சிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை

Added : மார் 12, 2018 | கருத்துகள் (16)
Advertisement
childrens vehicle,jail punishment,Hyderabad police,சிறுவர்கள் வாகனம், சிறை தண்டனை,  நீதிமன்றம் அதிரடி,  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஓட்டுனர் உரிமம், தந்தையருக்கு மூன்று நாட்கள் சிறை, ஐதராபாத் போக்குவரத்து போலீஸ்,சிறுவர் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை தண்டனை,
 court action, Telangana CM Chandrasekhar Rao,
Driver license, father jail for three days, Hyderabad traffic police,

ஐதராபாத் : ஐதராபாத் நகரில், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டிய, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெற்றோர், 69 பேருக்கு, சிறை தண்டனை வழங்கி, நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜனவரியில் நடந்த சாலை விபத்தில், சிறுவர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். 'வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற, 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்' என, சட்டம் உள்ளது.

இந்நிலையில், வாகனங்கள் ஓட்டும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஐதராபாத் போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். ஒரு மாதத்தில் மட்டும், கார், இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓட்டிய, 69 சிறுவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின் போது, அவர்கள் தந்தையரை, நீதிமன்றம் வரவழைத்தனர்.

சிறுவர்களுக்கு அபராதம் விதிக்காமல், சட்ட விரோதமாக அவர்கள் வாகனம் ஓட்ட காரணமாக இருந்த, அவர்களது தந்தையருக்கு, மூன்று நாட்கள் வரை சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
13-மார்-201814:36:32 IST Report Abuse
சீனி லட்சக்கணக்கில் பீஸ் வாங்கும் கோழிப்பண்ணை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கூரை ஏறி கோழி கூட பிடிக்கத்தெரிவதில்லை. 18 வயது நிறம்பிய மாணவர்களுக்கு, கல்லூரிகளில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு, வெட்டியாக பொழுது போக்குவதை விட வாகன ஓட்டும் பயிற்ச்சி கொடுத்து, முறையாக லைசன்சு பெற்று தரவேண்டும். அது பிற்காலத்தில் மிக உபயோகமா இருக்கும். பெரும்பாலும் லைசென்சு வாங்க லஞ்சம் கொடுக்கவேண்டும், அதுனால லைசென்சு இல்லம ஓட்டுறாங்க பசங்க, இவங்க இப்படி இருக்க போக்குவரத்து அதிகாரிகளும் காரணம். கல்லூரிக்கி போய் விழிப்புணர்வு ஏற்படுத்தலாமில்லை, மாட்டாங்க, கட்டிங் வருமானம் கொறைஞ்சிருமில்ல.....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மார்-201814:08:34 IST Report Abuse
தமிழ்வேல் ரோட்டில் நடக்குறத்துக்கு லைசென்ஸ் வாங்கிக்கணும் போல இருக்கு..
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-மார்-201813:48:12 IST Report Abuse
Pasupathi Subbian அதிவேகமாக செல்லும் , விலைமிக்க இருசக்கர வாகனங்களை , தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கும் பெற்றோர்களை தண்டிப்பது அவசியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X