன் ஒருவருக்குத்தான் தெரியும்.

Rate this:
மேலும் 46 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X